For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பழங்குடியினர் நல பள்ளிகளில் ஆசிரியர் காலிபணியிடங்கள்.. சூப்பர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பழங்குடியினர் நல பள்ளிகளில் 198 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

பழங்குடியினர் நல மாநில இயக்குநர் வி.சி.ராகுல், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

Teacher posts in tribal welfare schools in Tamil Nadu: Super announcement

அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில் காலியாகவுள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் தொகுப்பூதியத்தில் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 48 இடங்கள், பட்டதாரி ஆசிரியர் பணியில் 117 இடங்கள், இடைநிலை ஆசிரியர் பணியில் 33 இடங்கள் என 198 இடங்கள் காலியாக உள்ளன.

தமிழக ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சியில் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் திடீரென ரத்து!தமிழக ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சியில் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் திடீரென ரத்து!

அதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.8 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9 ஆயிரம், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். தங்கள் மாவட்டத்தில் இயங்கும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, வகுப்பு நடத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

English summary
In Tamil Nadu, there are 198 vacancies in tribal welfare schools in 13 districts including Dharmapuri, Dindigul, Erode and Kanyakumari. The government has decided to fill these.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X