For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்யாவில் முழு கல்வி உதவித்தொகையுடன் உயர்கல்வி பயில அருமையான வாய்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் (ஆர்.சி.எஸ்.சி), இந்திய மாணவர்களை ரஷ்ய அரசாங்க உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க அன்புடன் அழைக்கிறது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ரஷ்யாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் பி.எச்.டி பட்டங்களுக்கு முழு நிதியுதவி பெற முடியும்.

 Russia offers Fully Funded Higher Education for Indian students

https://russia.study/en என்ற இணையதளத்தில் ஜனவரி 20, 2021 முதல் இதற்கு விண்ணபிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும் https://russia.study/en வலைத்தளத்தின் மூலம் பதிவு செய்து தேவையான விவரங்களை நிரப்பலாம், கல்வித் திட்டத்தையும் அவர்கள் விண்ணப்பிக்க விரும்பும் பல்கலைக்கழகங்களையும் தேர்வு செய்யலாம்.

பதிவு செய்வதற்கான கடைசி தேதி 20 பிப்ரவரி 2021 ஆகும், அதன் பிறகு புதிய விண்ணப்பங்கள் எதுவும் ஏற்கப்படாது. ரஷ்யாவில் கல்வி கற்க இந்த வாய்ப்பைப் பெற மாணவர்கள் விரைவாக விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

ரஷ்ய அரசாங்க உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள அனைவருக்கும், முன்னணி ரஷ்ய பல்கலைக்கழகங்களான மாஸ்கோ பொறியியல் இயற்பியல் நிறுவனம் (எம்.இ.பி.ஐ) மற்றும் தெற்கு ஃபெடரல் யுனிவர்ஸ்டி ஆகியவற்றின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இலவச வெபினாரை சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் (ஆர்.சி.எஸ்.சி) நடத்துகிறது.

மானியம், விண்ணப்பத்தின் செயல்முறை, தேர்வு நிலைகள், படிப்புகள் போன்றவை பற்றி வெபினார் 2021 பிப்ரவரி 12 அன்று மாலை 5:00 மணிக்கு ஜூம் வழியாக நடைபெறும். ஜூம் சந்திப்பு உள்நுழைவு பின்வருமாறு-

Meeting ID: 834 0432 5459

Passcode: russedu

உதவித்தொகை திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, [email protected] க்கு எழுதுங்கள் அல்லது + 91-44- 24990050 என்ற எண்ணில் அழைக்கலாம்.

English summary
Russian Center of Science and Culture (RCSC), Chennai invites Indian students to apply for the Russian government scholarship program, through which students can avail a fully funded education in Russia’s best Universities for Bachelor’s, Master’s and PhD degrees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X