• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யார் இந்த "செல்லம் சார்.." கேட்டதெல்லாம் அள்ளித் தரும் "கடவுள்.." குபீர் ஃபேமசால் குலுங்கும் இணையம்

Google Oneindia Tamil News

சென்னை: விடுதலை புலிகள் இயக்கத்தை, உண்மைக்கு மாறாக, சித்தரித்ததில் பெரும் விமர்சனங்களை ஒரு பக்கம் பெற்றாலும், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள, தி பேமிலி மேன் 2 ( The Family Man 2) வெப்சீரிஸ் வணிக ரீதியாக ஹிட் அடித்துள்ளது.

சர்ச்சைகள் காரணமாகவும், தி பேமிலி மேன் 1 சக்சஸ் காரணமாகவும், திரில்லர் கதையமைப்பு, பிரமாண்டம் போன்றவற்றின் காரணமாக, 2வது பாகத்தை அதிக ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

மனோஜ் பாஜ்பாயி நடித்துள்ள ஸ்ரீகாந்த் கதாப்பாத்திரம்தான் ஹீரோ என பலரும் நினைத்து வெப்சீரிசை பார்க்க ஆரம்பித்தால், நிஜ ஹீரோ நம்ம "செல்லம் சார்தான்" (ChellamSir).

இந்தி எங்கே.. ஏன் இவ்வளவு தமிழ்?.. வடஇந்தியர்களிடம் வறுபடும் தி பேமிலி மேன் 2.. வலுக்கும் எதிர்ப்பு!இந்தி எங்கே.. ஏன் இவ்வளவு தமிழ்?.. வடஇந்தியர்களிடம் வறுபடும் தி பேமிலி மேன் 2.. வலுக்கும் எதிர்ப்பு!

யார் இந்த செல்லம் சார்

யார் இந்த செல்லம் சார்

கதைப்படி, சென்னையைச் சேர்ந்த செல்லம், ஓய்வு பெற்ற, தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) அதிகாரி. தற்போதைய புலனாய்வு அதிகாரிகள், மரியாதை காரணமாக, இவரை செல்லம் சார் என்று அழைப்பதால், அந்த பெயர் ரிஜிஸ்டர் ஆகிவிட்டது.

அதகள என்ட்ரி

அதகள என்ட்ரி

வேட்டி கட்டிக் கொண்டு, மஞ்சள் பையுடன், கோவிலில் சாமி கும்பிட்டபடி என்ட்ரி கொடுப்பார் செல்லம் சார். ஆள் பார்க்க கிராமத்து சாயல்ல இருக்காரே, ஏதோ அப்பா கேரக்டர் போல என ரசிகர்கள் நினைக்கும் அடுத்த நொடி முதல் விஸ்வரூபம் எடுத்துவிடுவார் நம்ம செல்லம் சார். இன்கம்மிங் காலுக்கு ஒரு போன், அவுட் கோயிங் செய்ய இன்னொரு போன் என மஞ்சள் பைக்குள், பெரும் ராணுவ ரகசியத்தையே ஒளித்து வைத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போவார்கள். அதிலும், சிம்மை கழற்றி, நடந்து போகும் பெண்ணின் பைக்குள் அசால்ட்டாக வீசி திரும்பும்போது.. ப்பா.. இவருகிட்ட என்னவோ இருக்கு என ரசிகர்களும் சீட்டின் நுனிக்கு வந்துவிடுவார்கள். அப்போது தொடங்கி, சீரிஸ் முழுக்க எப்போதுமே செல்லம் சார் அட்ராசிட்டிதான்.

அட்ரஸ்லாம் கேட்குறாங்கப்பா

அட்ரஸ்லாம் கேட்குறாங்கப்பா

என்னதான் சகல டெக்னாலஜி வசதிகளை புலனாய்வு அதிகாரிகள் வைத்திருந்தாலும், அவர்களுக்கு எது தேவையென்றாலும், அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் என்பதை போல, "யப்பா.. அந்த செல்லம் சாருக்கு ஒரு போனைப்போடு" என்றுதான் குரல் எழுகிறது. அதுவும்.. ஹோட்டலுக்கு அதிகாரிகளை வரச் சொல்லிவிட்டு, நாளிதழ் ஒன்றில், சமந்தா அட்ரசை எழுதி அங்கேயே வைத்துவிட்டு திரும்பி பார்க்கும் முன்பாக, திடீரென மாயமாகும் சீன்லாம் கூஸ்பம்ப்.

தெரிக்கும் மீம்ஸ்

தெரிக்கும் மீம்ஸ்

இப்படி, கேட்போருக்கு கேட்ட வரம் கொடுக்கும் செல்லம் சார்தான், இப்போ டுவிட்டரில் டிரெண்ட். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்ல, வட இந்திய ரசிகர்களும் வரிந்து கட்டி செல்லம் சாருக்காக போற்றிப்பாடடி பெண்ணே என மீம் போடுகிறார்கள். நடமாடும் கூகுள் என வர்ணிக்கிறார்கள். இதோ பாருங்கள், தெறிக்கும் மீம்ஸ்களை.

விக்கிபீடியா

விக்கிபீடியா

அமெரிக்கா வேண்டுமானால் விக்கிபீடியா இருப்பதாக பெருமையடிக்கலாம். ஆனால் இந்தியாவிடம் செல்லம் சார் இருக்கிறார் என்கிறார் இந்த நெட்டிசன்.

தெய்வம் மாதிரி

தெய்வம் மாதிரி

ஹீரோவுக்கு எப்போல்லாம் என்ன தேவை என்றாலும், கடவுள் மாதிரி செல்லம் சார் வந்து காட்சியளிக்கிறார். கேட்ட வரம் கொடுக்கிறார்.

குழந்தைகளுக்குத்தான் கூகுள் தேவை

குழந்தைகளுக்குத்தான் கூகுள் தேவை

குழந்தைகளுக்குத்தான் கூகுள் தேவை. லெஜன்ட்களின் தேர்வு செல்லம் சார்தான். இது எப்படி இருக்கு பாருங்க. நிஜமாகவே அவர் நடமாடும் கூகுள்தான்.. அதற்கும் மேல்தான்.

வேற லெவல் மீம்

வேற லெவல் மீம்

இது வேற லெவல் மீம். செல்லம் சாருக்கு மட்டும்தான், பிஎம் கேர் நிதி எதற்கு பயன்படுத்தப்பட்டது என்ற அனைத்து தகவல்களும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறதாம்.

கூகுள் வேலை செய்யாது

கூகுள் வேலை செய்யாது

அட.. கடவுளுக்கு தெரியும்ப்பா.. இன்டர்நெட் இல்லாத இடத்தில் கூகுள் வேலை செய்யாதுன்னு. அதனால்தான் செல்லம் சாரை படைத்து விட்டுளஅளார்.

புரஃபசர் கேரக்டர்

புரஃபசர் கேரக்டர்

நெட்பிளிக்சின் புகழ் பெற்ற மனி ஹெய்ட் சீரிசின் புரஃபசர் கேரக்டர் ஏக பிரசித்தி. அப்படித்தான், இந்த வெப்சீரிசுக்கு செல்லம் சார் என்கிறார்கள். புரஃபசரும் மூளையை வைத்து கபடி, கதகளி என எல்லாமே, ஆடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
ChellamSir Memes: Amazon Prime Video’s The Family Man 2 has become a huge hit and the character Chellam sir, played by Uday Mahesh become famous in internet. Chellam sir is a retired member from NIA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X