For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹா.. அக்காவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சர் யாருய்யா.. வைரலாகும் "பொண்டாட்டி கணக்கு"!

|

சென்னை: வாட்ஸ் ஆப் பதிவுகள் அத்தனையையும் "ஹம்பக்" என்று சொல்லி ஒதுக்கி விட முடியாது.. சில நேரம் செம காமெடியான பதிவுகளையும் பார்க்க முடியும்.

காலங்கார்த்தால எழுந்து, கக்கூஸில் போய் உட்காரும் நேரம் பார்த்து "குட்மார்னிங்.. உன் வாழ்க்கை உன் கையில்" என்று வரும் டைமிங் மெசேஜ்களைத் தாண்டி நம்மை கலகலன்னு சிரிக்க + யோசிக்க வைக்கும் காமெடி பதிவுகளைப் பார்க்கும்போது சற்றே ரிலாக்ஸ் ஆகிறது மனசு.

பல நேரங்களில் நாம் வாட்ஸ் ஆப்பில் வருவதை மேலோட்டமாக பார்த்து விட்டு கடந்து விடுகிறோம். சில தகவல்கள் சீரியஸாக இருக்கும். சிலது சமூக அக்கறையுடன் கூடியதாக இருக்கும். சில கருத்துக்கள் கடுப்படிக்கும். சிலவற்றைப் பார்த்ததுமே சிரிக்க வைத்து தவிடும். அந்த வகையில் நமது கண்ணில் பட்ட மெசேஜ் இது. படித்துப் பார்த்தபோது காமெடியாக இருந்தது.. மறுபக்கம் எப்படி உட்கார்ந்து யோசிச்சுருக்காங்க பாரு என்றும் ஆச்சரியம் வந்தது.

whats app joke on husband and wife

அப்படிப்பட்ட ஜோக்தான் இது.. நீங்களும் படிங்க..

கணவன் தன்மனைவியிடம் ஒருமுறை 250 கடன் வாங்கினான்.

சில நாட்கள் கழித்து மறுபடியும் இன்னுமொரு 250 ரூபாய் வாங்கிக்கொண்டான்

சிலநாட்கள் சென்றபின் தன் கணவனின் மணிப்பர்ஸில் பணம் இருப்பதைப் பார்த்த மனைவி தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டாள்.

மனைவியிடம்.. நான் உனக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று எதார்த்தமாகக் கேட்டான் கணவன்.

மனைவி சொன்னாள் ரூபாய் 4100 தரவேண்டும் என்று...... அதெப்படி என்று மண்டை குழம்பிப் போனான் கணவன். திரும்பத் திரும்பக் கேட்டும் அதே தொகையேயே சொன்னார் மனைவி.

எங்கே கணக்கு சொல்லு என்று கணவன் திரும்பத் திரும்பக் கேட்டதால் மனைவி கொடுத்த கணக்கு இதுதான்:

Rs. 2 5 0

Rs. 2 5 0

------------------

Rs. 4 10 0

------------------

ஆக மொத்தம் ரூபாய் 4100.00

அப்படியே மயங்கிச் சரிந்தான் கணவன். இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறான்... தன் மனைவிக்கு கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சரையும்...

படித்த பள்ளிக்கூடம் எது என்பதையும்..

நீதி: : : ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்!

நல்லாருக்குல்ல.. இதே சிரிப்போடு இந்த நாளை இனிய நாளாக்குங்க ஓடுங்க ஓடுங்க!

English summary
This is a whats app joke on husband and wife and just for laugh, enjoy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X