For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊரடங்கு மட்டும் நீட்டிக்கப்பட்டால்.. மனைவியின் கண்டிசன்களை தாங்க முடியல.. உங்க நிலைமை அதோ கதி தான்!

கொரோனா ஊரடங்கால் வேலைபளு அதிகரித்துள்ள நிலையில் சில முக்கிய கண்டிசன்களை மனைவிகள் விதித்திருப்பதாக ஒரு ஜோக் வைரலாகியிருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சூழலில், வாட்ஸ்அப்பில் வைரலாகியிருக்கிறது கணவன், மனைவி ஜோக் ஓன்று.

கொரோனா ஊரடங்கால் வீட்டிக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நம் மக்களுக்கு இருக்கும் பெரிய எண்டர்டெயின்மெண்ட் செல்போன் தான். இதை நன்றாக உணர்ந்துள்ள மீம்ஸ் கிரியேட்டர்கள், நொடிக்கு நொடி ஏதாவது ஒரு புதிய மீம்ஸ் போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல கொரோனா ஊரடங்கை மையமாக வைத்து பல ஜோக்ஸ்களும் வாட்ஸ்அப்பில் பகிரப்படுகின்றன. அப்படி பகிரப்பட்ட ஒரு ஜோக், வைரலாகி இருக்கிறது.

கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு

வழக்கமாக நம் வீடுகளில் சாதாரண சமயத்திலேயே மனைவிமார்கள் பல கண்டிசன்களை அடுக்கி தள்ளுவார்கள். இப்போது கணவன், குழந்தைகள் என அனைவரும் நாள் முழுவதும் வீட்டுக்குள் இருப்பதால், அவர்கள் போடும் கண்டிசன்களை கேட்கவா வேண்டும்.

மனைவியின் கண்டிசன்

மனைவியின் கண்டிசன்

அப்படி மனைவிமார்கள் போட்டுள்ள கண்டிசன் மெசேஜ் தான் தற்போது வைரலாகியுள்ளது. அது யாதெனில், "அரசாங்கம் மிகப்பெரிய ஊரடங்கை அறிவித்துள்ளதால், பெண்களாகி நாங்கள் சில முக்கிய கொள்கை முடிவுகளை அறிவிக்கிறோம்.

உணவு கட்டுப்பாடு

உணவு கட்டுப்பாடு

காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு ஆகிய அவரச காலங்களில் மட்டுமே சமையலறை திறந்திருக்கும். அனைத்து வேளை உணவுகளும் ஒரு குறிப்பிட்ட அளவு தான் தரப்படும்.

ஸ்நாக்ஸ்க்கும் வேட்டு

ஸ்நாக்ஸ்க்கும் வேட்டு

மதிய மற்றும் இரவு நேர நொறுக்கு தீனிகள் சேவை ரத்து செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு வேளை தான் டீ, காபி வழங்கப்படும். காலை ஒருமுறை, மாலை ஒருமுறை மட்டும் தான். அதுவும் ஒரு வேளையாக குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

சேவைகள் ரத்து

சேவைகள் ரத்து

ஒருவேளை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மேல சொன்ன சேவைகள் பகுதியாகவே அல்லது முழுவதுமாகவே ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

விவாதம் கூடாது

விவாதம் கூடாது

உணவின் சுவை, தரம், எண்ணிக்கை பற்றி விவாதிப்பதற்கு அனுமதி கிடையாது. இது மிக முக்கியமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த கொள்கை முடிவுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

கணவர்கள் கவனத்திற்கு

கணவர்கள் கவனத்திற்கு

மனைவியிடம் பேசும் போது வார்தைகளை ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும், பார்வை மற்றும் பேசும் தன்மை ஆகியவற்றில் கவனம் தேவை. மனைவியிடம் இருந்து பாதுகாப்பாக இருங்கள்.

இறுதி எச்சரிக்கை

இறுதி எச்சரிக்கை

இப்படிக்கு, இறுதி எச்சரிக்கையுடன் வீட்டு எஜமானி 'மனைவி'", என அந்த கடிதத்தில் உள்ளது. இது படிப்பதற்கு காமெடியாக இருந்தாலும், வீட்டம்மாகிட்ட ஜாக்கிரதையா நடந்துக்கோங்க கணவன்மார்களே என எச்சரிக்கை செய்வது போலவே தெரிகிறது.

English summary
A viral whatsapp message explains the wife conditions to their husbands on this lockdown days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X