For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவிகுளம், பீர்மேடு மீட்புக்காக நாடாளுமன்றத்தில் கன்னிப்பேச்சில் சிங்கமாக கர்ஜித்த குமரிதந்தை நேசமணி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பால் தமிழகம் இழந்தவை அதிகம் என்கிற கவலையும் இதற்காக நடத்தப்பட்ட தீரமிக்க போராட்டங்களும் நினைவு கூறப்படுகிறது.

தென் எல்லை மீட்பு போராளி நேசமணி, நாடாளுமன்ற லோக்சபாவில் தனி ஒரு மனிதராக சிங்கம் போல தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட தமிழ்நிலப் பகுதிகள் பிரச்சனை குறித்து கன்னிப்பேச்சில் கர்ஜித்த வரலாறு:

1955 டிசம்பர் 14, 15 நாட்கள் மற்றும் ஜுலை 1956-ல் நேசமணி பேசியதன் தொகுப்பு:

14-12-1955 புதன்கிழமை
திரு.எ.நேசமணி: துணை அவைத் தலைவர் ஐயா அவர்களே, எமது கன்னிப் பேச்சை இச்சபையில் ஆற்றுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

துணை அவைத் தலைவர் (குறுக்கிட்டு) : மதிப்பிற்குரிய உறுப்பினர் அவர்கள் கன்னியாகவே தொடர விரும்புகிறாரா?

Marshal Nesamony MP speech in Lok Sabha Discussion on States Reorganisation Commission

திரு. நேசமணி: திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நலன் வேண்டி இங்கு ஒலிக்கின்ற ஒரே குரல் எனது குரல் மட்டுமே ஆகும். மாநிலங்கள் புனரமைப்புக் குழுவின் அறிக்கையில் 83-வது பக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடித் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசின் ஒரே பிரதிநிதி நான் ஒருவனேயாகும், தொன்று தொட்டே திருவிதாங்கூர் - கொச்சியில் தமிழ் மக்கள் பெருவாரியாக வாழ்கின்ற ஒன்பது தாலுகாக்களையும் தமிழ் நாட்டுடன் இணைத்திட வேண்டும் என்பதே திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும். அவைகள் முறையே தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை மற்றும் சித்தூர் எனப்படுகின்ற ஒன்பது தாலுகாக்களாகும். மேலே சொல்லப்பட்ட ஒன்பது தாலுகாக்களில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை ஆகிய ஐந்து தாலுகாக்களையும் தமிழ்நாட்டுடன் இணைத்து விடலாம் என மேற்படிக் குழு ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது. இவைகளில் விடுபட்டுப்போன நான்கு தாலுகாக்களுடைய கோரிக்கைகள் மட்டுமே இப்போது எஞ்சி நிற்கின்றது. விடுபட்டுப்போன நான்கு தாலுகாக்களைக் குறித்த எங்களது உரிமைக் கோரிக்கைகளை எடுத்துரைப்பதற்கு முன்பு சில குறிப்பு விளக்கங்களை இங்கே எடுத்துரைத்த திரு.தாமஸ் அவர்களுக்குப் பதில் தருவதற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அதை விரைவாக முடித்து விடலாம் எனவும் எண்ணுகிறேன். ஏனெனில் அவரின் குறிப்புரைகள் எல்லாம் அதிகம் முக்கியத்துவம் தருவதற்குத் தகுதியுடையவைகளாக இல்லை. (குறுக்கீடு)

திரு எ.எம். தாமஸ் (கேரள எம்.பி.க்களைப் பார்த்து) திரு.நேசமணி அவர்கள் பிரபல வழக்கறிஞர் ஆவார் என்பதை கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

திரு.நேசமணி: திரு-கொச்சி தமிழ்ப் பகுதிகளை அண்டை மாநில மாவட்டமான திருநெல்வேலியுடன் நீங்கள் சற்று ஒத்து நோக்குதல் வேண்டும். நண்பர் அவர்கள் ஆரல்வாய்n‌மாழி முதல் கன்னியாகுமரி வரையில் பயணம் செய்திருப்பாரேயானால், அந்த 30 மைல் தொலைவும் அடர்ந்த மலைப்பகுதிகளால் அடைக்கப்படப்பட்டிருக்கவில்லை என்பதை அவரே கண்டு கொண்டிருப்பார். தவிரவும் திரு-கொச்சியில் உயர்நீதிமன்றம் உள்ளதே எனவும் அவர் கூறலாம். காலமெல்லாம் வழக்காடியே நாங்கள் இங்கே வாழ்ந்து கொண்டிருப்பதற்கு விரும்பவில்லை. இந்த நாட்டை விட்டு எங்களை விரட்டுவதற்காக எங்கள் மீது பல கொடுமைகளையெல்லாம் பட்டம் தாணுபிள்ளை கட்டவிழ்த்துவிட்ட வேளையில், இந்தியாவின் உச்சநீதிமன்றம் மட்டுமே எங்களுக்குப் பாதுகாப்பு தந்தது. தவிரவும் மைசூர் உயர் நீதிமன்றமே எங்களுக்கு விடுதலையைத் தந்தது. எனவே திருவிதாங்கூரில் உயர்நீதிமன்றம் எவ்விடத்து இருப்பினும் அதனால் எங்களுக்கு எத்தகைய நன்மையும் பயக்கப்போவது இல்லை என்றே நான் இங்கே கூறுவேன். அதனாலேயே உரிமை கோரி ஆறு முறைகள் உச்ச நீதிமன்றம் எனது சொந்த ஊரான நாகர்கோவிலில் இருந்தால் என்ன? அல்லது கயிலைமலையில்தான் இருந்தால் என்ன? அனைத்தும் எங்களைப் ஒபாறுத்தவரையில் ஒன்றுதான். எங்களுக்கு எத்தகைய நன்மையையும் செய்திட அதனால் இயலாது என்பது உறுதி. விளைபொருட்களின் உற்பத்தி அடிப்படையில் இவைகள் சிறந்த தாலுகாக்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு நான் கூறுகின்ற பதில் யாதெனில், மாநிலங்கள் சீரமைப்புக் குழுமத்தின் முன்பு அளிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் தெளிவுக் குறிப்புகளின் வாயிலாக இந்த நாலு தாலுகாக்களும், திரு.தாமஸ் அவர்கள் அறியாமையால் கோருவது போன்று, உபரி விளைச்சலைக் கொண்டவைகள் அல்ல என்பது நிரூபணமாகிறது. மக்கள் தொகையில் அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால் நபர் ஒன்றுக்கு வெறும் ஆறு சென்று நன்செய் நிலம் மட்டுமே இங்குள்ளவர்களுக்குக் கிடைக்கும் என்பதை புனரமைப்புக் குழுவினருடன் நாங்கள் எடுத்துக் கூறியுள்ளோம். இந்த ஆறு சென்று நிலத்தில் கிடைக்கின்ற விளைச்சலை வைத்துக்கொண்டு ஒரு நபர் ஓராண்டு காலம் வாழ முடியுமா? நிச்சயமாக முடியாது இவ்வுண்மையைப் புனரமைப்புக் குழுவினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே நாஞ்சில் நாடு திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்தின் நற்களஞ்சியம் எனவும் அவைகள் உபரி உற்பத்தியிடங்கள் எனவும் கூறி வருவதில் எத்தகைய உண்மையுமில்லை என்று குழுவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அடுத்து எடுத்துரைக்கப்பட்டிருப்பது தாதுமணலைக் குறித்தவையாகும். இத்தாது மணல்வளங்கள் அனைத்தும் நடுவண் அரசுக்குச் சொந்தமானவைகளாகும். தோரியம், மோனோசைபட்டூ, சிர்கான் மற்றும் ஏனைய தாதுக்களும் இங்கு மிகுதியாகக் கிடைக்கிறது என்பது உண்மையயென்றாலும், அவைகளை முற்றிலுமாக உற்பத்திச் செய்வதற்குத்தேவைப்படுகின்ற நுட்பத்திறன் கொண்ட தொழிலாளர்களின் பற்றாக்குறையே மேற்படித் தொழில் நிலையத்தில் காணப்படுகிறது. தோவாளையில் எங்கள் கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார் என்பதால் அதைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட வேண்டும் என்ற வாதத்தையும் புனரமைப்புக் குழுவினரிடத்தில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. இக்கருத்தைத் திரு.தாமஸ் அவர்கள் இவ்வவையில் மீண்டும் எடுத்துரைத்துள்ளார். தோவாளைத் தொகுதியில் வெற்றியடைந்த உறுப்பினர் திரு.டி.எஸ்.இராமசுவாமி பிள்ளை பிரஜா சோஷலிஸ்டூ கட்சியைச் சார்ந்தவராவார். அக்கட்சியின் மேல்நிலைத்தலைவர்களான திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணனும், திரு.அசோக் மேத்தாவும் இங்கு வருகை தந்த வேளையில் அவர்களும் இப்பகுதிகள் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டுமெனக் கூறினார்கள். தமிழ்த் தாலுகாவான இத்தோவாளையும் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும்மெனக் கூறினார்கள். தமிழ்த் தாலுகாவான இத்தோவாளையைச் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் ஆதரிப்பதாகவும், அத்தகைய கொள்கையின் அடிப்படையிலேயே தான் தேர்தலில் போட்டியிட்டதாகவும் அதற்கு ஆதாரங்களாக தனது தேர்தல் பிரகடனம் மற்றும் தனது தேர்தல் பிரச்சார உரைகளின் நகல்களை மாநிலங்கள் புனரமைப்புக் குழுவினருக்குத் திரு.இராமசாமி பிள்ளை அளித்திருக்கிறார். தவிரவும், இப்பிரச்சினையைக் குறித்து திரு-கொச்சி சட்டசபையில் விவாதம் எழுந்த வேளையிலும் இந்த ஒன்பது தமிழ்த் தாலுகாக்களும் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்றே அவர் கோரினார். பி.எஸ்.பி. முதலமைச்சரான திரு.பட்டம் தாணுபிள்ளை அரசுக்கு எதிராக முதலில் நம்பிக்கையில்லாத தீர்மானத்தை முன்மொழிந்தவரும் அதே கட்சியைச் சார்ந்த திரு.இராமசாமி பிள்ளையேயாவார். ஏனனில் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியைப் பட்டம் தாணுபிள்ளையின் அரசு நிறைவேற்றத் தவறியதாலேயே ஆகும்இவரின் நம்பிக்கையில்லாத் தீர்மானமே பட்டம் தாணுபிள்ளையின் ஆட்சியை வீழ்த்தியது.

