நம்ம திருச்சியில், இப்படியொரு வேலையா!! யார் யார் விண்ணப்பிக்கலாம்... என்ன தகுதி? முழு தகவல்!
சென்னை: திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நமது திருச்சியில் அமைந்துள்ளது தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம். மத்திய வேளாண் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம் தான் வாழை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது

இந்த தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: Project Assistant, Young Professional-I, Young Professional-II, Senior Research Fellow
தகுதி:
சம்பந்தப்பட்ட பிரிவில் விவசாயம் சார்ந்த பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளைப் படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை - நேர்முகத் தேர்வுகள் மூலம் காலியிடம் நிரப்பப்படும்
விண்ணப்பிக்கும் முறை: ஒவ்வொரு பிரிவுக்கு என தனித்தியாக விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை https://nrcb.icar.gov.in/job-opportunities.php தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து, nrcbrecruitment@gmail.com என்ற மெயில் ஐடிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - ஜனவரி 19, 2021
இது தொடர்பாகக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள https://nrcb.icar.gov.in/ என்ற தளத்திற்குச் செல்லாம்.
விண்ணப்பிக்க https://nrcb.icar.gov.in/job-opportunities.php