For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒலிம்பிக்கிற்காக மத்திய அரசு செய்த 100 கோடி செலவு... வாட்ஸ் அப்பில் வலம் வரும் 'கலக்கல்' கணக்கு

Google Oneindia Tamil News

சென்னை: ரியோ ஒலிம்பிக்கில் அதிக வீரர்கள் கலந்து கொண்ட போதும், இரண்டு பதக்கங்களை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது இந்தியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் போதிய கவனிப்பின்மையே விளையாட்டு வீரர்களின் தோல்விகளுக்குக் காரணம் என்பது பரவலாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டு. ஆனால், இது ஒருபுறம் இருக்க, ரியோ ஒலிம்பிக்கிற்காக ரூ. 100 கோடி செலவு செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பை கிண்டல் செய்து வாட்ஸ் அப்பில் ஜோக் ஒன்று உலா வருகிறது.

Whats app joke on Rio olympics

இதோ, அது உங்களுக்காக...

ஒலிம்பிக் செலவு 100 கோடி: மத்திய அரசு

மக்கள்: செலவான நூறு கோடிக்கும் எங்களுக்கு கணக்கு வேணும்..

மத்திய அரசு: கணக்கு தானே வேணும் சொல்றேன் கால்குலேட்டரை கையில எடுத்துக்க..

பிரேசில் போக வர்ற பிளைட்டுக்கு பெட்ரோல் போட்ட செலவு 25 கோடி..

வீரர்கள், வீராங்கனைகளுக்கு வேர்வை தொடைக்கிற துணி வாங்குன செலவு 25 கோடி..

ஜெயிச்சி வாங்கிட்டு வந்த வெள்ளி, வெண்கலப்பதக்கங்களுக்கு நம்ம ஊரு ஏர்போர்ட்ல வரி கட்டுன வகையில ஒரு 42 லட்சம்..

இதுவரைக்கும் எவ்வளவு வந்துருக்கு?

மக்கள்: 50கோடியே 42லட்சம்..

மத்திய அரசு: பயிற்சி எடுக்க சிந்துக்கு பந்து வாங்குன செலவு ஒரு 10 கோடி..

வீரர்கள், வீராங்கனைகளுக்கான ரூம் வாடகை, சாப்பாடு செலவு, டீ, காபி செலவு ஒரு 7 கோடியே 75 லட்சம்..

பிளைட் ஓட்டிட்டு வந்த பைலட்டுக ரென்டு பேருக்கும் டிரைவர் பேட்டா, டிப்ஸ் கொடுத்த வகையில ஒரு 25 லட்சம்..

ஒலிம்பிக் கிரவுண்டுல கூட்டத்துக்கு நடுவுல உக்காந்து கொடி காட்டுன ஆளுகளுக்கு செலவு 4 கோடி..

வீரர்கள், வீராங்கனைகளுக்கு கோட்டு தச்சது, இதர துணி மணி எடுத்தது, டெய்லருக்கு தையல் கூலி உள்பட 20 கோடி,

பிரேசில் போற வழியில பிளைட்டோட ரென்டு டயர் பஞ்சராகி அதை பஞ்சர் ஒட்டி ஸ்டெப்ணி மாத்துன வகையில பஞ்சர்கடை பாண்டிக்கு 25 லட்சம்..

பிளைட்டு பறந்து போன வழி நெடுக டோல்கேட் வரி கட்டுன செலவு 1கோடியே 75 லட்சம்..

விளையாட்டுக்கு தேவையான தட்டு முட்டு சாமான், தளவாட பொருட்கள், குளிர் பானங்கள் மற்றும் இதர சில்லறை செலவுகள் ஒரு 8 கோடி..

மொத்த டோட்டல் எவ்வளவு வருது?

மக்கள்: 102 கோடியே 42லட்சம்..

மத்திய அரசு: ஆக ஒலிம்பிக்குக்கு செலவான தொகை 102 கோடியே 42லட்சம், இப்ப பற்றாக்குறை 2கோடியே 42லட்சம் வருது..

அந்த பற்றாக்குறை 2கோடியே 42லட்சத்தை ஈடு கட்டனும்னா பெட்ரோல், டீசல் விலைய லிட்டருக்கு மினிமம் 50காசாவது ஏத்தி ஆகனும் உங்களுக்கு எப்புடி வசதி

மக்கள்: நாங்க கணக்கே கேக்கல தெய்வமே நீங்க நடத்துங்கய்யா...

English summary
A joke about Rio olympics is viral now in Whatsapp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X