துணை அவைத்தலைவர் : தற்சமயம் அங்கு அரசு மாறியிருப்பதால் அனைத்தும் சுமூகமாக மாறி இருக்குமே?

திரு.நேசமணி : அவ்வாறில்லை ஐயா, இதற்கான விளக்கத்தை நான் எடுத்துரைக்கவுள்ளேன். இச்சிக்கலான பிரச்சினையின் உண்மை நிலைகளைக்குறித்து நண்பர் திரு.தாமஸ் அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. துப்பாக்கிச் சூடு நடக்கும் அளவிற்கு நாங்கள் செய்த தவறுதான் என்ன? தேவிகுளம் மக்களுக்கு எதிராக போலீசாரால் அவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் அட்டூழியங்களில், சிக்கி இருந்த மக்களுக்குப்பாதுகாப்பு தர வேண்டும் எனக் கோரினோம். இதைத் தொடர்ந்து, அன்று முதலமைச்சராக இருந்த திரு.பட்டம் தாணுபிள்ளையிடம் இது குறித்து விவாதிப்பதற்கென்று எங்களது தூதுக்குழு ஒன்று அவரைச் சந்திப்பதற்குச் சென்றது. அத்துடனே நான் செல்லவில்லை. திரு-கொச்சி சட்டமன்ற உறுப்பினர்களாக அன்று இருந்த எனது கட்சியைச் சார்ந்தவர்களே இத்தூதுக் குழுவில் சென்றனர். '
முதலமைச்சரைச் சென்று காண்பதற்கு முன்பு, தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்குச் சென்று அங்கு நிலவி வந்த சூழ்நிலைகளைக் குறித்து நேரில் கண்டறிந்த பிறகே முதலமைச்சரை அவர்கள் சந்தித்தனர். ஆனால் பிரதிநிதிகளை அவர் கேவலமாகப் பேசிவிட்டுக் கூறினார். "எனக்கு ஆணை பிறப்பிக்கவா வந்துள்ளீர்கள்?" நாங்கள் வேண்டிக் கொண்டது வேறொன்றுமில்லை. அவ்விடங்களில் அக்கிரமங்களையும் அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு குறிப்பிட்ட காவல்துறை உதவி ஆய்வாளரை அவ்விடம் விட்டூ மாற்றிவிட வேண்டும் என்பதேயாகும். அதற்குப் பட்டம் தாணுபிள்ளை அளித்த பதில் "உங்கள் ஆணைப்படி நான் செயலாற்றப் போவதில்லை" என்பதே. அதற்குப் பிறகே, அதாவது 30-06-1954-லை "தேவிகுளம் தினம்" என அறிவித்து அதன் வாயிலாக மக்களது ஒருமித்த கருத்தை அரசாங்கத்திற்கு எடுத்துக் காட்டிடவும், அதனால் அரசாங்கத்தின் அடக்குமுறைக் கொள்கையைக் கைவிடச் செய்திடவும் மேற்படித் தினம் கடைபிடிக்கப்பட்டது. ஆயினும் அரசின் போக்கில் எத்தகைய மாறுதல்களும் ஏற்படவில்லை. எனவே, ஜுலை 4-ம் நாளன்று தேவிகுளம் தினம் அனுசரிக்கப்பட்டது.
எனது இயக்கத்தின் பொறுப்புமிக்க உறுப்பினர்களும், நானும், மாநில மேல்சபை உறுப்பினர் ஒருவரும் மற்றும் முன்னாள் அமைச்சர் ஒருவரும் தேவிகுளம் சென்று எமது மக்களிடம் நிலைமைகளை எடுத்துக்கூறி சாத்வீக சூழ்நிலை ஒன்றை அங்கு உருவாக்குவதற்காக அவ்விடம் எசன்றோம். ஆனால் அங்கே முன்தேதியிட்ட. 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. இதற்கெல்லாம் அஞ்சி ஓடி ஒளிந்து கொள்வதற்கு எங்களது தன்மான உணர்வு இடம் தரவில்லை. எனவே அரசாங்கத்தின் இந்த ஒருதலைபட்சமான கொடுங்கோல் தன்மையுடைய அந்த தடை உத்தரவை மீறுவது, எங்களது கடமையாகிறது எனக் கருதினோம். அங்கே அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து எங்களைத் தொடர்ந்து வந்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. நகர்மன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், வணிக பெருமக்கள் மற்றும் தமிழகம் தழுவிய ஏராளமான பெருங்குடி மக்கள் போன்றோர் வெள்ளமெனத் திரண்டு வந்து எங்களுக்கு நல்லாதரவு அளித்து புடைசூழ்ந்து 'வந்தனர். இந்த அறை கூவலை ஜீரணித்துக் கொள்ள இயலாத பட்டம் தாணுபிள்ளையின் அரசு இதற்குப் பிறகும் தங்களது ஆணவப் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக தனது அனைத்து அடக்குமுறை இயந்திரங்களையெல்லாம் மக்கள் மீது ஏவ அவர் தவறவில்லை. நீதியின் ஊற்றுக் கண்கள் அங்கே மலினப்படுத்தப்பட்டன. அனைத்து, அரசுத் துறைகளிலும் பேராதிக்கம் செலுத்துகின்ற மலையாளி அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் நீதித்துறையினர் போன்றோர் அனைவரும் முற்றிலுமாக ஊழல்வாதிகளாகவே அங்கே காணப்பட்டனர்.

திரு.எ.எம்.தாமஸ் : நீதித்துறையினர் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஊழல்வாதிகள் என்று மதிப்பிற்குரிய உறுப்பினர் கூறுவது உகந்ததுதானா?

திரு.நேசமணி : திருவிதாங்கூர் - கொச்சி உயர் நீதிமன்றம் ஆறு தாவாக்களின் மீது வழங்கிய தீர்ப்புக்கு எதிராக நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம்.

மேன்மைமிக்க துணை அவைத்தலைவர் : இது சற்று கடுமையான விமர்சனமாகும். பொதுவாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறாகப் பேசுவது வரவேற்கத்தக்கதாக இல்லை. தமிழ் மக்களுக்குத் திரு-கொச்சி உயர்நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லை என்பது போன்ற ஒரு உணர்வை அவர்கள் வளர்த்துள்ளனர் போல் தோன்றுகிறது. இதுவும் அவர்கள் பிரிந்து செல்ல வேண்டும் என்பதற்கான ஒரு காரணமாக அமைந்துள்ளது. நீதிபதிகள் அனைவரும் மதிக்கப்பட வேண்டியவர்களாவர். எனவே அன்னாரது இந்த கடுமொழியானது பொதுப்படையானதாகவும், குறிப்பிட்டு எவரையும் புண்படச் செய்ய வேண்டும் என்பதற்காகப் பேசப்பட்டது அல்ல. பிற பகுதிகளில் உள்ள நீதிபதிகளை விட சற்று வேறுபட்டவர்களாக அவர்கள் உள்ளனர். இதைத் தானே மதிப்பிற்குரிய உறுப்பினர் கருதுகிறார்.

திரு.நேசமணி : ஆம் ஐயா, அவ்வாறே நான் கருதுகிறேன். இத்தாவாக்களையைல்லாம் திருநெல்வேலியிலுள்ள நீதிமன்றத்துக்கு மாற்றலாமே என உச்ச நீதிமன்றம் திரு-கொச்சி அரசு வழக்கறிஞரிடம் ஆலோசனை கூறியது. இதை ஏற்க மறுத்த அரசு வழக்கறிஞர், திருநெல்வேலியில் மலையாளிகளுக்கும் தமிழர்களுக்குமிடையே பகைமை வளர்ந்துள்ள நிலையில், திரு-கொச்சி அரசுக்கு நீதி சென்னையில் கிடைக்காது என்று கூறினார். எனவே, முடிவாக தாவாக்கள் சென்னையில் இருந்து மைசூருக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து
தான் எங்களுக்கு நீதியும், உரிமையும் கிடைத்தன.

திரு.சி.கே.நாயர் : நீதிபதிகள் ஊழல் புரிபவர்கள் என்பதனாலல்ல, அவர்களின் உணர்வுகள் அத்தகையதாக உயர்ந்து காணப்பட்டது என்பதனால் மட்டுமேயாகும்.

திரு. நேசமணி : அதனாலேயே நான் அவர்களை நீதியற்றவர்கள் என்று கூறுவதற்கு நேர்ந்தது. இத்துடன் இதை முடித்துக் கொண்டு, தேவிகுளம் - பீர்மேடு சம்பந்தப்பட்ட விவாதங்களுக்கு வருகிறேன். அனேகர் மலைகளைக் குறித்தும் நதிகளைக் குறித்தும் மற்றும் குடியேற்றங்களைக் குறித்தும் பேசுகிறார்கள். ஆனால் மக்களின் பிரச்சினைகளைக் குறித்து எவ்விடத்திலும் கருத்தில் கொண்டு பேசியதாகத் தோன்றவில்லை. பட்டம் தாணுப்பிள்ளை அரசின் இத்தகைய எதேச்சாதிக்காரக் கொள்கையாலேயே நாங்கள் 144 தடையை மீறினோம் என முன்பு குறிப்பிட்டேன். இதைத் தொடர்ந்து 20 பெண்கள் உட்பட 434 நபர்கள் கைதானார்கள். ஏனைனில் கெடுபிடியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அங்கு செய்யப்பட்டிருந்ததே அதற்குக் காரணம் ஆகும். தேவிகுளம், மூவாற்றுப்புழை மற்றும் ஏனையப் பகுதிகளிலிருந்து 60 மைல்களுக்கு அப்பால், ஆண்களுடன் 20 பெண்களையும் சேர்த்து ஒரே சிறையில் அடைத்திருந்த கொடுமையைக் குறித்து அறிவதற்கு அப்பெண்மணிகளை நீங்கள் நேரில் சன்று சந்தித்திருக்க வேண்டும். அங்கே அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதைக் குறித்து அறிந்து கொள்வதற்கு ஒரு நேர்முகப் பேட்டியை அவர்களுடன் நடத்தியிருக்க வேண்டும். தன்மானமும், பகுத்தறிவும் உள்ள எந்த மனிதனும் இவைகளுக்கு எதிராக ஒரு புரட்சியே செய்திருப்பான். இவைகள் பெரும் அதிர்ச்சியைத் தரக்கூடிய செயல்களாகும். 434 ஆண்களும், அவர்களுடன் 20 பெண்களும் சேர்த்து ஒரே சிறையிலடைக்கப்பட்ட போது இத்தகையச் செயல்களைத் தடுப்பதற்கு எங்களால் இயன்ற மட்டும் அரசுக்கு நெருக்குதல்களைத் தந்தோம்.

