For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 36 காலி பணியிடங்கள்... உடனே விண்ணப்பிக்கலாம்

Google Oneindia Tamil News

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் 36 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கு உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

விண்ணப்பங்களை http://www.tiruchendurmurugantemple.tnhrce.in/ என்ற இத்திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Jobs in Tiruchendur Arulmigu SubramaniaSwamy Temple

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 24.02.2021 மாலை 5.00மணி,

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:- இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, திருக்கோவில், திருச்செந்தூர், - 628215, தூத்துக்குடி மாவட்டம்.

பதவி: இலை விபூதி போத்தி (ஊதிய விகிதம்: 15900 - 50400)

தகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவி: திருவலகு (ஊதிய விகிதம்: 15900 - 50400)

பதவி: பலவேலை (ஊதிய விகிதம்: 15700 - 50000)

பதவி: தவில் (ஊதிய விகிதம்: 18500 - 58600)

தகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

அறநிறுவனங்கள் அல்லது அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் பயின்று தேர்ச்சிக்கான சான்று.

பதவி: தாளம் (ஊதிய விகிதம்) 18500 - 58600)

பதவி: சுருதி (ஊதிய விகிதம் 15700 - 50000)

பதவி: காயாமொழி கோயில் அர்ச்சகர் (ஊதிய விகிதம் 11600 - 36800)

தகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். அறநிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், இதர நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகம பயிற்சி பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஒரு வருடத்திற்கு குறையாமல் பயின்று தேர்ச்சிக்கான சான்று.

பதவி: காயல்பட்டிணம் கோயில் அர்ச்சகர் (ஊதிய விகிதம் 10000 - 31500)

பதவி: குலசை கோயில் அர்ச்சகர் (ஊதிய விகிதம் 11600 - 36800)

பதவி: குலசை கோயில் அத்தியான வாத்தியார் (ஊதிய விகிதம் 11600 - 36800)

பதவி: குலசை கோயில் தேவாரம் (ஊதிய விகிதம்: 11600 - 36800)

தகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். அறநிறுவனங்கள், அரசால், இதர நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலையில் பயின்று குறைந்தபட்சம் மூன்று வருடம் பயின்று தேர்ச்சிக்கான சான்று.

பதவி: குலசை கோயில் மடப்பள்ளி (ஊதிய விகிதம் 11600 - 36800)

தகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். இத்திருக்கோயில் நடைமுறை பழக்கவழக்கத்தின்படி நெய்வேத்திய மற்றும் பிரசாதங்கள் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம் உள்ளிட்ட விவரங்கள்:

பதவி: தட்டச்சர் (ஊதிய விகிதம் 18500 - 58600)

தகுதி: 1. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் SSLC தேர்ச்சி, அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும் மற்றும்

2. அரசு தொழில் நுட்ப தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை (or) தமிழில் உயர்நிலை மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை (or) ஆங்கிலத்தில் உயர்நிலை மற்றும் தமிழில் கீழ்நிலை

3. அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் Computer Application and Office Automation தேர்ச்சி பெற்றதற்கான பயிற்சி சான்று, அதற்கு இணையான சான்று.

பதவி: அலுவலக உதவியாளர் (ஊதிய விகிதம் 15900 - 50400)

தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8ம் வகுப்பு தேர்ச்சி, அதற்கு இணையான தகுதி.

பதவி: இளநிலை மின் பொறியாளர் (ஊதிய விகிதம் 35600 - 112000)

தகுதி: பொறியியலில் மின்னியல் பட்டயப்படிப்பு சான்று.

பதவி: உதவி மின் கம்பியாளர் (ஊதிய விகிதம் 16600 - 52400)

தகுதி:
1. அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அரசு தொழில்நுட்ப பள்ளியில் மின் கம்பியர் பணிக்கான சான்று

மற்றும்

2. மின்னியல் உரிமம் வழங்கும் வாரியத்தில் இருந்து ''H' சான்று

பதவி: பிளம்பர் (ஊதிய விகிதம் 15900 - 50400)

தகுதி: அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அரசு தொழில்நுட்ப பள்ளியில் குழாய் பணிக்கான சான்று மற்றும்

2. குறிப்பிட்ட பணியில் ஐந்து வருட முன் அனுபவம், பயிலுணர் தகுதி இரண்டு வருடத்திற்கான சான்று.

நிபந்தனைகள்

1. விண்ணப்பதாரர்கள் 01.02.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

3. வரிசை எண்.1 முதல் 17 பணியிடங்களுக்கு தனித்தனியாக எழுத்துத் தேர்வு / நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

4. அனைத்து பணியிடங்களுக்கான கல்வித்தகுதி மற்றும் இதர தகுதி விவரங்களை திருக்கோயில் அலுவலகத்திலும், www.tnhrce.gov.in, www.tiruchendurmurugantemple.tnhrce.in இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

5. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

6. தெய்வீகத்தாலும், இராஜீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

இவ்வாறு திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English summary
Here the details of Jobs in Tiruchendur Arulmigu SubramaniaSwamy Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X