For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2021ல் ஐடி துறையில் அதிக டிமாண்ட் உள்ள வேலைகள்.. இந்த நான்குதான்!

Google Oneindia Tamil News

சென்னை: 2020 ஆம் ஆண்டில், வேலைச் சந்தை மிகப்பெரிய மாற்றங்களை கண்டது, வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறை என்பது புதிய மற்றும இயல்பான விஷயமாக மாறி உள்ளது. இந்த முறை பலரது வேலைகளை பறித்துள்ளது என்றாலும் மறுபுறம், சிறந்த தொழில்நுட்ப திறமைகள் உள்ளவர்களை அதிகம் ஈர்க்கிறது என்பதை மறுக்க முடியாது, பாதுகாப்பு மற்றும் தரவு போன்ற போன்ற ஐடி துறையின் சந்தையில் அதிக அளவு திறன் உள்ள பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

இந்தியாவில் என்.டி.டி லிமிடெட் நிறுவனத்தின் மூத்த இயக்குநர் கே.என்.முரளி இதுபற்றி கூறுகையில், "2021 ஆம் ஆண்டில் AI மற்றும் இயந்திர கற்றல் பொறியாளர்கள் மற்றும் ஆட்டோமேஷன் துறையில் அதிக நிபுணத்துவம் உள்ளவர்கள் கவனம் பெறுவார்கள்.

எல்லா நிறுவனங்களுமே ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் தரவைச் சேகரித்து, முடிவெடுப்பதற்கு தரவை நம்பியிருப்பதால்- தரவு அறிவியல் (Data Science) மற்றும் தரவு ஆய்வுகளில் (Data Analysts) வலுவான திறன்களைக் கொண்ட நிபுணர்களை பணியமர்த்துவது மிகவும் முக்கியமானதாகிவிட்டது. ஏனெனில் தரவைச் சேகரித்து (தகவலை சேகரித்தல்) சேமித்து, ஒழுங்கமைத்து, அதை பகுப்பாய்வு செய்வது என்பது முக்கியமான பிசினஸ் முடிவுகளை எடுக்க முக்கியமானது" என்றார்.

வணிக நிறுவனங்கள்

வணிக நிறுவனங்கள்

எனவே மேல சொன்ன விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு, தொழில்நுட்ப உலகின் சந்தையை ஆளப்போகிற முக்கிய வேலைகளை இப்போது பார்ப்போம்.

1. தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு (Information Security Personal)

தகவல், தரவு, நெட்வொர்க்கிங் மற்றும் கணினி பாதுகாப்பு வல்லுநர்கள் வொர்க் புறம் ஹோம் மாடல் வேலைமுறைக்கு அதிகம் தேவைப்படுகிறார்கள். எந்தவொரு நிறுவன தகவல் தொழில்நுட்ப முயற்சிகளுக்கும் சாத்தியமான அச்சுறுத்தல்களைத் தடுக்க வணிக நிறுவனங்கள் பாதுகாப்பு நிபுணர்களை பரவலாக நம்பியுள்ளன. சிறந்த பாதுகாப்வை வழங்கக்கூடிய முடிவுகளை எடுக்கத் தெரிந்தவர்கள் வேலை பெறலாம்.

டேட்டா நிர்வாகி

டேட்டா நிர்வாகி

2. டேட்டபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் (Database Administrator)

தற்போதைய சந்தை போக்கில் அதன் உச்சத்தில் இருக்கும் மற்றொரு முக்கிய வேலை தரவுத்தள நிர்வாகி (Database Administrator), இவர் தான் வரும் அனைத்து டேட்டாவையும் நிர்வகிக்கிறார். டேட்டாக்களை வாங்கி, பாதுகாத்து சேமிப்பு, பிரதி எடுத்து வைத்து பகிர்ந்து மற்றும் காப்புப்பிரதிகளை உருவாக்க திறமையானவர்கள் தேவைப்படுகிறார்கள்.

கணினி ஆய்வாளர்

கணினி ஆய்வாளர்

3. கணினி ஆய்வாளர் ( System Analyst)

சரியான வடிவமைப்பு நுட்பங்கள் இருந்தால் தான் இன்றைக்கு ஒரு நிறுவனத்தின் பிசினஸ் சிறப்பாக இருக்கவும் சிக்கல்களைத் தீர்க்கவும் உதவும். அதை கணினி ஆய்வாளர்கள் (System Analyst) கம்ப்யூட்டர்களை சரியாக நிர்வகித்தால் மட்டுமே சாத்தியம். சிக்கலான சூழலை சமாளிக்க இவர்களின் திறன் அதிகம் தேவையாகும்

DevOps Engineer

DevOps Engineer

4. டெவொப்ஸ் பொறியாளர் (DevOps Engineer)

ஸ்கிரிப்டிங், கோடிங் முறை மற்றும் செயல்முறைகள் மேம்பாடு (scripting, coding, and processes development)ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் டெவொப்ஸ் முதலிடத்தில் கருதப்படுகிறது. அதிக வேலைகளை வழங்குகிறது, ஐடி உள்கட்டமைப்பு, மானிட்டர் செயல்திறன் மற்றும் செயல்முறை மேம்பாடு (IT infrastructure, monitor performance, and process development) போன்ற முக்கிய பணிகளுக்கு டெவொப்ஸ் பொறியாளர்கள் முக்கியமானவர்கள் ஆவர்.

English summary
Top in-demand tech jobs for 2021 : , AI and Machine Learning Engineers will continue to be sought after as the focus on automation widens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X