For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்தபடியாக, 2017ன் "ஜாலி விருது"களைப் பெறும் தலைவர்கள்.. ஒரு கலகல கலாட்டா!

2017ம் ஆண்டு வருட முடிவில் இருக்கும் இந்த சமயத்தில் இந்த ஓராண்டில் தமிழக அரசியலில் பல அதிரடி பேச்சுகளை அள்ளிவிட்ட அரசியல்வாதிகள் அவர்களுக்கு ஏற்ப பொருத்தமாக என்ன விருது கொடுக்கலாம்

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    2017ன் ஜாலி விருதுகளை வாங்குபவர்கள் இதோ- வீடியோ

    சென்னை : 2017ம் ஆண்டு வருட முடிவில் இருக்கும் இந்த சமயத்தில் இந்த ஓராண்டில் தமிழக அரசியலில் பல அதிரடி பேச்சுகளை அள்ளிவிட்ட அரசியல்வாதிகள் அவர்களுக்கு ஏற்ப பொருத்தமாக என்ன விருது கொடுக்கலாம் என்று ஒரு ஜாலியான கலாட்டா. வாசகர்களுக்காக ஒரு பொழுதுபோக்கு நோக்கத்துடனே இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.

    ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கருணாநிதியும் அரசியல் அரங்கில் இல்லாத நிலையில் தமிழகம் தினம் ஒரு திருப்பத்தை கண்டு வருகிறது. அதிலும் அரசியல்வாதிகளின் பேச்சுகள் ஒராண்டாக செம என்டர்டெயின்மென்ட்டாக இருந்து வருகிறது.

    அரசியல்வாதிகள் தமிழகத்தில் அரங்கேற்றிய விஷயங்கள், அவர்களின் பேச்சுகளுக்கு ஏற்ப ஒரு விருதை கொடுத்து விடுமோ. கட்சி பாகுபாடு இல்லாமல் அவரவர்க்கு ஒரு விருதை கொடுத்து விடுவோம். இந்த ஆண்டு மீம்ஸ், ஜோக்ஸ் என்று வஞ்சனை இல்லாமல் கான்செப்ட்டுகளை அள்ளித் தந்த அரசியல் தலைவர்களின் பேச்சுகளும் அவர்களுக்கான விருதுகளும் இதோ.

    கிணறு தந்த வள்ளல் விருது

    கிணறு தந்த வள்ளல் விருது

    அதிமுகவில் அமைச்சர்கள் தான் வாய்க்கு வந்தபடி பேசினார்கள் என்றால், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார் முதல்வர் பழனிசாமி. அதனால் அவருக்கு சேக்கிழார் விருதும், தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் கிணறு விவகாரம் பூதாகரமெடுக்க ஊர் மக்களுக்கே கிணற்றை கொடுப்பதாக சென்ன துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிணறு தந்த வள்ளல் பட்டத்தையும் வழங்கிவிடுவோம்.

    சிறந்த வேதியியல் ஆராய்ச்சியாளர் விருது

    சிறந்த வேதியியல் ஆராய்ச்சியாளர் விருது

    இந்த ஆண்டின் சிறப்பே அமைச்சர்கள் பலர் விஞ்ஞர்னிகள் அவதாரம் எடுத்தது தான். இதில் சிறந்த விஞ்ஞானி யார் என்றால் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தான். இவர் வைகை ஆற்று நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மகோல் போட்டு மூடி உலக அளவில் ஃபேமஸ் ஆனார். அடுத்தபடியாக நொய்யல் ஆற்று நீர்நுரைத்துப் பொங்க மக்கள் சோப்பு போட்டு குளிப்பது தான் காரணம் என்று சொன்ன சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தான் சிறந்த வேதியியல் ஆராய்ச்சியாளர்.

    நம்பினால் நம்புங்கள் விருது

    நம்பினால் நம்புங்கள் விருது

    ஆவின் பால் தவிர தனியார் நிறுவன பால்கள் அனைத்திலும் கலப்படம் இருப்பதாக கூறினார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஆனால் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை கூறுகிறார் என்ற தனியார் பால் நிறுவனங்கள் நீதிமன்றம் மூலம் வாய்ப்பூட்டு போட்டன. இவர்களாவது தங்களது துறை சார்ந்த கருத்துகளை தெரிவித்தனர். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு படி மேலே போய் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது இட்லி சாப்பிட்டார் என்று சொன்னதெல்லாம் பொய் எங்களை மன்னித்துவிடுங்கள் மக்களே என்றார் பாருங்கள்.

    பொன்மொழி நாயகனுக்கான விருது

    பொன்மொழி நாயகனுக்கான விருது

    தினசரி செய்தி சேனல்களில் தோன்றி எதிரிகளை பொன்மொழி கூறியே கொல்பவர் அமைச்சர் ஜெயக்குமார். எந்த பிரெஸ் மீட்டாக இருந்தாலும் அதில் நிச்சயம் ஒரு பொன்மொழி இருக்கும். இமயமலையை எதிர்த்த சிறு கற்களுக்கு வெற்றி கிடையாது, அத்தைக்கு மீசை முளைக்கட்டும் என்று ஒவ்வொரு பேட்டியிலும் கான்செப்ட்டிற்கு ஏற்ப பொன்மொழியை அவிழ்த்து விடுவார்.

    அதிரி புதிரி விருது

    அதிரி புதிரி விருது

    அமைச்சர்களின் பேச்சுகள் ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் பரபரத்துக் கொண்டிருக்க நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தின விழாவை மாற்றி கூறி சர்ச்சையில் சிக்கினார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். இதற்கு அடுத்தபடியாக திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் சீனியர் தலைவர் துரைமுருகன். தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்து அதிரி புதிரி செய்தார் அவர்.

    எவ்ளோ அடிச்சாலும் தாங்கும் விருது

    எவ்ளோ அடிச்சாலும் தாங்கும் விருது

    அரசியலில் பிப்ரவரி மாதத்தில் என்ட்ரி கொடுத்த டிடிவி. தினகரன், எதற்கும் அசராமல் கமென்ட்டுகளை தட்டிவிட்டார். ஐடி ரெய்டால் அவரது குடும்பத்தினர் பீதியில் இருக்க கூலாக கோ பூஜை செய்ததோடு, என்னை ஜெயிலில் போட்டாலும் 20 ஆண்டுக்குப் பிறகு வந்து அரசியலில் கோலோச்சுவேன் என்று தெரிவித்தார்.

    நானும் ரவுடி தான் விருது

    நானும் ரவுடி தான் விருது

    தமிழகத்தில் பாஜக மலரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பேசி வருகிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். மறைந்த அப்துல் கலாம் ஐயா சொன்ன வழியில் கனவு கண்டு கொண்டிருக்கும் அவர் தான் இந்த ஆண்டின் கனவு காணும் நாயகி. பாஜகவில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அடுத்தபடியாக பிரபலம் என்றால் அது தேசிய செயலாளர் எச். ராஜா. அண்மையில் இவர் சொன்ன ஒரு கமென்ட் தான் இப்போது ஹாட் டாபிக். வேட்டிய மடிச்சு கட்டினேன்னு வை நானும் ரவுடி தான் என்று இந்த ஆண்டில் பிரபலங்கள் பேச்சுகளுக்கு அளவே இல்லை.

    கடைசி வரியாக இதை சேர்த்துக்கொள்ளுங்கள்: வருட கடைசியில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பது மட்டுமே இந்த கட்டுரையின் நோக்கம். வேறு எதுவும் இல்லை மக்களே.

    English summary
    As 2017 is ending here is the jolly rating of popular personalities and special awards for them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X