10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு.. தமிழக மீன்வளத்துறையில் வேலை.. நல்ல சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: தமிழக மீன்வளத் துறை 4 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Netmender மற்றும் Fitter ஆகிய பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் மிக்கவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Netmender பணியிடத்துக்கு 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். Fitter பணியிடத்துக்கு ITI முடித்திருக்க வேண்டும்.
குட் நியூஸ்.. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Netmender பணியிடத்துக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18-25 ஆகும். Fitter பணியிடத்துக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18- 30 ஆகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 06.11.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மண்டல இயக்குனர், இந்திய மீன்வள ஆய்வு, மீன்பிடி துறைமுக வளாகம், ராயபுரம், சென்னை- 600013 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

எழுத்து தேர்வு
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுவர்கள். Netmender பணியிடத்துக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.18,000 - ரூ.56,900 வரையும், Fitter பணியிடத்துக்கு ரூ.19,900 - ரூ.63,200 வரையிலும் சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு
இதேபோல் திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் Project Assistant பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க M.E, M.Tech முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 35 ஆகும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.

கடைசி நாள்
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30.10.2021 ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Assistant Professor, Department of Computer Science and Engineering, National Institute of Technology, Tiruchirappalli - 620015 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் விவரங்ககளை thirumathikartnitt@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும்.

மிகவும் அவசியம்
மேலும் விவரங்களை அறிய www.nitt.edu என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும்போது தேசிய தொழிநுட்பக் கழக அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடுவது மிகவும் அவசியமாகும்.