For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேப்டன் பதவியில் இருந்து டோணி விலக காரணம் என்ன தெரியுமா?

ஒருநாள், டி 20 கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் டோணி. இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பலரும் யோசித்துக்கொண்டிருக்கின்றனர்.

By Mayura Akilan
|

சென்னை: பைரவா படத்தில் விஜய் அடித்த ஷாட் இப்போது பரபரப்பாக பேசி வருகின்றனர். இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்கள? இரண்டையும் தொடர்பு படுத்து பேஸ்புக்கில் கலந்து கட்டி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார் சமூகவலைத்தளவாசி பொம்மையா முருகன். நீங்களும் படிங்க

Why Dhoni resigns his post?

நிருபர் :என்னங்க சார் திடீர்னு இப்படி ஒரு ராஜினாமா முடிவ எடுத்துட்டீங்க...?

டோணி : அவசியம்னு தோனிச்சி ராஜினாமா பண்ணிட்டேன்...

நிருபர் : அப்படி என்ன சார் அவசியம்....

டோணி: நம்மை விட ஒரு திறமையான ஒரு வீரர் உருவாயிருக்கும் போது அதுக்கு தடையா நான் இருக்கக் கூடாதுல்ல... அவர் அடிச்ச அந்த ஒரு ஷாட் என் கண்ணுக்குள்ளயே நிக்குது....

நிருபர் : உங்களை விட திறமையான வீரரா... ? யாரு கோலிய சொல்றீங்களா...? அவர்தான் ஏற்கனவே உங்க தலமையின் கீழ விளையாண்டவர்தானே...?

டோணி: நான் அவர சொல்லல...

நிருபர் : பின்ன... அஸ்வின சொல்றீங்களா... அவரும் உங்க தலமைல விளையாண்டவரு தானே...

டோணி : அய்யோ நான் அவர சொல்லல...

நிருபர் : பின்ன...!?

டோணி : விஜய்...

நிருபர் : முரளி விஜய்யா...!!!!!???

டோணி : ஆக்டர் விஜய்...

நிருபர் : ஆக்டர் விஜய்....???

டோணி: ஆமா... நேத்து தான் அவரோட பைரவா டிரைலர் பாத்தேன்... அந்த ஒத்த கால தூக்கிட்டு பால அடிக்கிற அந்த ஷாட் சான்ஸே இல்ல.... இப்படி ஒரு திறமையானவர அணியில சேக்கலாம்னா அணி ஏற்கனவே ஹவுஸ்புல்...சரி நம்ம இடத்த விட்டுக் கொடுத்துடலாம்னு முதல்காரியமா நானே என்னோட கேப்டன் பதவிய ராஜினாமா பண்ணிட்டேன் நாளைக்கு ப்ளேயிங் 11லருத்தும் விலகிடுவேன்... மார்க் மை வேர்ட்ஸ்... 2019 வேர்ல்ட் கப்ல அந்த யங் பாய்தான் பிளேயர் ஆப்தி சீரிஸ்... தம்பி விஜய் பிளேயிங் 11க்கு வரலாம் வா வரலாம் வா...

நிருபர் : @#$%&*@%

English summary
A joke roundup to the Face book and Whatsapp for Vijay cricket shot, and Dhoni quit captain post in One day match.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X