நல்ல சம்பளத்தில் தமிழக அரசு வேலை காத்திருக்கு.. இப்படி தான் அப்ளே செய்யனும்!! விரிவான தகவல்
சென்னை: TN e-governance agencyஇல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் சேவைகளை டிஜிட்டல் மூலம் மக்களுக்குக் கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது TN e-governance agency எனப்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை.
தற்போது இந்த தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 37
Data Analyst, Data Enginee, Lead Data Scientist, Senior Business Analyst, Project Manager, Senior Software Developer, Tech Lead - Backend Services, Data Scientist, Senior Programmer, Software Programmer உள்ளிட்ட மொத்தம் 37 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி:
ஒவ்வொரு பணியிடத்திற்கும் ஒவ்வொரு கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யும் முறை - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
கடைசி தேதி - ஜனவரி 02, 2021
இது தொடர்பாகக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள https://tnega.tn.gov.in/careers என்ற தளத்திற்குச் செல்லாம்.
அங்கு ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியான அறிவிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு பணியிடத்திற்கும் தேவையான தகுதிகள், பிரத்தியேக விண்ணப்பங்கள் உள்ளன.
விண்ணப்பிக்க https://tnega.tn.gov.in/careers
நம்ம புதுச்சேரியில்.. சூப்பரான மத்திய அரசு வேலை! +2 படித்தவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்