தமிழ்நாடு அரசின் அட்டகாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ரூ 57 ஆயிரம் சம்பளம் - விண்ணப்பிப்பது எப்படி
சென்னை: தமிழ்நாடு பொதுச் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மருத்துவத் துறையில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மருத்துவத் துறையில் காலியாக உள்ள 174 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி - Field Assistant (கள உதவியாளர்)
மொத்த காலியிடங்கள்: 174
தகுதி: +2 முடித்திருக்க வேண்டும். மேலும், மருத்து இயக்குநரகத்தால் அங்கீரகிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் எம்எல்டி ஓராண்டு படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும், பார்வை திறன் மற்றும் உடற்தகுதி சரியாக இருக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சம்பளம் - ரூ. 18,200 முதல் ரூ 57,900 வரை வழங்கப்படும்
வயது வரம்பு - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஓசி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32
தேர்வு செய்யும் முறை - நேர்முகத் தேர்வுகள் மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும்
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கும் ஓபிசி பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ 600. மற்ற பிரிவினருக்கு ரூ 300
விண்ணப்பிக்கும் முறை: http://www.mrb.tn.gov.in/ தளத்தில் இருந்து விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - பிப்ரவரி 2, 2022
இது தொடர்பாகக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள http://www.mrb.tn.gov.in/pdf/2022/Field_Assistant_Notification_13012022.pdf என்ற தளத்திற்குச் செல்லாம்.