For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த நிறுவனங்களுக்குதான் இனி சுக்கிர திசை... குவிந்து கிடக்கும் வேலைகள்.. 50 லட்சம் வரை சம்பளம்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் ஆன்லைனுக்கு அனைத்து வணிகங்களும் மாற விரும்புவதால் அதற்கான சேவைகளை செய்து தரும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வேலைக்கு ஆள் எடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இப்போதைக்கு வேலை வாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ள முக்கியமான தொழில் என்றால் இந்த பி2பி ஸ்டார் அப் நிறுவனங்கள் தான்.
பி 2 பி ஸ்டார்ட்அப்களான சிக்ஸி, ரேபிட் டெலிவரி, ரேஸர்பே, கேஷ்ஃப்ரீ, சிம்பிளிலார்ன், இன்ஸ்டாமோஜோ மற்றும் ஃபோன்பே போன்ற நிறுவனங்களில் அதிகம் பேரை வேலைக்கு எடுக்க விரும்புகின்றன.

தயாரிப்பு மேம்பாடு, (product development), வணிக செயல்பாடுகள்( business operations), தொழில்நுட்பம் (technology) , பகுப்பாய்வு (analytics) , விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் (sales and marketing) போன்ற பிரிவில் சுமார் 1,500 வேலைவாய்ப்புகள் உள்ளன. சம்பளம் ஆண்டுக்கு ரூ .10 லட்சத்தில் தொடங்கி ரூ .40-50 லட்சம் வரை தர தயாராக உள்ளன.

வேலைகள் காலி

வேலைகள் காலி

ஓயோ, க்யூர்ஃபிட், ஸ்விக்கி மற்றும் பவுன்ஸ் போன்ற நிறுவனங்கள் அலுவலக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் இந்த நேரத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகம் பேரை வேலைக்கு சேர்க்க விரும்புகின்றன. இதற்கு காரணம் கொரோனா. கொரோனா தொற்று மற்றும் அதனால் போடப்பட்ட லாக்டவுனால், எல்லா தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பணியாளர்கள் தேவை

பணியாளர்கள் தேவை

ஆனால் ஃபைன்டெக் (fintech), லாஜிஸ்டிக்ஸ்(logistics) மற்றும் எடெக் (edtech) ஆகிய பணிகளை மேற்கொள்ளும் பி 2 பி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை பாதிக்கவில்லை என்கிறார்கள் நிபுணர்கள். இப்போது தான் அந்நிறுவனங்களுக்கு அதிகம் பேர் தேவைப்படுகிறார்கள். எனவே தங்கள் தொழில்களில் வேகத்தை அதிகரிப்பதற்காக பணியாளர்களை அதிகரிக்க விரும்புகின்றன.

சிஸ்யில் புதிய வேலைகள்

சிஸ்யில் புதிய வேலைகள்

புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள், என்.பி.எஃப்.சி மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு டிஜிட்டல் தீர்வுகளை வழங்கும் பெங்களூரை தளமாகக் கொண்ட சிக்ஸி, அதன் தயாரிப்பு, தகவல் பாதுகாப்பு மற்றும் விற்பனைக் குழுக்களில் தேவைகளைப் பூர்த்தி செய்ய 60 பேரை நியமிக்க உள்ளது. இந்த தகவலை அந்த நிறுவனத்தின் கோஃபவுண்டர் அங்கித் ரத்தன் தெரிவித்தார்.

 லாஜிஸ்டிக்ஸ் துறை

லாஜிஸ்டிக்ஸ் துறை

இதனிடையேவாடிக்கையாளர் சேவை, கணக்குகள், வணிக மேம்பாடு, செயல்பாடுகள் மற்றும் விநியோகம் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அடுத்த ஒரே ஆண்டில் 500 ஊழியர்களை நியமிக்க லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான ரேபிட் டெலிவரி திட்டமிட்டுள்ளது. எடெக் நிறுவனம் தற்போது நல்ல வளர்ச்சி அடைந்து வருவதால் கூடுதலாக 300 பேரை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.

கேஷ்ஃப்ரீ நிறுவனம்

கேஷ்ஃப்ரீ நிறுவனம்

இன்ஸ்டாமோஜோ தனது தயாரிப்பு, பொறியியல், சந்தைப்படுத்தல் மற்றும் ஆதரவு செயல்பாடுகளை விரிவாக்க அதிகம் பேரை நியமிக்க பார்க்கிறது. இதேபோல் ​​ரேஸர்பே 100 பேரை பணியமர்த்த விரும்புகிறது, ஆனால் முதன்மையாக தயாரிப்பு மற்றும் பொறியியல் குழு தான் அவர்களுக்கு தேவையாம். கேஷ்ஃப்ரீ தனது தொழில்நுட்ப மற்றும் வணிக நடவடிக்கைக் குழுக்களுக்காக 70 ஊழியர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் பணியமர்த்த விரும்புகிறது. இந்த தகவலை அதன் கோஃபவுண்டர் ரீஜு தத்தா தெரிவித்தார்.

என்ன வேலைகள்

என்ன வேலைகள்

ஃபோன்பே நிறுவனம் புதிததாக 360 பேரை வேலைக்கு எடுத்து அதன் எண்ணிக்கையை 1,800 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது, டெக்னாலஜி, அனாலிசஸ் மற்றும் ப்ரொடக்சன் மற்றும் சட்டம், நிதி மற்றும் மார்க்கெட்டிங் போன்றவற்றில் அதிகம் பேரை நியமிக்க விரும்புகிறது லாஜிஸ்டிக்ஸ் சாஸ் தளமான ஃபார்இ, அதன் ஆர் & டி, தயாரிப்பு மேலாண்மை மற்றும் தொழில்முறை சேவை குழுக்களுக்காக அடுத்த ஆண்டில் 100 நபர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது.. அமெரிக்க மற்றும் கோஃபவுண்டர் குஷால் நஹாட்டா கூறினார். தற்போதைய நிலையில் வணிக நிறுவனங்கள் தங்கள் தொழிலை ஆன்லைன் மயமாக்க விரும்புகின்றன. எனவே அந்த துறையில் ஈடுபடும் நிறுவனங்களின் எதிர்காலம்,அதில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

English summary
B2B startups like Signzy, Rapid Delivery, Razorpay, Cashfree, Simplilearn, Instamojo and PhonePe have nearly 1,500 job openings
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X