மத்திய அரசின் தபால் துறையில் காத்திருக்கும் வேலைகள்! எழுத்துத் தேர்வு இல்லை.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: இந்தியா தபால் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தியத் தபால் துறையில் காலியாக உள்ள பணியாளர் கார் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் எழுத்துத் தேர்வுகள் எதுவும் இல்லை. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 17
பணி - Staff car driver
கோவை வட்டம் - 11 பணியிடங்கள், ஈரோடு மற்றும் சேலம் மேற்கு வட்டம் தல 2 பணியிடங்கள், நீலகிரி திருப்பூர் வட்டம் தல 1 பணியிடங்கள்
தகுதி - 10ஆம் வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமை வைத்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை - அனுபவம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும்
விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி
The Manager Mail Motor Service, Goods Shed Road, Coimbatore - 641001.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - மார்ச் 10, 2022
கூடுதல் தகவல்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_13012022_MMS_Coimbatore_Eng.pdf