• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

TNPSC தேர்வுக்கு ரெடியாகுறீங்களா?.. உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு.. இதை படிங்க.. மிஸ் பண்ணாதீங்க!

Google Oneindia Tamil News

சென்னை: TNPSC நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு இணையவழி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(TNPSC) நடத்தப்படும் குரூப் 2 தேர்விற்கு 05.07.2021 திங்கட்கிழமை முதல் கட்டமில்லால் இணையவழி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

Tamil Nadu goverment conducts online classes for students preparing for the examinations conducted by TNPSC

தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும், platform - cisco webex இணையவழி மூலமாகவோ அல்லது cisco app மூலமாக இணையவழி பயிற்சியில் நேரடியாகவும் இணையலாம்.

* பயிற்சியின்போது பாடக்குறிப்புகள் வழங்கப்படும்
* மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்
* அரசு அலுவலர்களை கொண்டு மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தப்படும்

இந்த பயிற்சியில் பங்கு பெற QR code மற்றும் மேலும் தகவலுக்கு அதற்கான வாட்சப் குரூப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான QR code ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு QR code இடம்பெற்றுள்ள அறிக்கை இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.

எனவே TNPSC நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், தமிழ்நாடு அரசின் இந்த கட்டணமில்லா இணைய வழி வகுப்பினை பயன்படுத்தி பயன் பெறலாம். இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

English summary
The Government of Tamil Nadu conducts online classes for students preparing for the examinations conducted by TNPSC
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X