For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கை நிறைய சம்பளம்.. சிங்கார சென்னையில் வேலை.. ஊரக வளர்ச்சி பணிக்கு அப்ளை செய்யுங்க!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்புகளுக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசி நாளாகும்.

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள 23 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப தகுதி பெற்ற மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.

Jobs in Tamilnadu Rural Development and panchayat Raj

அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர். இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி என்பது அவசியமாகும்.

அது போல் ஜூலை 1, 2020 அன்று 18 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2020 அறிவிப்புபடி எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படலாம்.

இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவோர் சென்னை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள். அலுவலக உதவியாளர் பணியான இந்த பணிக்கு மொத்தம் 23 காலியிடங்கள் உள்ளன.

மாசம் பொறந்தா லட்ச ரூபாய் சம்பளமாம்.. அதுவும் நம்ம சென்னையிலதான் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!மாசம் பொறந்தா லட்ச ரூபாய் சம்பளமாம்.. அதுவும் நம்ம சென்னையிலதான் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

இந்த பணிக்கு மாத ஊதியமாக ரூ 15,700 முதல் 50 ஆயிரம் வழங்கப்படும். https://tnrd.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் Recruitment for the post of Office Assistant at Directorate of Rural Development and Panchayat Raj, Chennai- 15 என்ற விளம்பரத்தை தேர்வு செய்யவும்.

இதில் அனைத்து விவரங்களும் இருக்கும். எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்.

English summary
Recruitment for the post of Office Assistant at Directorate of Rural Development and Panchayat Raj in Chennai. 23 vacancies are available.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X