ஒரு உறுப்பினர் : அதை எவ்வாறு செய்தீர்கள்?

திரு.நேசமணி : கேரளா ஐ.என்.டி.யு.சி. என்ற தொழிலாளர் அமைப்பும், தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. என்ற தொழிலாளர் அமைப்பும் அங்கே செயல்பட்டு வருகின்றது. தென்னிந்திய தோட்டத் எதாழிலாளர் ஐக்கியம் என்ற அமைப்பு சென்னை ஐ.என்.டி.யு.சி.யுடன் இணைக்கப்பட்டுள்ளது. திரு-கொச்சி அரசும், கோட்டயம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியும் ஆதரவு அளித்து வருகின்ற தொழிலாளர்த்துறை மாண்புமிகு அமைச்சர் அன்று ஐ.என்.டி.யு.சி.சங்கத்தின் தலைவராக இருந்த வேளையில், கேரள ஹைரேஞ்சு தொழிலாளர் யூனியனை ஐ.என்.டி.யு.சி. அமைப்பிலிருந்து வெளியேற உத்தரவிட்டார். கோட்டயத்தைச் சார்ந்த சில செல்வந்தர்களும் மற்றும் சில உள்ளூர் முதலாளிகளுமே மேற்படி வெளியேற்றலுக்குத் துணை நின்றனர். தொழிலாளர் ஒற்றுமையைக் குலைப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர். ஐ.என்.டி.யு.சி. தலைவரின் வெளியேற்ற ஆணைக்குப் பிறகும், காளான்களைப் போன்று இந்த ஹைரேஞ்சு தொழிலாளர் யூனியன் அங்கும் இங்கும் ,தலைக்காட்டி வருகிறது.

மாண்புமிகு துணை அவைத்தலைவர் : சபை இன்னும் அரை மணி நேரம் கூடுதலாக அமரலாமா என்பதை அறிய விரும்புகிறேன்.

பல உறுப்பினர்கள் : வேண்டாம்

மாண்புமிகு துணை அவைத்தலைவர் : மதிப்பிற்கரிய உறுப்பினர் மேலும் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வார்?

திரு.நேசமணி : தலைமை எவ்வளவு நேரம் அனுமதிக்கின்றதோ அவ்வளவு நேரம் வரையிலும், ஆனால் எனது வாதத்தை முழுமையாக எடுத்துரைக்க விரும்புகிறேன். இப்பிரச்சினை குறித்து, திருவிதாங்கூர் - கொச்சியிலிருந்து தமிழர்களுக்காக வாதாடுகின்ற ஒரே நபர் நான் மட்டுமேயாகும்.

மாண்புமிகு துணை அவைத்தலைவர் : அப்படியானால் அங்கத்தினர் நாளையும் தொடரலாம் மக்களவை 1955 டிசம்பர் 15-ம் தேதி 11.00 மணிக்கு மீண்டும் கூடும் எனக்கூறி அவை ஒத்தி வைக்கப்படுகிறது

இந்திய பாராளுமன்றத்தில் திரு.எ.நேசமணியின் பேருரைகள்

திரு.நேசமணி :

தலைமை எவ்வளவு நேரம் அனுமதிக்கின்றதோ அவ்வளவு நேரம் வரையிலும், ஆனால் எனது வாதத்தை முழுமையாக எடுத்துரைக்க விரும்புகிறேன். இப்பிரச்சினை குறித்து, திருவிதாங்கூர் - கொச்சியிலிருந்து தமிழர்களுக்காக வாதாடுகின்ற ஒரே நபர் நான் மட்டுமேயாகும்.

மாண்புமிகு துணை அவைத்தலைவர் : அப்படியானால் அங்கத்தினர் நாளையும் தொடரலாம் மக்களவை 1955 டிசம்பர் 15-ம் தேதி 11.00 மணிக்கு மீண்டும் கூடும் எனக்கூறி அவை ஒத்தி வைக்கப்படுகிறது

திரு.எ. நேசமணியின் ஆ .பாராளுமன்ற இரண்டாம் பேருரை 1955 டிசம்பர் மாதம் 15-ம் நாள் வியாழக்கிழமை காலை

மாண்புமிகு அவைத்தலைவர் : மாநிலங்கள் புனரமைப்புக்குழு பரிந்துரைகள் குறித்த நேற்றைய முன் மொழிவு குறித்து விவாதத்தை இன்றும் தொடரலாம். இது குறித்து திரு.நேசமணி நேற்று கடைசியாகப் பேசிக் கொண்டிருந்தார். ஏற்கனவே 15 நிமிடங்கள் அவர் எடுத்துவிட்டார். எனவே, தனது கருத்துரையைச் சுருக்கிக்கொள்ள வேண்டும். இல்லையேல் இன்னும் பேசவிருக்கின்ற பல உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை இவ்வவையில் எடுத்துரைப்பதற்கு வாய்ப்பளிக்க இயலாமற்போய்விடும்.

திரு. நேசமணி : திரு-கொச்சி தமிழர்களுக்காக இவ்வவையில் ஒலிக்கின்ற ஒரே குரல் என்னுடையது மட்டுமேயாகும் என நேற்றைய தினம் மாண்புமிகு துணை அவைத் தலைவரின் கனிவான கவனத்துக்கு வைத்துவிட்டு, அது குறித்து எனது வாதங்களை இவ்வவையில் வைப்பதற்குத் தேவையான காலத்தைத் தருவதற்கு வேண்டினேன். தேவையானால் இன்றும், எனது வாதங்களை உகந்தவண்ணம் இவ்வவையில் எடுத்துரைப்பதற்குத் தேவைப்படும் கால அவகாசத்தை அளிக்க வேண்டும் என தலைமையைக் கெஞ்சி வேண்டிக் கொள்கிறேன்.

மாண்புமிகு அவைத்தலைவர் : அனைத்து மாநில உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை இயன்ற அளவு முழுமையாக இங்கே எடுத்துரைப்பதற்கு விரும்புகிறார்கள் என்று நான் கருதுகிறேன். ஆனால் நமக்கு வாய்க்கப்பட்டிருக்கின்ற சமயமோ, அதற்குபோதுமானதாக இல்லை. எனவே, உறுப்பினர் தனது உரையைச் சுருக்கிக் கொள்ளவேண்டும். அதற்காக அவரது கருத்துக்களையயல்லாம் விட்டுவிட வேண்டும் என்பது பொருளல்ல. தவிர்த்து தனது வாதங்கள் மற்றும் குறிப்புகளைச் சுருக்கிக் கொள்ளலாம்.

திரு. நேசமணி : நேற்றையதினம், நான் தேவிகுளம் மற்றும் பீருமேடுப் பகுதி பிரச்சனைகள் அனைத்தும் மனிதனின் பிரச்சினைகள் எனக் கூறியுள்ளேன். ஆயினும் இப்பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன என்பதைக் குறித்து வேறு யாரும் எடுத்துரைக்க முன்வரவில்லை. இங்கு நடத்தப்பட்ட போலீஸ் அட்டூழியங்களைக் குறித்து பல நிகழ்வுகளை எடுத்துரைத்தேன். ஹைரேஞ்சு தொழிலாளி யூனியனின் தோற்றத்தையும், அதன் நோக்கங்களைக் குறித்தும் நான் எடுத்துரைத்தேன். இச்சங்கத்தை அங்கீகரித்து ஐ.என்.டி.யு.சி.யுடன் இணைக்கப்பட்டிருந்ததைத் தலைவர் ரத்து செய்தப் பிறகும், தேர்தல் காலங்களில் இது காளானைப் போன்று ஆங்காங்கே தோன்றி தென்னிந்திய தொழிலாளர் சங்க உறுப்பினர்களிடையே பிரிவினையைத் தூண்டி அதன் வாயிலாகத் தி.தா.ந.கா.வின் நோக்கங்களைஎயல்லாம் சீர்குலைத்து வருகிறார்கள் என்பதையும் அவையில் விளக்கியுள்ளேன். தேவிகுளம் மற்றும் பீர்மேடு போன்ற இரு தாலுகாக்களுக்கும் சேர்த்து ஒரு உயர்நிலைப்பள்ளி மட்டுமே அங்கு உள்ளது. அப்பள்ளிக் கூடத்தையும் கண்ணன் தேவன் கம்பெனியாரே தொடங்கி நிர்வகித்து வருகின்றனர். 1954 மேய் திங்கள் வரையிலும் பட்டிகை வகுப்பினர் மற்றும் மலைசாதி வகுப்பைச் சார்ந்த சுமார் 300 மாணவர்களுக்குக் கல்வி கட்டண சலுகைகள் அங்கு அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் இக்கல்வியாண்டு தொடக்கம் இச்சலுகைகளையெல்லாம் அவர்கள் நிறுத்திவிட்டனர். அதனால் இவ் ஏழை மாணவர்கள் தங்களது கல்வியை விட்டுவிட வேண்டிய நிலை அங்கே உருவாகிறது. இத்தகைய நடவடிக்கையால் அம்மலைப் பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்ற சுமார் 63000க்கு அதிகமான தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கை நிலைகளை மேன்மைப்படுத்துவதற்காக நடுவண் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் திருவிதாங்கூர் - கொச்சி அரசு செயல்படுத்தாததால் இவர்களின் இளைய சந்ததியினரின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகிவிட்டது. இவைகளைப் போன்று ஏராளம் நிகழ்ச்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சர்தார் ஹரழூக்கும் சிங்கு, தலைவர் இருக்கையில் வந்து அமர்கிறார்

திரு. நேசமணி: தேவிகுளம் மற்றும் பீர்மேடு பகுதிகள் முழுவதிலும் அரசு தனது அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதனவும் அங்கு வாழ்கின்ற தமிழ் மக்களின் நலன்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுவதாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும், பிற வழிகள் வாயிலாகவும் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. நேரக்குறைவு காரணத்தால் அத்தகைய அடக்குமுறைகளின் பட்டியலை இங்கு வெளியிட நான் விரும்பவில்லை. ஆனால் தேவிகுளம் - பீர்மேடுப் பகுதிகளில் நடந்து முடிந்த தேர்தல்கள் வாயிலாக இப்பகுதிகள் அனைத்தும் தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்பதே அப்பிரதேச மக்களின் விருப்பம் ஆகும் என்பதை வெளிச்சமிடுகிறது. சென்னை மாநில சட்டமன்ற அவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது நீதியமைச்சர் திரு.சுப்பிரமணியம் கூறுகையில், திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்தில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்ற தேவிகுளம் - பீர்மேடுகளை உள்ளடக்கிய ஒன்பது தாலுகாக்களும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்று கோரி மாநிலங்கள் புனரமைப்புக் குழுவிடம் தமிழ்நாடு அரசு மனு கொடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். திரு-கொச்சி முன்னாள் முதலமைச்சரான திரு.பட்டம் தாணுபிள்ளை எர்ணாகுளத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் இது குறித்து இவ்வாறு பேசியுள்ளார்.

