India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜோக்ஸ் - மாணவனிடம் சிக்கி சின்னாபின்னமான ஆசிரியர்

Google Oneindia Tamil News

பரபரப்புகளும், சோகங்களும், இலக்குகளும், மன அழுத்தங்களும் நிறைந்த இந்த உலகத்தில் நம் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சிரிப்பு முக்கியம். அதை ஏற்படுத்தும் நகைச்சுவையைதான் இந்த ஜோக்ஸ் தொகுப்பின் மூலம் நாம் வழங்குகிறோம்.

கணக்கு வாத்தியார்: (மாணவனிடம்) ராமு இங்க வா... நான் உன்கிட்ட முதல்ல 2 பேனா கொடுக்கிறேன். அடுத்தது திரும்பவும் 2 பேனா கொடுக்கிறேன். அப்டின்னா உன்கிட்ட இப்ப எத்தனை பேனா மொத்தம் இருக்கும்?

ராமு: ஐந்து பேனா இருக்குது சார்.

கணக்கு வாத்தியார்: நான் சொன்னத ஒழுங்க கவனிச்சியா இல்லையா? முதல்ல 2 பேனா கொடுத்தேன். அப்றம் மீண்டும் 2 பேனா தந்தேன். இப்ப உன்கிட்ட எத்தனை பேனா இருக்கு? கரெக்டா சொல்லு பார்ப்போம்...

Jokes - Maths teacher tired by students answer

ராமு: இப்பவும் 5 பேனாதான் சார்..

கணக்கு வாத்தியார்: (கடுப்புடன்) அடிவாங்கப்போற.. சரி உன் வழிக்கே வரேன். முதல்ல 2 சாக்லேட் கொடுக்கிறேன் அடுத்தது திரும்பவும் 2 சாக்லேட் கொடுக்கிறேன். அப்டின்னா உன்கிட்ட இப்ப எத்தனை சாக்லேட் இருக்கும்?

ராமு: 4 சாக்லேட்

கணக்கு வாத்தியார்: குட் பாய்.. இப்ப திரும்பவும் வரேன்.. நான் உன்கிட்ட 2 பேனா கொடுக்கிறேன். அடுத்தது திரும்பவும் வேற 2 பேனாக்கள தரேன். அப்டின்னா இப்ப எத்தனை பேனா மொத்தமா இருக்குது?

ராமு: 4 தான் சார்..

கணக்கு வாத்தியார்: அடேய் ஏன்டா உசுற வாங்குற.. சாக்லேட் மட்டும் 4 வருது, பேனா எப்டிடா 5 வரும்?

ராமு: சார், என் கிட்ட ஏற்கனவே ஒரு பேனா இருந்ததால ஐந்துன்னு சொன்னேன். சாக்லேட் எதுவும் இல்லாததால 4 அப்டின்னு சொன்னேன்.

கணக்கு வாத்தியார்: சொல்றதுக்கு ஒன்னுமில்ல.. கெளம்பு...

ஜோக்ஸ் - பவர் கட்டால் பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளருக்கு வந்த ஐடியா! ஜோக்ஸ் - பவர் கட்டால் பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளருக்கு வந்த ஐடியா!

English summary
Jokes - Maths teacher tired by student's answer: பரபரப்புகளும், சோகங்களும், இலக்குகள், மன அழுத்தங்களும் நிறைந்த இந்த உலகத்தில் நம் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சிரிப்பு முக்கியம். அதை ஏற்படுத்தும் நகைச்சுவையை தான் இந்த ஜோக்ஸ் தொகுப்பின் மூலம் நாம் வழங்குகிறோம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X