மத்திய அரசு நிறுவனத்தில் அட்டகாசமான வேலை.. யாரெல்லாம் அப்ளை செய்யலாம்?? இன்னும் சில நாட்களே உள்ளது
சென்னை: மத்திய அரசின் தேசிய வீட்டுவசதி வங்கியில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்புகளில் ஒன்று தேசிய வீட்டுவசதி வாரியம். இந்தியாவில் உள்ள அனைத்து வீட்டுவசதி நிதி நிறுவனங்களையும் இந்த அமைப்பு தான் கண்காணிக்கும்.
இந்நிலையில் தற்போது இந்த தேசிய வீட்டுவசதி வங்கியில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள் - 17
பணி வாரியாக
Assistant Manager 14
Deputy Manager 02
Regional manager 01
கல்வித் தகுதி: Assistant Manager பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் 60% மதிப்பெண்ணுடன் பட்டமும், 55% மதிப்பெண்ணுடன் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
Deputy Manager பணிக்கு எதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Finance பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Regional manager பணிக்கு எதாவது ஒரு பிரிவில் பட்டமும் Risk Management தொடர்பான பிரிவில் சான்றிதழும் தேவை. சார்ட்டர்ட் ஃபைனான்சியல் முடித்தவர்கள், சிஏ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு:
Assistant Manager பணிக்கு 30 வயத்துக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
Deputy Manager பணிக்கு 32 வயத்துக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
Regional manager பணிக்கு 45 வயத்துக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் விதிகளின்படி வயது வரம்பில் கூடுதல் தளர்வுகளும் பின்பற்றப்படும்.
தேர்வு செய்யும் முறை - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - டிசம்பர் 30, 2021
விண்ணப்பிக்கக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175. இதர பிரிவினருக்கு ரூ.850 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டும் செலுத்த வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/nhbrosmoct21/
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-16-03.pdf
விண்ணப்பிக்க
https://nhb.org.in/wp-content/uploads/2021/11/Recruitment_Advertisement_NHB_2021_Eng.pdf