"இந்திய திருநாட்டில் நடுவண் அரசு என்ற ஒரு அமைப்பு இல்லாதிருக்குமேயானால், திரு.காமராஜ் நாடாரும், திரு. சுப்பிரமணியுமாகச் சேர்ந்து திரு-கொச்சி நாட்டின் மீது படையெடுத்திருப்பர்" என்று குறிப்பிட்டார். திரு-கொச்சியில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்ற தாலுகாக்கள் அனைத்தையும் தமிழகத்துடன் இணைத்துவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதால் அதன்மீது திரு-கொச்சி அரசின் மனப்போக்கை - எடுத்துக்காட்டுவதாக உள்ளது பட்டம் தாணுபிள்ளையின் மேலே எடுத்துரைக்கப்பட்ட பேச்சு. எங்களது இன்றைய கோரிக்கைதான் என்ன? இக்கோரிக்கையை வரலாறுகளுக்கும், நியதிகளுக்கும் எதிரான ஒரு பூதாகர கோரிக்கையாக விளக்கம் தரப்படுகிறது. இப்பகுதிகள் அனைத்தும் 1889-க்கு முன்பு வரையில் திருவிதாங்கூருக்குச் சொந்தமானப் பகுதிகளாக இருந்ததில்லை. திரு-கொச்சி சட்டமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் போது திரு.நடராஜபிள்ளை அன்று கூறியதற்குத் திரு.எ.எம்.தாமஸ் இவ்வாறு குறிப்பிட்டார். "திருவிதாங்கூர் நாட்டு விவரச்சுவடியை எழுதிய திரு.ற்றி.கே.வேலுப்பிள்ளை, பூஞ்சாற்று அரசர் பாண்டிய மன்னர் பரம்பரையைச் சார்ந்தவர்" என்று கூறினார்.

திரு.கோட்டுக்காபள்ளி (மீனச்சல்): பூஞ்சாறு ராஜா திருவிதாங்கூர் காரராவார்.

திரு.நேசமணி : இக்கூற்று திருவிதாங்கூர் நாட்டு விவரச்சுவடியில் தரப்பட்டுள்ள வரலாற்றின் அடிப்படையில் கூறப்பட்டதாகும். ஆனால் திரு-கொச்சியைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் பூஞ்சாறு மன்னர் பாண்டிய மரபினர் என்றும், அன்னார் கையொப்பமிடுகின்ற தருணங்களில் "மீனாட்சி சுந்தரம்" என்றே அவர் ஒப்பமிடுவதாகவும் குறிப்பிடுகின்றனர். மன்னாடியர் என்று அழைக்கப்படுகின்ற நாட்டுப் பிரதானிகளைக் கொண்டு நாட்டில் தீர்வைகள் தண்டினான் என்றும், அத்தகையத் தீர்வை வசூலுக்கு அளிக்கப்படூகின்ற பற்றுச்சீட்டில் "மதுரை மீனாட்சி" துணை என்ற முத்திரை பதிக்கப்பட்டூள்ளதாகக் காணப்படுகிறது. ஆகையால் இந்த தேவிகுளம் - பீருமேடூ பகுதிகள் அனைத்தும் பாண்டியர்களின் இறையாண்மைக்கு உட்பட்டு மதுரை நாயக்கர்களின் அதிகார வரம்பிற்குள் 1889 வரையிலும் இருந்துள்ளன. எனவே மேற்படி பகுதிகள் அனைத்தும் 1889-க்கு முந்திய காலம் வரையிலும் திருவிதாங்கூருக்குச் சொந்தமானதாக இருந்ததில்லை என்பதே வரலாறுகள் கூறுகின்ற உண்மை. இன்று, மாடோன் கே.டி.கைச்.பி.தேவன் கம்பெனியாரின் முன்னோடிகள் 1879-ல் பூஞ்சாற்று மன்னருடன் - செய்து கொண்ட மூதல் உடன்படிக்கையின் அடிப்படையில் இப்பகுதிகள் அவர்களது அனுபவத்திற்கு வந்துள்ளது. பெரியாறு நீர்த்தேக்க திட்டத்திற்காகப் பிரிட்டீஷ் இந்திய நடுவண் அரசின் செயலாளர் திருவிதாங்கூர் மன்னருக்காக நின்று ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளார். 1889-ல் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, குத்தகை உரிமையின் காலக்கெடுவை நீட்டித்த வேளையில்இ அது திருவிதாங்கூர் மன்னருக்குச் சாசனம் செய்யப்பட்டுள்ளது. எனவே 1879 முதல் 1889 வரையிலான பத்தாண்டு கால இடைவேளையில் மட்டுமே, இப்பரி வர்த்தனங்கள் நடந்திருக்கிறது என்பது தௌ;ளத்தெளிவு. தவிரவும், திருவிதாங்கூர் மன்னர் இப்பிரதேசங்களைப் பூஞ்சாறு மன்னரிடமிருந்து நீண்ட காலக் குத்தகையின் அடிப்படையிலேயே பற்றிருக்கிறார். எது எவ்வாறாயினும், 1985 வரையிலும் திருவிதாங்கூர் பிரதேசங்களிலிருந்து தேவிகுளம்-பீருமேடூ பகுதிகளுக்கு வந்து போக எத்தகைய போக்குவரத்து வசதிகளும் இருந்ததில்லை. இப்பிரதேசங்களுக்கு மதுரை மாவட்டத்திலுள்ள தேவாரம், : கூடலூர், போடிநாயக்கனூர், கம்பம் மற்றும் சிவகிரி போன்ற கணவாய்கள் வழியாக மட்டுமே வந்தடைய முடியும் என்று 1951-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கணவாய்கள் வாயிலாக மட்டுமே அன்று வணிகமும் நடந்து வந்துள்ளது. இவைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளாகும். எனவே இப்பிரதேசங்கள் அனைத்தும் சென்னை மாநிலத்தின் ஒரு பாகமாக இருந்தமையால் தமிழ் மக்கள் அவ்விடங்களுக்கு எத்தகையத் தடங்கலுமின்றிக் குடியேறி நிரந்தரமாக அங்கே தங்கியும் விட்டனர். அதனால் இவ்விடங்கள் அனைத்தும் தமிழர்களின் சொந்த நாடாக இன்று காட்சி தருகிறது.
இவ்விடங்களில் வாழ்கின்ற மக்களைக் குடியேறியவர்கள் என்றும், நிரந்தரமாக அங்கு தங்காமல் வந்தும் சென்றும் இருப்பவர்கள் என்றும் மாநிலங்கள் புனரமைப்புக் குழு கூறியிருக்கிறது. இருப்பினும் இத்தகைய விவரங்களையெல்லாம் அவர்களுக்கு யார் அளித்தனர் என்றோ, அல்லது எங்கிருந்து அவைகளைத் திருடினர் என்றோ குழுவினர் விளக்கம் தரவில்லை. இது போன்ற அனேக காரியங்களைக் குறித்து வேறு சந்தர்ப்பங்களில் இக்குழு கூறும்போது இன்ன மாநிலங்கள் தந்தன என்றோ இன்ன இன்ன அமைப்புகள் தெரிவித்தன என்றோ கூறுவதை அது வழக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இங்கே அப்படிக் கூறவில்லை. எனவே இவைகளை ஆதாரமின்றிக் கூறியதாகவே கருத வேண்டும். தமிழ்த் தொழிலாளர்களின் கடின உழைப்பால் மட்டுமே செல்வந்தர்களாகிவிட்ட 'சில மலையாளி முதலாளிகளும், அன்று திருவிதாங்கூர் - கொச்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்த தமிழர் விரோத பிரஷஜாசோஷலிஸ்டூ அரசும் இத்தகைய தவறுதலான திசை திருப்புகின்ற விவரங்களையைல்லாம் இக்குழுவுக்கு அளித்திருக்கலாம் என நாங்கள் நம்ப வேண்டியுள்ளது. தவிரவும், கடலோரப் பகுதி மக்கள் நெருக்கத்தைக் குறைப்பதற்கு இவ்விடங்கள் உதவும் எனவும் கூறியுள்ளனர். இன்று கேரள மாநிலத்தின் பரப்பளவு குறிப்பிடும் அளவுக்குப் பெருகியிருக்கிறது. இன்றைய கேரளம் 14,8000 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால் திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்தின் பரப்பளவு வெறும் 9,154 சதுர மைல்கள் மட்டுமே, இந்த புணரமைப்பால் கேரள மாநிலத்துக்கு 5000 சதுர மைல்கள் பரப்பளவு கூடுதலாகக் கிடைத்திருக்கிறது. எனவே தேவிகுளம் - பீருமேடு பகுதிகளில் மட்டுமே மக்களைக் குடியேற்றுவதற்கான தேவை எதுவும் எழவில்லை. தேவிகுளத்தின் வட எல்லையாக அஞ்சநாடு அமைந்திருக்கிறது. அஞ்சநாடு என்பது, மறையூர், கிழாந்தூர், கோட்டைக்கோம்பர், வட்டவாடா, காந்தனூர், நாச்சிவயல் போன்ற பல கிராமங்களை உள்ளடக்கிய நாடாகும். அதன் மாத்த பரப்பளவு 112 ச.மைல்கள் ஆகும். தவிரவும்,

1. கண்ணன் தேவன் கம்வபனி 215 ச.மைல்கள்
2. ஏலக்காய் தோட்டப்பகுதிகள் 215 ச.மைல்கள்
3. வனவிலங்குகள் சரணாலயம் 305 ச.மைல்கள்
4. தேயிலை தோட்டங்கள் 97 ச.மைல்கள்
5. பெரியாறு நீர்த்தேக்கப் பரப்பு 13 ச.மைல்கள்
6. பெரியாறு நீர்த்தேக்க நீர்ப்பிடிப்புப் பகுதிப்பரப்பு 305 ச.மைல்கள்
(இது வனவிலங்கு சரணாலய பரப்பையும் உள்ளடக்கிய பரப்பளவு ஆகும்.

