For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸ் தேர்வு.. நாடார் மகாஜன சங்கத்தின் சீரிய பயிற்சியில்.. தேறிய மாணவ, மாணவியர்

Google Oneindia Tamil News

மதுரை: நாடார் மகாஜன சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட காவலர் தேர்வுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பலரும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

NMS conducts training camp for Police aspirants

நாடார் சமுதாயத்தினரின் நலனுக்காக இயங்கி வரும் நாடார் மகாஜன சங்கம் சார்பில் காவலர் பயிற்சி முகாம் ஒன்று மதுரையில் நடத்தப்பட்டது. மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில்நடந்த இந்த முகாமில், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர்.

NMS conducts training camp for Police aspirants

முகாம் மூலம் பயிற்சி பெற்றவர்களில் 23 பெண்கள் உள்ளிட்ட 110 பேர்கள் எழுத்து தேர்வில் தேர்வாகியுள்ளனர். இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை நாடார் சமுதாயப் பிரமுகர் கரிக்கோல் ராஜ் செய்து கொடுத்திருந்தார். இந்த முகாம் வெற்றிகரமாக நடைபெற உதவிய மகாஜன சங்கத்தின் இணைச்செயலாளர் ஏ.ஆனந்தகுமார், அனைத்து பனிகளையும் முன்னின்று செய்த சந்தோஷபாண்டியன், ஐசக், சேகர்பான்டியன் , மற்றும் ராஜேஷ், பயிற்சி தந்த அகாடமி ஆசிரியர் முத்துக்குமார், உடற்கல்வி இயக்குநர் குமார், மானவிகளுக்கு பயிற்சியளித்த ஆசிரியை ஜாஸ்மின் அவர்களுக்கு சங்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

NMS conducts training camp for Police aspirants
NMS conducts training camp for Police aspirants

தற்போது சங்கத்தின் சார்பில் மதுரை நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 2வது கட்ட பயிற்சி முகாம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே கலந்து கொள்ளாத மாணவ, மாணவியரும் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

NMS conducts training camp for Police aspirants

தகவல், படங்கள்: ஏவிஎஸ் மாரிமுத்து

NMS conducts training camp for Police aspirants
NMS conducts training camp for Police aspirants
English summary
NMS conducts training camp for Police aspirants in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X