
ரூ.63 ஆயிரத்தில் அரசு வேலை! தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் பணியாற்ற வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
டெல்லி: தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் பிரிவில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபருக்கு குறைந்தபட்சம் ரூ.19,900ம், அதிகபட்சமாக ரூ.63 ஆயிரம் வரை மாத சம்பளம் கிடைக்கும்.
தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் பிரிவில் பல்வேறு பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
5 வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர்! பின் அரசு பள்ளியில் உலக தர கல்வி எப்படி வரும்? அன்புமணி ராமதாஸ் சாடல்
தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் பிரிவில் மொத்தம் 79 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி என்ன?
அதன்படி எலக்ட்ரானிக்ஸ் 17, எலக்ட்ரிக்கல் 17, இன்ஸ்ட்ருமென்டேசன் 11, கம்ப்யூட்டர் 11, பிட்டர் 5, சிவில், வெல்டிங் தலா 4, மெஷினிஸ்ட் 3, மெக்கானிக், டூல் டை மேக்கர், டீசல் மெக்கானிக், டர்னர், சீட் மெட்டல், கிளாஸ் பிளவர், ஏசி தலா 1 பணியிடம் நிரப்பப்பபட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் குறிப்பிட்ட பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
அதோடு விண்ணப்பத்தாரர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயதும் , ஓபிசி பிரிவினருக்கு 3 வயதும் தளர்வு உண்டு. விண்ணப்பத்தாரர்களின் வயது 03.07.2022ம் தேதியின்படி கணக்கீடு செய்யப்படும். டிரேடு டெஸ்ட்டில் தேர்வாகும் நபர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதில் வெற்றி பெறுவோருக்கு பணி வாய்ப்பு கிடைக்கும்.

மாத சம்பளம் எவ்வளவு?
மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.19,9000 முதல் அதிகபட்சமாக ரூ.63 ஆயிரத்து 200 வரை கிடைக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.nplindia.org/index.php/recruitments/ லிங்கை கிளிக் செய்து Application Form அல்லது https://www.nplindia.org/wp-content/uploads/2022/06/Application-Form-Open.pdf இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பம் பதிவிறக்கி கொள்ளலாம். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் இணைத்து குறிப்பிட்ட தேதிக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு...
இந்த தபாலை Administration, CSIR- National Physical Laboratory, Dr. K.s. Krishnan Marg, New Delhi-110 012 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (ஜூலை) 3 ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களை https://www.nplindia.org/wp-content/uploads/2022/06/Advt-3-2022-English.pdf லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.