இவைகளைத் தவிர இங்கு எஞ்சி நிற்பது சிறு அளவிலான காடுகளும், புல்வெளிகளும் மட்டுமே, எனவே கடலோர மக்களின் நெருக்கத்தைக் குறைப்பதற்கு இப்பகுதிகள் உதவும் எனக் கூறப்படுகின்ற வாதத்தில் எத்தகைய உண்மைகளோ ஆதாரங்களோ இல்லைலயன்பதைத் தெளிவாகக் காணலாம். உண்மைகள் இவ்வாறிருக்க, பிரஜாசோஷலிஸ்டு அரசு, அஞ்சு நாட்டில் மறையூர் கிராம வாழ் மக்களான தமிழர்களை வெளியேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அப்பகுதிகளில் மலையாளிக் குடியேற்ற காலணிகளை உருவாக்குவதற்கு முயன்று வருகிறது. கல்லாறு - ஏலக்காய் தோட்டப்
பகுதிகளிலும் இது போன்ற குடியேற்ற காலனிகளை அரசு அமைத்து வருகிறது. இத்தகையச் செயல்களினால் மண்ணின் மைந்தர்களான் தமிழர்களை அவ்விடங்களிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றிவிட வேண்டும் என்பதே இன்றைய அரசின் திட்டமாகும்.

திரு-கொச்சி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான திரு.பட்டம் தாணுபிள்ளை அம்மாநில சட்டமன்றத்தில் அன்று தெளிவுபடுத்திக் கூறுகையில், "பிரஜாசோஷலிஸ்டு அரசாங்கத்தின் குடியேற்ற திட்டத்தை முன்னமையே அமல்படுத்தப்பட்டிருந்தால், காமராஜ் நாடார் இப்பகுதிகளை இன்று கோரியிருக்கமாட்டார்" என்ற அவருடைய பேச்சு எனது வாதத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாகவும், அதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்து உள்ளது. அந்நாட்களில் ஆட்சிக் கட்டிலில் இருந்த சோஷலிஸ்டூ அரசின் மனநிலை அத்தகையதாக இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது;. அத்துடனே அவைகள் முடிந்து விட்டனவா என்றால் அதுவுமில்லை. மாநில புனரமைப்புக் குழுவின் பரிந்துரை மீது திருவிதாங்கூர் - கொச்சி சட்டமன்றத்தில் அன்று விவாதம் எழுந்த போது பட்டம் தாணுபிள்ளை கூறியது யாதெனில் : - "மதுரையிலிருந்து வருகின்ற தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், இன்று மட்டுமல்ல, என்றைன்றைக்குமாக தடுத்தாக வேண்டும். ஏனைனில், மலையாளிகளுக்கும், திரு-கொச்சியைச் சார்ந்த மற்றைய மக்களுக்கும் அங்கு வேலை வாய்ப்புகள் அளித்திட வேண்டியுள்ளது" எனக் கூறினார். இவைகள் அனைத்திற்கும் பின்னால் ஒளிந்து நிற்கின்ற மனப்போக்கு இதுவேயாகும். இத்தகைய மனப்பாங்கே தேவிகுளம் - பீருமேட்டை அவர்கள் கோருவதற்குத் தூண்டுதலாக அமைந்திருக்கின்றது.ஐக்கிய கேரள இயக்கத் தலைவர்கள், ஐக்கிய கேரள கோரிக்கைகளை இன்று எழுப்புவதற்கான காரணங்கள் தான் என்ன? என்பதைக் குறித்தும் சற்று விவரமாக விளக்க விரும்புகிறேன். மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.கேளப்பன் அவர்கள் அதன் தலைவர் என்ற முறையில், மொழி வழி மாகாணங்கள் புனரமைப்புக் குழுமத்திடம், அதனுடைய வினாக்களுக்கு விடைகளாகவோ அல்லது விளக்கவுரையாகவோ அளிக்கப்பட்ட பதிலுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சில தனித்தன்மை வாய்ந்த குறிப்புகளை இங்கே எடுத்துரைக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அத்தகைய குறிப்புகள் அனைத்திலும் மலையாளிகளுக்குத் தமிழர்களின் பால் உருவாகியிருந்த குரோத மனப்பான்மை பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கின்றன.

அவரின் மனுவில் கூறப்பட்டிருக்கின்றவற்றில் சில கருத்துக்கள்.

"பன்மொழிக் கதம்பத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்ற "மதராசி பிறசிடென்சி' (சென்னை) என்பது கலைக்கப்பட வேண்டும்".

"இது பிரிட்டீஷ் இந்திய வரலாற்றில் ஒரு விபத்து போன்று உருவானது மட்டுமேயாகும்''.

"பாராளுமன்ற முறையிலான தன்னாட்சி அமைப்புக்கு அது உகந்ததாக இல்லை"

"இது, பாராளுமன்ற அமைப்பின் கீழ் வருகின்ற தன்னாட்சி முறை, இதற்குப் பொருந்துவதில்லை என்பதை அண்மை கால வரலாறுகள் நமக்குச் சான்று பகருகின்றது".

"பல்வேறு மொழிகளைப் பேசுகின்றவர்களிடையே போட்டி மனப்பான்மைகளை உருவாக்கி, அரசியல் ஈடுபாடுகளுக்கு பாதகச் சூழ்நிலைகளை உருவாக்குதல் அதன் தன்மைகளுக்கும் திறமைகளுக்கும் ஊறுவிளைவிக்கும்".

"கேரள மக்களின் தலைவிதையை நிர்ணயிக்கின்ற நடுவர்களாகத் தமிழர்கள் என்றன்றைக்கும் தொடர்ந்திட அனுமதிக்கக் கூடாது".

மேலே எடுத்துரைக்கப்பட்ட மலையாளி எண்ணங்களின் பிரதிபலிப்புகளே தேவிகுளம்-பீர்மேட்டுக் காலனி அமைப்பும், கேரளத்துடனே இப்பிரதேசங்களை இணைத்துவிட வேண்டும் என்ற கோரிக்கையும் ஆகும். தேவிகுளம் - பீர்மேட்டுப் பகுதிகள் இல்லாத கேரளம் தனித்து வாழும் இயல்பில்லாத ஒரு மாநிலமாகிவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தவிரவும் பொருளாதாரத்தில் அது பின்னடைந்த, பற்றாக்குறைகள் நிறைந்த நாடாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. திரு-கொச்சி மாநிலத்துக்காக வரையப்பட்டூள்ள ஐந்தாண்டு திட்ட ஒதுக்கீட்டில், வருகிற ஐந்தாண்டுகளில் 14.7கோடி ரூபாய்கள் உபரியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, கேரளம் தனித்தியங்க இயலாத மாநிலம் என்றும், பற்றாக்குறை நிறைந்த மாநிலம் என்றைல்லாம் கூறுவது முற்றிலும் ஆதாரமற்றதும் உண்மைக்குப் புறம்பானதும் ஆகும் என நான் கூறுவேன். மாநிலங்கள் புனரமைப்புக் குழுவிடம் திருவிதாங்கூர் தமிழ்நாடூ காங்கிரஸ் அளித்த மனுவில் இவ்விருதாலுகாக்களிலுள்ள இரு பகுதிகளை மட்டும் இப்பகுதிகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள். மாநிலங்கள் புனரமைப்புக் குழுவிடம் நாங்கள் அளித்த மனுவின் ஒரு பாகம் எங்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டூள்ளதால், அம்மனுவிலிருந்து சில வரிகளை இங்கே எடுத்துரைப்பதற்கு அனுமதி வழங்கிட வேண்டுகிறேன்,

அவைகளாவன :

"தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியென்பது, மின் உற்பத்தி செய்கின்ற பள்ளிவாசல் கிராமத்தை விடுத்து தேவிகுளம் தாலுகாவின் மற்றனைத்து இடங்களும் அடங்குகிறது. தவிரவும் இத்தொகுதியில், முண்டக்கயம் நகராட்சிக்கு உட்பட்ட சிறியன்கத்தோலிக்கர்களின் ரப்பர் தோட்டங்களையும், முண்டக்கயம் நகராட்சியும் நீங்கலாக உள்ள பீருமேடூ தாலுகாவும் சேர்ந்த இரு தாலுகாக்களும் இச்சட்டமன்ற தொகுதியில் அடங்குகிறது, ஒரு தீர்வு உடன்பாடாக, தமிழகத்துடன் இணைக்கப்படவேண்டும் என்று, திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கோருகின்ற தேவிகுளம்-பீருமேடு தாலுகாக்களிலிருந்து மேலே குறிப்பிட்டிருக்கின்ற இரண்டு பகுதிகளையும் விலக்கி விடுவதில் தி.தா.த.நா.கா.வுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை".

பரிந்துரையில் இருக்கின்ற கேரள மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மேற்படி இரண்டு பகுதிகளும் இன்றியமையாத் தேவையென நாங்கள் முன்வந்து விட்டுக் கொடுத்திருப்பதையே எங்களது கோரிக்கைகளுக்கு எதிர்வாதம் புரிவதற்காக மாநிலங்கள் புனரமைப்புக் குழு தனது கையிலைடுத்துக் கொண்டு அதைப் பற்றியும் நிற்கிறது. இதனாலேயே மேற்படிக் குழுவிடம் நாங்கள் அளித்த மனுவை திரித்துக் கூறிப் பிரச்சினைகளைத் திசை திருப்புகின்ற யுக்தியில் குழு இறங்கியுள்ளது என்ற உண்மையை இங்கே எடுத்துக்கூற விரும்புகிறேன். தவிரவும் தேவிகுளம் - பீருமேடு பகுதிகள் சென்னை மாநிலத்தின திட்ட வளர்ச்சிகளுக்கு இன்றியமையாததாகும் என இங்கே ஆணித்தரமாகக்
கூறுகிறேன்.

