For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆங்கிலம், தமிழ் டைப்பிங் தெரியுமா.. 87 காலி இடங்கள் இருக்கு.. உடனே அப்ளை பண்ணுங்கப்பா!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் காலியாக உள்ள 162 இடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 22 ஆம் தேதி கடைசி நாள்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஜூனியர் அசிஸ்டன்ட், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Recruitment in Tamilnadu Veterinary Medical Science University

இந்த பணிகளுக்கு மொத்தம் 162 காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி டிசம்பர் 22 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னையில் பணியிடம் வழங்கப்படும். இந்த பதவிகளுக்கு ஊதியமாக ரூ 19,500 முதல் ரூ 62,400 வரை வழங்கப்படுகிறது. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 75 இடங்களும் டைப்பிஸ்ட் பணிக்கு 87 இடங்களும் என மொத்தம் 162 இடங்கள் உள்ளன.

பாஜக எம்பிக்கள் நொறுக்குத் தீனி தின்னத்தான் லாயக்கி.. காங்கிரஸ் கடும் விமர்சனம்பாஜக எம்பிக்கள் நொறுக்குத் தீனி தின்னத்தான் லாயக்கி.. காங்கிரஸ் கடும் விமர்சனம்

ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியும் டைப்பிஸ்ட் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம், தமிழ் ஹையர் முடித்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் ஆங்கிலம் லோயர் மற்றும் தமிழ் ஹையர் அல்லது ஆங்கிலம் ஹையர் மற்றும் தமிழ் லோயர் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயதாக ஓசி பிரிவினருக்கு 30 வயதும் பிசி, பிசி முஸ்லிம், எம்பிசி, டிசி பிரிவினருக்கு 32 வயதும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ 500 ஆகும். மேலும் விவரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

English summary
Recruitment in Tamilnadu Veterinary Medical Science University. There are 162 vacancies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X