For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்ம புதுச்சேரியில்... இந்த சம்பளத்துக்கு இப்படி வேலைகளா... மிஸ் பண்ணாதீங்க

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியிலுள்ள என்ஐடி பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுச்சேரியிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள நிர்வாக பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

Puducherry NIT jobs requirements for various posts

என்ஐடி பல்கலைக்கழகத்தில் நிர்வாக பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் கண்காணிப்பாளர், இளைய உதவியாளர், மூத்த உதவியாளர், அலுவலக உதவியாளர் என மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் CSE, சிவில் மற்றும் ECE உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும். இந்தப் பணிகளுக்கு மாத சம்பளமாக ரூ.20,200 முதல் ரூ. 39,100 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : விரும்பும் பணிகளுக்கான விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://nitpy.ac.in/ என்ற தளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.03.2021ஆம் தேதிக்குள் பல்கலைகழகத்திற்கு அனுப்ப வேண்டும். அதேபோல அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 10.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி : "The Registrar (i/c), NIT Puducherry, Thiruvettakudy, Karaikal - 609 609"

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், தனித் தனியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்றும் தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

கூடுதல் தகவல்களுக்கு

English summary
New jobs announcement Puducherry NIT.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X