நான் முன்பே எடுத்துரைத்தது போன்று, பெரியாறு நீர்தேக்கத்துக்கு 13-சதுர மைல்கள் தண்ணீர் கொள்ளளவும், 305 சதுர மைல்கள் தண்ணீர் பிடிப்புப் பகுதியும் உண்டு, இப்பகுதிகள் சென்னை மாநிலத்திற்கு இன்றியமையாத் தேவையாகிறது. ஏனனில் பெரியாறு நீர்தேக்கத்தினால் மதுரை மாவட்டத்தில் உள்ள 1.90.000 ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கிறது. அவ்வாறு கிடைக்கப் பெறுகின்ற தண்ணீருக்கு ஆண்டுதோறும் பங்கு உரிமை வரியும் திருவிதாங்கூர் அரசுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தவிரவும் பெரியாற்றுத் தண்ணீரைப் பயன்படுத்தி பெரியகுளம் அருகாமையில் ஒரு நீர்மின் நிலையம் நிறுவுவதற்கான திட்டத்தைச் சென்னை அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான முன் இசைவை அன்றைய திரு-கொச்சி பிரஜோசோசியலிஸ்டூ அரசு அளிக்காமல் உற்பத்திச் செய்வதற்குப் பயன்படுத்துகின்ற தண்ணீருக்குக் கூடுதல் தண்ணீர் மேலாண்மை வரி தராமல் அனுமதி தருவதற்கில்லை எனவும் கூறிவிட்டது. இத்திட்டத்திற்காகப் பெரியகுளத்தில் கால்கோள் விழா கூட ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது. இவைகளைத் தவிர சென்னை அரசின் இரண்டாவது ஐந்தாண்டு திட்டவரைவில் மேலும் பல திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று ரூ.7.75 கோடி முதலீட்டில் ஆலடி அணை என்ற பெரியாறு மேல்மட்ட அணைத்திட்டமும் மற்றான்று ரூ.14.5 கோடி செலவில் பம்பையாற்றுக்குக் குறுக்கே அணைத்திட்டமும் ஆகும்மூன்றாவதாகப் பெரியாறு உபமின் உற்பத்தி நிலையத்திற்கு ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதற்காக 9.98 கோடி ரூபாய்கள் செலவு செய்யப்படவும் உள்ளன. இவைகளைத் தவிர ரூ.13.2 கோடி செலவில் பரம்பிக்குளம் மேல் ஆளியாறு அணைத்திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

மேல் ஆளியாறு அணைத்திட்டப் பகுதிகளுக்குச் சென்னை மாநிலத்தைச் சார்ந்த அதிகாரிகள், திரு-கொச்சி மாநிலத்திற்கு உட்பட்ட இடங்கள் வழியாகச் சன்று வருவதற்கோ, அல்லது ஆய்வுகள் மேற்கொண்டு சென்னை மாநிலத்திற்குச் சொந்தமான இடத்தில் அணை கட்டூவதற்காக இடத்தை தேர்வு செய்யப்பட்டுப் பணிகளைத் தொடங்குவதற்கோ திரு-கொச்சி அரசு இசைவு தர மாட்டார்கள் என எனக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மாறாக, இப்பகுதிகளிலிருந்து உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்கின்ற நதிகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவும் திரு-காச்சி மாநிலத்தின் இரண்டாவது ஐந்தாண்டு தீட்ட வரைவுகளில் சேர்க்கப்படவில்லை. ஆகையால் இத்தகைய திட்ட செயல்பாட்டு நிறைவுகளுக்கு இவ்விரு தாலுகாக்களும் சென்னை மாநிலத்திற்கு மிகவும் தேவையான பகுதிகள் என்பதால் இவைகளைச் சென்னை மாநிலத்துடன் இணைத்திட வேண்டும். மேலும் இரண்டு தாலுகாக்களைக் குறித்து இங்கே சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. அதில் ஒன்று சென்னை மாநிலத்தைச் சார்ந்த கோயம்பத்தூர் மாவட்டத்துடனே ஒட்டிக்கிடக்கின்ற சிற்றூர் தாலுகாவைக் குறித்ததாகும். இதில் கோயம்பத்தூர் மாவட்டத்தை ஒட்டி நிற்கின்ற கிராமங்களையும் சென்னை மாநிலத்துடன் இணைத்திட வேண்டும். இக்கிராமங்கள் திரு-கொச்சி மாநிலத்தின் பாகங்கள் என இது காறும் எவரும் கூறவுமில்லை, உரிமை கோரவும் இல்லை.

மற்றது நெய்யாற்றங்கரைத் தாலுகாவைக் குறித்ததாகும். இத்தாலுகாவைப் பொறுத்தமட்டும், அது முழுவதும் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் அடங்குகிறது. இத்தொகுதியிலிருந்து எங்களது வேட்பாளர் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் எங்கள் பிரதிநிதியாக இருக்கிறார். தவிரவும் எராளமான கிராமங்களில் எங்களது ஆட்சியின் கீழ்ப் பல பஞ்சாயத்துக்கள் இயங்கி வருகின்றன. 1951-ம் ஆண்டு அங்கு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் உண்மைக்குப் புறம்பான அரசு நடவடிக்கைகளையெல்லாம்
நாங்கள் எதிர்த்துள்ளோம். மக்கள் ஏதாகை ஆய்வு வேளையில் அதிகாரிகளுக்குச் சரியான தகவல்களை அச்சமின்றி அளித்திட வேண்டி மக்களுக்கு அதைக் கற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் முயற்சித்த போது, எங்களது தலைவர்களையெல்லாம் அரசு கைது செய்து, போலீஸ் சட்டத்தின் கீழ் வழக்கு. தொடர்ந்தனர். இப்பகுதிகளில் திரு-கொச்சி மாநில அரசின் செயல்பாடுகள் அனைத்தும் தேவிகுளத்தைப் போன்றே உள்னள. ஆகையால் தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்ற மேற்படித் தாலுகாவையும் சென்னை மாநிலத்துடன் இணைத்துவிட வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
இறுதியாக, எங்கள் பகுதிகளில் நிலவுகின்ற மனித உரிமைப் பிரச்சினைகளைக் குறித்து பரிசீலிக்கவும் வேண்டுகிறோம். நீங்கள் தேவிகுளம் தாலுகாவுக்குச் சென்று அங்கே வளர்க்கப்பட்டிருக்கின்ற தேயிலைச் செடிகளையைல்லாம் கேட்டூப்பாருங்கள். அவைகளையெல்லாம் தங்களது பிஞ்சுக் கரங்களால் தமிழர்கள் எவ்வாறு நட்டனர் எனவும் தங்களது நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி எவ்வாறு அவைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சினர் என்றும், தங்களது எலும்பையும் குருதியையும் காணிக்கையாக்கி அவைகளுக்கு எவ்வாறு உரமிட்டனர் என்பனவற்றையைல்லாம் உங்களுக்கு அவைகள் கூறும். தவிரவும் அப்பிரதேசங்கள் அனைத்தும் தமிழர்களுக்குச் சொந்தமான நாடு என்பதையும் உங்களுக்கு அவைகள் எடுத்தியம்பும். தென்பகுதித் தாலுகாக்களைப் பொறுத்தமட்டிலும் எனதருமை நண்பரான திரு.தாமஸ் கூறினார், தோவாளைத் தாலுகாவில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் களமிறக்கப்பட்ட சட்டமன்ற வேட்பாளர் வெற்றிவபறவில்லை என்று. ஆனால் திருவிதாங்கூர் தமிழ்நாடூ காங்கிரஸ் நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதியில் களமிறக்கி போட்டியிட வைத்த வேட்பாளர் பெருவாரி வாக்குகள் பெற்று அமோக வெற்றியடைந்த நான் இங்கே வந்துள்ளேன். இப்பாராளுமன்றத் தொகுதியில் மேற்படித் தோவாளை சட்டமன்றத் தொகுதியும் அடங்குகிறது என்ற உண்மையை நண்பர் அறிதல் வேண்டும். தவிரவும் நண்பருக்கோ அல்லது அவர் சார்ந்த அரசியல் கட்சிக்கோ திருவிதாங்கூர் தமிழ்நாடு கட்சியின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுவதற்கு ஒரு வேட்பாளரைக் கூட அங்கே களமிறக்க இயலாத நிலையில், அவர் தோவாளையைக் குறித்துப் பேசுவதில் எவ்வித நியாயமும் இல்லை. எனவே இது ஒரு மனித நேயம் சார்ந்த பிரச்சினையாகும். ஆகையால் இப்பிரச்சினையின் உண்மைகளைலயல்லாம் கருத்தில் காண்டு அதற்குகந்த தீர்ப்பை வழங்கிடுமாறு இவ்வவையை விரும்பி வேண்டிக் கொள்கிறேன்

மூன்றாம் பேருரை 1956 - ஜுலைத் திங்கள் 26 -ம் தேதி

திரு. நேசமணி : இந்திய அரசியல் தேசப்படத்தைத் திருத்தி அமைப்பதில் கூட்டுக் குழுவினர் சிறப்பு மிக்க பணியாற்றியுள்ளனர். ஆனால் எனது குற்றச்சாட்டுகள் யாதைனில், இவர்கள் ஏனைய மாநிலங்களின் எல்லைக்கோடுகளைத் திருத்தியமைக்கும் தருணங்களில் ஒரே சீரான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதேயாகும். குறிப்பிட்டுக் கூறுவதாயின், செங்கோட்டைத் தாலுகாவைக் குறித்து சிலவற்றை நான் கூறித்தான் ஆக வேண்டும். திருவிதாங்கூர் - கொச்சியைச் சார்ந்த இத்தாலுகாவைச் சென்னை மாநிலத்துடன் இணைத்து விடலாமைன்று பரிந்துரைக்கப்பட்டுள்து. திருவிதாங்கூர் - கொச்சியைச் சார்ந்த தமிழ்த் தாலுகாக்களின் தலைவிதியை நிர்ணயம் செய்கின்ற கூட்டுக் குழுவில், அப்பிரதேசங்களைச் சார்ந்த எவரையும் பிரதிநிதியாகச் சேர்த்துக் ககாள்ளாமல், ஒரு தலைபட்சமாக முடிவெடுத்திருப்பது துரதிஷ்டமானதே. எங்களுடன் கலந்து ஆலோசிக்காமலும், எங்களது அறிவுக்குக் கொண்டு வராமலும், திருவிதாங்கூர் - கொச்சி மாநிலம் மற்றும் சென்னை மாநிலங்களுக்கிடையே தன்னிச்சையாகச் செய்து கொண்ட ஒப்பந்தம் எங்கள் தலையின் மேல் கைவைப்பது போன்றதாகிவிட்டது. தவிரவும் கூட்டுக் குழுவினரால் இப்பெருமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அனேகக் காரியங்களை இங்கே விவாதித்து முடிவு எடுப்பதற்கு முன்னதாகவே அவைகள் யாவும் முடித்துக் கொள்ளப்பட்ட முடிவுகளாகவே காட்சி தருகின்றன.

