For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா குடிநீர் பாட்டில்ல இனி என்ன பெயர் இருக்கும்?

By Veera Kumar
|

சென்னை: முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஜெயலலிதா முதல்வராகவும், அதிமுகவும் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தவர். அவர், ஆட்சியில் அரசே குடிநீர் பாட்டில்கள் விற்பனையை ஆரம்பித்தது. அதற்கு 'அம்மா' குடிநீர் என பெயர் சூட்டப்பட்டது. அம்மா பெயரில் 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் விற்பனை சக்கைபோடு போட்டு வருகிறது.

Joke: Government may introduce Chinnamma water bottle

இதுபற்றி ராமுவும், சோமுவும் என்ன பேசிக்கொள்கிறார்கள் கேளுங்கள்:

ராமு: அண்ணே.., அம்மா குடிநீர் திட்டத்த அரசு நிறுத்திருமான்ணே.

சோமு: அட பேரிக்கா மண்டையா ஏன்டா அப்படி சொல்ற.

ராமு: இனிமே எல்லாமே சின்னம்மாதாண்ணே.. அப்புறம் எப்படி அம்மா குடிநீர் பாட்டில சப்ளை பண்ணுவாங்க?

சோமு: அட வண்டுருட்டான் தலையா, அதுக்கென்னடா. அர லிட்டர் தண்ணி பாட்டில அறிமுகம் செஞ்சா போச்சி.

ராமு: புரியிற மாதிரி சொல்லுங்கண்ணே.

சோமு: ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீருக்கு பெயரு அம்மா குடிநீருன்னா, அர லிட்டர் தண்ணி பாட்டில் பேரு சின்னம்மான்னுதானடா வைக்க முடியும். அதானடா உலக நடப்பு.

ராமு: அக்காங்ணே.

English summary
Government may introduce Chinnamma water bottle, a joke going viral in the social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X