For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விழிப்புடன் இருங்கள்.. இந்திய ரயில்வே அமைச்சகம் வேலை தேடும் இளைஞர்களுக்கு முக்கிய அலார்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பல்வேறு மோசடிகள் நடைபெறுகிறது. எனவே விழிப்புடன் இருக்குமாறு ரயில்வே அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்வாக்கு பணம் மற்றும் தகாத முறையில் அல்லது போலி நியமன கடிதம் மூலம் இந்திய ரயில்வேயில் வேலை பெற்றுத் தருவதாக போலி வாக்குறுதி அளித்து தரகர்கள் மற்றும் வேலை மோசடியாளர்கள் பொதுமக்கள் அல்லது வேலை தேடுவோரை ஏமாற்றுவதாக பல்வேறு புகார்கள் இந்திய ரயில்வேக்கு வந்துள்ளது. பெரும்பாலான புகார்களில் மோசடியாளர்கள் தங்களுக்கு ரயில்வே வாரியம்/ ரயில்வே ஆள்சேர்ப்பு முகமைகள்(ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம், மண்டல ரயில்வே அலுவலகங்களில் அறிமுகம் இருப்பதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர். மேலும் வேலை தேடுவோரின் விண்ணப்ப கட்டணங்களை ஏமாற்றி பறிக்கும் நோக்கில் சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்களையும் உருவாக்கியுள்ளனர். ரயில்வே மருத்துவமனைகள் அல்லது ரயில்வே அலுவலகங்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Ministry of Railways has appealed to be vigilant of jobs

வேலை தேடுவோர் கவனத்திற்கு:

ரயில்வே ஆள்சேர்ப்பு முகமைகளில் ஆள்சேர்ப்பு நடைமுறையானது முற்றிலும் கணிணி மயமாக்கப்பட்டுள்ளது மற்றும் தேந்தெடுப்பு முற்றிலும்அபேட்சகர்களின் மெரிட் அடிப்படையிலானது.

ரயில்வே ஆட்சேர்ப்பு முகமைகள் (ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பிஎஸ்) ரயில்வே ஆள்சேர்ப்பு பிரிவு (ஆர்ஆர்சிஎஸ்0 ஏங்கும் ஏதேனும் ஏஜெண்ட்டுகளை ஒரு போதும் நியமிக்கவில்லை அல்லது பயிற்சி மையங்களை நடத்தவில்லை.

Ministry of Railways has appealed to be vigilant of jobs

ஆர்ஆர்பி/ ஆர்ஆர்சி அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் தேசிய நாளிதழ்கள்/ எம்ப்ளாய்மெண்ட் நியூசில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மட்டுமே உண்மையானது மற்றும் நம்பகமானது ஆகும்.

மோசடியாளர்கள் அபேட்சர்களை ஏமாற்றும் வகையில் அதே ஒலி உச்சரிப்புடன் கூடிய வலை பக்கங்கள்/ இணையதள்ஙகளை பயன்படுத்துவதால் இணையதளங்களின் எழுத்துக் கோர்வையை மிகவும் நுட்பமாக சரிபார்க்கும்படி வேலை தேடுவோர் அறிவுறுத்தப்படுகிறார்கள். புகார்கள் மற்றும் சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு 182 நம்பரை அழைக்கவும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

English summary
Various scams are taking place to buy jobs in the railways. Therefore, the Ministry of Railways has appealed to be vigilant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X