தென் மாநிலம் (தக்காணப் பிரதேசம்) என்ற தனது கொள்கைக்கு நேர்ந்த கருத்து வேற்றுமைகளாலும், தமிழ்ப் பகுதிகளான தேவிகுளம்-பீர்மேடு பகுதிகள் தங்களுக்கு இல்லை என ஜனவரித் திங்கள் 16-ம் நாள் நடுவண் அரசு அறிவித்து விட்டதாலும் ஏமாற்றமடைந்த சென்னை மாநிலம் அதன்முன் வைக்கப்பட்ட இதர பிரச்சனைகளின் பால் எத்தகைய அக்கரையுமின்றிச் செயல்பட்டு, அவைகள் அனைத்திற்கும் "ஆமாசாமி"" - போட்டு விட்டனர். "செங்கோட்டைத் தாலுகா, சென்னை மாநிலத் திருநெல்வேலி மாவட்டத்தின் பாகங்களால் சூழப்பட்டிருப்பதாலும் மக்கள் தொகையில் 93 விழுக்காட்டினர் ,தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாக இருப்பதாலும், அதன் நில இயல்புகளாலும், பிறசார்பு நிலைகளாலும் முற்றிலுமாகத் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்து நிற்கின்றபடியால் அத்தாலுகா திருநல்வேலியுடன் இப்பொழுது இணைக்கப்படவேண்டும்"". என மாநிலங்கள் புனரமைப்புக் குழு பரிந்துரைத்துள்ளது.
"நில இயல்புகளாலும், பிற சார்பு நிலைகளாலும் அது திருநல்வேலிக்கு உடமைப்பட்டது" என்ற சொற்றொடரை இங்கே கோடிட்டு காட்ட விரும்புகிறேன். தமிழ் பிரதேசங்களான தேவிகுளம்-பீர்மேடு பகுதிகள் மதுரை மாவட்டத்துடன் இணைக்கப்பட வேண்டிய உரிமையினை மறுத்து நடுவண் அரசு ஜனவரித் திங்கள் 16-ம் நாள் பிரகடனம் வெளியிட்ட உடனே அரசியல் கட்சிகள் தங்களது வேறுபாடுகளைக் கருதாமல் தமிழ்நாடு முழுவதும் நடந்த எழுச்சி ஆர்ப்பாட்டங்களைலயல்லாம் "முட்டாள் தனமானது" என்று

அவ்வேளையில் கூறப்பட்டது. ஆனால் இச்சொல்லானது தமிழ் மக்களின் மேல் கூறப்பட்ட இழிச்சசால் என்ற உண்மையை நாம் மறைப்பதற்கில்லை. தவிரவும், மாநிலத்திற்கு மாநிலம், எல்கைக்கு எல்லைகளில், மாநிலங்கள் புனரமைப்புக் குழுவினரது செயல்பாடுகள் மாறுபட்டு நிற்பதால் நாங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். "மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்கு பாகம் வரை வியாபித்துக் கிடக்கின்ற செங்கோட்டைத் தாலுகாவின் மேற்கு பாகங்கள்" என்ற சொற்றொடரே ஜனவரித் திங்கள் 16-ம் நாள் வெளியான அரசு அறிவிப்பில் எடுத்தாளப்பட்டுள்ளது. பின்னர் இச்சபையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட முன்மாழிவில் அசசொற்வறாடர்கள் மாற்றப்பட்டு "புளியறை மலைப்பகுதி" என்று சொல்லப்பட்டூள்ளது. இந்த மசோதா, கூட்டுக் குழுவின் பரிசீலனைக்குச் சென்ற வேளையில், இப்பகுதிகளைக் குறித்த நில இயல் உட்கூறுகளைக் குறித்து நன்கு தெரிந்தவர்கள் எவரும் அக்குழுவில் அங்கத்தினராக இல்லை. இதுவும்

நல்லதனக் கருதிய கூட்டுக் குழுவினர் "புளியறை நீங்கலானப் பகுதி" என்பதை அதில் சேர்த்துக் கொண்டனர். இந்த நீக்க நடவடிக்கை ஜுலைத் திங்கள் 2-ம் நாள் நடந்துள்ளது.
கூட்டுக் குழுவினரின் அறிக்கையில் நான்காவது பக்த்தில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. "ஜூலை முதலாம் நாள் திருவிதாங்கூர் - கொச்சி அரசு தண்ணீர் வடிவுப் பிரதேசம் உட்பட தனது நாட்டுப் பாகங்களில் சிலவற்றைத் தொட்டடுத்த தாலுகாவுடன் இணைத்துக் கொண்டனர்"" என்றது. இதனால் திருக்கொச்சி அரசு, கூட்டுக் குழுவினரால் ஆய்ந்தறிந்து பிறப்பித்த ஒரு காரியத்திற்கு உலைவைத்து விட்டது. இதற்குச் சென்னை அரசும் தனது ஒப்புதலைத் தந்து விட்டது. இத்தகையச் செயல்கள் எல்லாம் யாருடையத் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. யாரோ ஒருவரின் மூளைக்குதற்கத்தால் இந்த "நீர்வடிக்கோட்டு முகட்டூக் கோடு" என்ற கற்பனைக் கோடூ உதயமாகியிருத்தல் வேண்டும். ஆனால் நில நேர்கோட்டுப் பாதையும், நில நிலைக் கோட்டுப் பாதையும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லைலயன்பதால் அதற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இத்தகைய கற்பனைக் கோடான "நீர்வடிமுகட்டுக் கோடு" எங்கேயிருக்கிறது? மலைத்தொடர்களைக் கொண்ட காட்டுப் பகுதியை இது குறிக்கிறதா? இந்த கோடு எங்கேயிருக்கிறது என்பதை யாரும் அறியார். எந்தெந்த பகுதிகள் எல்லாம் அவ்வாறு மாற்றப்பட்டுள்ளன என்பதையும் யாரும் அறியார். இவைகளை விடுத்து, இத்தாலுகாவின் ஒரு பகுதி அண்டைத் தாலுகாவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே அந்த அரசு குறிப்பு கூறுகிறது. ஜுலைத் திங்கள் இரண்டாம் நாள். அன்றுதான் புனரமைப்புக் குழு தனது ஆய்வுக்காக அமர்ந்து உள்ளது. இத்தகைய அழிப்பு செயல்களைத் துணிந்து செய்தவர்கள் நடுவண் அரசாக இருப்பினும்சரி, திருவிதாங்கூர்-கொச்சி அரசாக இருப்பினும் சரி, அவைகள் அனைத்தும் இவ்வவையின் உரிமையினை மீறியச் செயல்களாகும். இப்பிரச்சினை கூட்டுக் குழுவின் கவனத்திற்கு வந்த தருணத்தில் சென்னை அரசும், திருவிதாங்கூர் அரசும் தங்களிடையே ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு விட்டுக் கொடுத்த செயலே இது. குற்றவாளிகள் யாராக இருப்பினும் இச்செய்கை உயர்நீதிமன்றமாகிய இந்நாடாளுமன்றத்தை இழிவுபடுத்தி அதன் உரிமையை மீறியச் செயல் என்றே நான் துணிந்து கூறிக் கொள்வேன். இத்தகைய உரிமை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற தீர்மானத்தை நான் முன்மொழிந்திடும் அதே வேளையில், நாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் இத்தகையச் செயல்கள் எல்லாம் இம்மாமன்றத்தின் உரிமையை மீறுகின்ற செயலாகிறது. தவிரவும் நாட்டின் உயர்நீதிமன்றமாகிய பாராளுமன்றத்தை இழிவுபடுத்திய செயலுமாகிறது. தவிரவும் இதனால் மக்களின் உரிமைகளையயல்லாம் பண்டமாற்றம் செய்து விட்டது போன்றாகிவிட்டது. இதற்கு மக்கள் என்ன தவறு செய்தனர் என்பதை அறிய விரும்புகிறேன். தமிழ்ப் பகுதிகள் அனைத்தும் சென்னை மாநிலத்துடன் இணைய. வேண்டுமென்றே அவர்கள் கோரினர். சார்பு நிலைகளிலும். நில அமைப்பு நிலைகளிலும் இப்பகுதிகள் திருநல்வேலி மாவட்டத்தால் சூழப்பட்டுள்ளது என்று மாநிலங்கள் புனரமைப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது. நீர் வடிவு முகட்டுக்கோடு எங்குள்ளது? செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லுகின்ற இருப்புப்பாதை இவ்விடத்தினுடே ஊடுருவிச் செல்கிறது. ஆங்காங்கே மலைகள் விடுபட்டு நிற்கிறது. ஆனால் நீர் வடிவு முகட்கோடு எங்கிருக்கிறது? என்று தெரியவில்லை. மக்கள் எசல்ல முடியாத அளவிற்கு இப்பகுதிகள் அடர்த்தியான காடுகளால் நிறைந்தவைகளும் அல்ல. பல்வேறு சாலைகள் வாயிலாக இப்பிரதேசத்தை அடைவதற்கு முடியும். அத்தகையச் சாலைகளில் பெரும்பாலும் எசங்கோட்டை பக்கத்திலிருந்து செல்லுகிறதே தவிர, திருவிதாங்கூர் பக்கத்திலிருந்து எவையும் செல்லவில்லை. அவ்வாறிருக்கும்போது நீர்வடிவு முகட்டுக்கோடு என்பதன் பொருள் தான் என்ன? அவர்கள் கூறுகிறார்கள் நீர்வடிவு முகட்டுக்கோட என்று. அங்கே ஓர் ஆறு ஓடுகிறது, அதுவும் வேரறாரு ஆற்றின் கிளையாக ஓடுகிறது. அவ்விடத்திலுள்ள அனேகக் குன்றிலிருந்து தான் அது உற்பத்தியாகிறது. அது அச்சன்கோவில் ஆறு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆறு செங்கோட்டை தாலுகாவையும், கொல்லம் மாவட்டத்தையும் வேறுபடுத்துகின்ற எல்லைக் கோடாக அமைந்துள்ளது. இதுவே இன்றைய தண்ணீர் வடிமுகட்டூக் கோடாகக் கருதப்படுகிறது. இதைத் தவிர இன்எனாரு பெரிய நீரோடையும் அங்கே கீழ்நோக்கி ஓடிப் பிறிதாரு ஆற்றில் இணைகிறது. இதையும் நீர்வடி முகட்டுக்கோடாகக் கருதலாமே? இத்தகைய இருமலைகள் மற்றும் ஓடைகளுக்காக நீர்வடி முகட்டுக்கோடு தத்துவத்தைக் காண்டு வருவது விரும்பத்தகாததும், தேவையற்றதும் நியாயமானதும் அல்ல, இத்தவறு சரி செய்யப்பட வேண்டியதாகும். நடுவண் அரசின் உள்துறை இலாகா நீதிகாத்து இதை மறு பரிசீலனை செய்யும் என நம்புகிறேன். இத்தகைய நியதியற்ற செயல்களினால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எசங்கோட்டை வாழ் மக்களின் பொருளாதாரமும் இம்மலைகளைச் சார்ந்தே அமைந்திருக்கிறது. அவர்களின் விவசாயத்துக்குத் தேவையான பசுந்தாள் உரங்கள் இம்மலைகளிலிருந்து தான் கிடைத்து வருகிறது..அவர்களின் மேய்ச்சல் தலங்களும் இம்மலைகளில் தான் பரந்து கிடக்கின்றன. அவர்களின் உழவுத் தொழிலுக்கான உபகரணங்களும் இங்கிருந்து தான் செய்யப்படுகின்றன. அவர்களுக்குத் தேவையான எரி பொருளான விறகும் இம்மலைகளிலிருந்து தான் கிடைக்கின்றது. இத்தகைய முகட்டுக்கோட்டு பாகுபாட்டால் அவர்களது உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுகின்றன. தவிரவும் அவர்களை அவர்களது நாட்டைவிட்டு வெளியேறவும் சொல்லுகிறார்கள். இத்தகைய செயல்கள் அனைத்தும் நேர்மையில்லாத செயல்களாகும் எனக்கூறுவேன். எனவே இது மறு பரிசீலனைச் செய்யப்பட வேண்டியதாகும்.
நடுவண் அரசின் தூண்டுதலால் மட்டுமே இவ்விரு அரசுகளும், நீர்வடி முகட்டுக்கோடுகளைத் தங்களது எல்லைக் கோடுகளாக ஏற்றுள்ளனர். ஆனால் தேவிகுளமும், பீர்மேடும் எங்களுக்கு மறுக்கப்பட்ட தருணத்தில், அங்கே ஏன் இந்த "முகட்டுக்கோடு நீர்வடி" தத்துவத்தைக் கடைபிடிக்கவில்லை என மிகவும் கனிவுடன் கேட்கிறேன். நேரான கோடூகளால் தான் எல்கைகளை அமைக்க வேண்டூம் என்பது இக்குழுவின் தத்துவம் என்றாலும், மதுரை மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களின் எல்கைகளை நேராக்குவதற்காகத் தேவிகுளம் - பீர்மேடு தாலுகாக்களை எங்களுக்குத் தந்திருக்க வேண்டுமே? அவைகள் திரு-கொச்சியின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையானது என்றால், விலங்குகள் சரணாலயமாக மட்டும் உள்ள பெரியாறு நீர்தேக்க பள்ளத்தாக்கினை மட்டுமாவது ஏன் சென்னை மாநிலத்துடன் இணைக்கக் கூடாது? பரம்பிக்குளம் நீர்த் தேக்கத்தைக் குறித்த தகராறுகளை நடூவண் அரசு முழுவதுமாக அறிந்திருக்கிறது. இதன் நீர்ப் பிடிப்புப் பகுதிகள் அனைத்தும் சென்னை மாநில வரம்பிற்குள் இருக்கிறது. அதுபோன்ற பல அணைகளில் ஒன்று மட்டூமே திருவிதாங்கூர் - கொச்சி வரம்பிற்குள் வருகிறது. இருப்பினும், திரு-கொச்சியைச் சார்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும், குறிப்பாகப் பொதுவுடமைக் கட்சியினர், பி.எஸ்.பி.கட்சியினர், கே.எஸ்.பி.கட்சியினர், ஆர்.எஸ்.பி.கட்சியினர் போன்ற அனைத்தும் சென்னை அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து நின்று குரல் கொடுக்கின்றனரே. இத்திட்ட முன்னோடி ஆய்வுகளுக்காக, அவர்களின் எல்கை வழியாகக் கடந்துச் செல்வதற்கு எங்களை அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் கூறிவருகிறார்கள். இதுவே திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்தின் மனநிலை எனக் காணப்படுகிறது. தத்துவங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, செங்கோட்டையைப் பொறுத்த வரையிலும் நீர்வடி முகட்டுக்கோடு தான் அதன் எல்கையெனக் கூறுகின்ற கூட்டுக்குழு, தேவிகுளம்-பீருமேட்டைப் பொறுத்த மட்டும் அவ்வாறு நீர்வடிமுகட்டுக்கோடு தத்துவத்தைலயல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அப்பகுதிகளை முழுவதுமாகத் திருவிதாங்கூர்-காச்சி மாநிலத்திற்குத் தரப்பட வேண்டும் என கூறுகிறது. இத்தகைய முடிவில் எத்தகைய ஞானமும் அடங்கி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
அதன் நான்காவது சரத்திலும் பெரும் பாதகம் ஒன்று மீண்டும் எங்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ளது. நான் குறிப்பிடுவது, மாவட்டங்களை உருவாக்குவதற்கான அதிகாரங்களைத் தத்தம் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதைக் குறித்தாகும். கூர்க் பகுதியைப் பொறுத்தமட்டிலும், அதே போன்று அஜ்மீரைப் பொறுத்த மட்டிலும் அவைகள் தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், 800 சதுர மைல்கள் பரப்பளவு கொண்டதும், 8.5 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டதுமான நான்கு எதன் தாலுகாக்களை, தற்பொழுது பெரும்பரப்பளவைக் கொண்ட திருநல்வேலி மாவட்டத்துடன் இணைத்துவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு, தொலைத்தொடர்பு வசதிகள், மருத்துவ சேவைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நிர்வாக வசதிக்காக இந்த நான்கு தாலுகாக்களையும் உள்ளடக்கிய ஒரு தனி மாவட்டமாக ஏன் இதை உருவாக்க முடியாது என்பதைக் குறித்து யாரும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. உண்மை நிலையினை அவர்கள் உணர்ந்திராத நிலையாலேயே அதைக் குறித்து ஆராய்வதற்கு எவரும் அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு மாநிலத்திற்கும் மற்வறாரு மாநிலத்திற்குமிடையே ஓரவஞ்சனையுடைய வேறுபாடுகளை இவ்வறிக்கையின் அனைத்துப் பக்கங்களிலும் காண முடிகிறது. ஒரு பொது நியதியைக் கடைபிடிக்கும் தருவாயில் அந்நியதியை ஏற்றுக்கொண்டு அணுகளவும் பிசகாமல், அனைத்து மாநிலங்களிலும் அதைக் கடைபிடித்தல் வேண்டும். ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகின்ற போக்கு அங்கே கையாளக் கூடாது.
சிறுபான்மையினரைப் பொறுத்தமட்டிலும் திரு.பிராங் அந்தோனி அவர்கள் கூறிய கருத்துக்களை முழுமையாக நானும் ஆதரிக்கிறேன். தற்போது மாநிலங்கள் புனரமைப்பு ஒழுங்குகளின் அடிப்படையில் எங்களது பகுதிகள் சென்னை மாநிலத்துடன் இணைகிறது. ஆயினும் பத்து லட்சங்களுக்கும் அதிகமான தமிழர்கள் திருவிதாங்கூர் - கொச்சி நாட்டில் இன்னும் விடப்பட்டிருக்கின்றனர்.

