• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

3 ரன்னில் நடையை கட்டிய தோனி.. மும்பையை சுருட்டிய சிஎஸ்கே.. கலந்துகட்டி கலக்கும் மீம்ஸ்

Google Oneindia Tamil News

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  Mumbai Indians-ஐ வீழ்த்தி பழிதீர்த்தது CSK.. Points Table-லும் முதலிடம்

  முதலில் பேட் செய்த சிஎஸ்கே ஆரம்பத்தில் தொடர்ந்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது. தோனி 3 ரன்களில் அவுட்டானார். ஆனால், வழக்கம்போல சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 88 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

  ரவிந்திர ஜடேஜா, 26, பிராவோ 8 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்ததால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே.

  சிஎஸ்கே உள்ளே.. சிக்கல் நிறைய இருக்கே.. இதையெல்லாம் அனுபவிக்கலாமா, வேண்டாமா.. ஆண்டவா! சிஎஸ்கே உள்ளே.. சிக்கல் நிறைய இருக்கே.. இதையெல்லாம் அனுபவிக்கலாமா, வேண்டாமா.. ஆண்டவா!

   சென்னை அணி வெற்றி

  சென்னை அணி வெற்றி

  இது ஒரு கவுரவமான ஸ்கோர் என்றபோதிலும், பெரிய ஸ்கோர் என்று கூறிவிட முடியாது. இருப்பினும், சென்னை அணியின் பந்து வீச்சும் சூப்பராக இருந்ததால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 136 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. பிராவோ 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சகார் 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

  ரோகித் ஷர்மா இல்லை

  ரோகித் ஷர்மா இல்லை

  மும்பை அணியில் சவுரப் திவாரி 50 ரன்கள் அடித்து நாட்அவுட்டாக இருந்தார். துவக்க வீரர் டி காக், 17 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். ஆனால் திவாரி மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியது வெற்றிக்கு உதவவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன. ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா போன்றோர் அணியில் இல்லாததால்தான் மும்பை தோற்றது என்று அந்த அணி ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

  வைரல் மீம்கள்

  வைரல் மீம்கள்

  இது ஒரு பக்கம் என்றால், சென்னை-மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர்பான இந்த போட்டிதொடர்பாக வைரல் மீம்ஸ்கள் சுற்றி வருகின்றன. அதுபோன்ற நகைச்சுவையுடன் கூடிய சில மீம்ஸ்களை நீங்களே பாருங்கள். யாருப்பா நீ.. இன்னும் 10 ஓவர் போடச் சொல்லுங்க. 20 ரன்ன அடிச்சி கொடுத்துடுறேன்னு சொல்ற.. என்று திவாரியின் ஆமை வேக ஆட்டத்தை புதுப்பேட்டை காட்சியோடு ஒப்பிட்டு கேலி செய்கிறது இந்த மீம்.

  சென்னை சூப்பர்

  சென்னை சூப்பர்

  முதல் 15 ஓவரில் சிஎஸ்கே மந்த கதியில் ஆடியதையும், அடுத்த 5 ஓவர்களில் விஸ்வரூபம் எடுத்ததையும், இரு படங்களை ஒப்பிட்டுச் சொல்கிறது இந்த மீம்.

  20 ஓவர் முடிந்து விட்டது

  20 ஓவர் முடிந்து விட்டது

  20 ஓவர் முடிந்து போச்சி. கிளம்பலாம் என்று திவாரியிடம், எதிர்முனையில் நின்ற பும்ரா ஞாபகப்படுத்தியிருப்பார் என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.

  தோனி குறைந்த ரன்கள்

  தோனி குறைந்த ரன்கள்

  மேட்ச்ச விடுங்க. பிராக்டிஸ் மேட்ச்ல 100 ரன் அடிச்சாரே என்று தோனி ரசிகர்கள், தோனிக்கு சப்போர்ட் செய்வதாக கிண்டல் செய்கிறது இந்த மீம். தோனி நேற்று, 3 ரன்களில் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

  தோனி நிலைமை

  தோனி நிலைமை

  ரன் அடிச்ச ருத்துராஜ் தோள்மேல கைபோட்டு எடுத்த போட்டோ இருக்கு விக்கெட் எடுத்த சஹாரவ பாத்து கேசுவலா சிரிச்ச வீடியோ இருக்கு இதுபோக நெட்பிராக்டீஸ்ல சிக்ஸு சிக்ஸா அடிச்ச ஆதாரம் இருக்கு இதைவச்சே கண்ணு ஹார்ட் கிட்னி எல்லாம் வின் பண்ணிருவேன்ல. 3 ரன்கள் மட்டுமே அடித்ததால், இவ்வாறுதான் தோனி பேசி சமாளிப்பார் என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.

  சார்பட்டா பரம்பரை

  சார்பட்டா பரம்பரை

  சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு பிறகு, அதிகமாக சுற்றுவது சார்பட்டா பரம்பரை தொடர்பான மீம்ஸ்தான். இதோ அப்படித்தான் ஒரு மீம்ஸ் சுற்றி வருகிறது பாருங்கள்.

  பாதி வந்திருக்கு

  பாதி வந்திருக்கு

  நெட் பிராக்டிஸ் செய்தபோது, அடித்த ரன்னில் பாதி 3 ரன்கள்தான் இப்போது வந்துள்ளது என்று தோனி அடித்த 3 ரன்களை கிண்டல் செய்கிறது இந்த ட்வீட்.

  English summary
  CSK and MI IPL Memes: Chennai Super Kings won the IPL match against Mumbai Indians by 20 runs yesterday. Viral memes have been circulating about the Chennai-Mumbai Indians match. See for yourself some memes with such humor.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X