திரு.அச்சுதன் கங்கனர்: அப்படியானால் நான்கு தாலுக்களிலுமுள்ள மலையாளிகளின் நிலைகள் தான் என்ன?

திரு.நேசமணி: அவசரப்பட வேண்டாம். நான் அதற்கும் வருகிறேன். உங்களது உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும். எவைகளையல்லாம் அங்கே எங்களுக்கு வேண்டுமைன்று கோருகின்றோமோ, அவைகள் அனைத்தும் மலையாளிகளுக்கும் தரப்படும் என்பதைக் கூறிக் எகாள்வேன். எங்களது பிள்ளைகளுக்கு அவர்களது தாய்மொழியான தமிழில் கல்வி கற்பதற்கு மலையாள அரசு இணக்கம் தரவில்லை என்ற கசப்பான அனுபவங்கள் எங்களுக்கு உண்டு. அதன் பின்விளைவு தமிழைத் தாய் எமாழியாகக் கொண்ட தமிழர்கள் அனைவரும் மலையாளிகளாக்கப்பட்டனர். அதற்கு எதிராகவும் நாங்கள் போராடினோம். அதன் பயனாகக் கடந்த நாலாண்டூ காலங்களாக மலையாள மொழியைக் கற்றுக் கொடுத்து வந்த பள்ளிகள் அனைத்தும் தமிழ் பள்ளிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. தமிழ் மொழியைக் கற்பதற்கு வழிவகைகள் செய்யப்படாமையால், ஒரு காலத்தில் தமிழர்கள் அனைவரையும் மலையாள மொழியைக் கற்பதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். வழிவகைகள் செய்யப்பட்ட உடனே தங்களது தாய்மாழியைக் கற்கத் தொடங்கியது போன்று, திரு.பிராங்கு அந்தோனி கூறியது போன்று அனைவரும் தங்களது தாய்மாழியைக் கற்பதற்குத் தேவையான வழி முறைகளை சட்ட வரைவிலும், வழி வகைகள் செய்யப்பட வேண்டும். இப்பாறுப்பை உள்ளூர் ஆளுனரிடமோ அல்லது மண்டலக் குழுவினரிடமோ ஒப்படைத்து விடக் கூடாது. சிறுபான்மையினரின் கல்வி மற்றும் கலாச்சாரங்களைப் பொறுத்தமட்டில் அதற்குப் பாதுகாப்பு அளித்திடும் வகையில் இந்த சட்ட முன்எமாழிவிலேயே உகந்த பாதுகாப்புச் சரத்துக்களைக் கட்டாயமாக உள்ளடக்கியதாக அது இருத்தல் வேண்டும்.
தென் தாலுகாக்களின் வழக்குரைஞர்களைலயல்லாம் திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது மாநிலங்கள் புனரமைப்பு முன்மொழிவு சட்டத்தில் ஒரு குறை என்பதால், நான் இது குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு விளக்கி, அத்தகைய சரத்துக்கு ஒரு திருத்த சரத்தை முன்மொழிந்துள்ளேன். அந்த திருத்தப் பிரனையை உள்துறை அமைச்சகம் உரிய கவனத்தில் எடுத்துக் கொள்ளூம் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு நேசமணி உரையாற்றினார்.

இப்படி தமிழக நிலப் பகுதி மீட்புக்காக, தமிழர் நலனுக்காக நேசமனி தனிமனிதராக மட்டும்தான் பேசினார். அன்றைய நாடாளுமன்ற எம்.பி.க்கள் ஒருவர் கூட நேசமணிக்கு ஆதரவாக இல்லாமல் போனது தமிழர் வரலாற்றின் பெருந்துரையமாகும்.

நன்றி: பி.எட்வர்ட் ஜெனி, செயலாளர் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம்.

English summary
Here is Marshal Nesamony MP's speech in Lok Sabha Discussion on States Reorganisation Commission in 1955.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X