For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Memes: எனக்கு வேற வழி தெரியலை ஆத்தா.. கிறுக்குப் பயபுள்ள.. உனக்கு வாசனை தெரியுதான்னு பாத்தேன்!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவுக்கு மட்டும் உயிர், உடம்பு, உணர்வு இருந்தா இன்னேரம் தற்கொலை செய்து கொண்டிருக்கும். அந்த அளவுக்கு மீம்ஸ் கிரியேட்டர்கள் வச்சு செஞ்சு கொண்டிருக்கின்றனர்.

கொரோனா உச்சம் தொடுவதை விட இந்த மீம்ஸ் கிரியேட்டர்களின் கிரியேட்டிதான் ரொம்பவே உச்சமாக இருக்கிறது. தொட்டதையெல்லாம் வச்சு மீம்ஸாக்கித் தள்ளிக் கொண்டுள்ளனர்.

வாசனை தெரியாமல் போனால் கொரோனா என்று சொன்னாலும் சொன்னார்கள்.. அப்பாடா எனக்கு வாசன் நல்லா தெரியும்.. அவர் வீட்டுப் பக்கம்தான் டெய்லி போறேன் வர்றேன்.. எனக்கு வராது என்று கலாய்த்துத் தள்ளி விட்டனர். அப்படிப்பட்ட கொடூர மற்றும் மொக்கையான சில மீம்ஸ்களைப் பார்த்து கொரோனா பயத்திலிருந்து சற்றே தெளிவு பெறலாம்.

புதுச்சேரி பாஜக மாநில செயலாளர் மகேந்திரனுக்கு கொரோனா.. கட்சி தலைமை அலுவலகம் மூடல் புதுச்சேரி பாஜக மாநில செயலாளர் மகேந்திரனுக்கு கொரோனா.. கட்சி தலைமை அலுவலகம் மூடல்

தோடு கூட வந்தாச்சு

தோடு கூட வந்தாச்சு

கொரோனாவை வச்சு என்னென்னவோ வந்து விட்டது. கொரோனா ஆட்டோ, கொரோனா ஹெல்மெட் என்று மக்கள் போய்க் கொண்டிருக்கும்போது இங்கு ஒருவர் கொரோனா தோடுடன் போஸ் கொடுத்து மக்கள் மனதில் பீதியை எப்படிக் கிளப்புகிறார் பாருங்களேன்.

எது பில்லா

எது பில்லா

உங்களுக்கு பீவர் இருக்கு. அது இருந்தா சளி, இறுமலும் இருக்கும். இந்தாங்க பில்லைக் கட்டுங்க என்று டாக்டர் கூற.. பீதியாகிப் போன பேஷன்ட்டோ ஜெர்க்காகி.. பில்லைக் கண்டு ஜெர்க்காகி.. நான் உங்க வீட்டு வாட்ச்மேன் டாக்டர். டீ வேணுமான்னு கேட்க வந்தேன் என்று ஓடுவதாக இந்த மீம்ஸ்.

யாரு சொன்னா அதை

யாரு சொன்னா அதை

ஓ பாசிட்டிவ் ரத்தம் இருந்தா அவர்களை கொரோனா தாக்காது என்று ஆய்வு முடிவு வெளியானதாக செய்திகள் வெளியாக, ஓ குரூப் ரத்தக்காரர்கள் கெத்து காட்ட ஆரம்பித்து விட்டனர். அவர்களில் ஒருவர்தான் இது.. எப்படி கெத்து காட்டுறார் பாருங்க.

ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான்

ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான்

வாசனை, சுவை தெரியாவிட்டால் கொரோனா அறிகுறி இருக்கலாம். இது ஒரு புது கண்டுபிடிப்பு. இதை வச்சு ஒரு மீம்ஸ். அதாவது கணவன்மார்கள் கடுப்பாகி விட்டார்களாம்.. நாங்க கல்யாணம் ஆன முதலே இப்படித்தானடா வாழ்கிறோம்.. அப்ப பத்து வருஷமா எங்களுக்கு என்ன கொரோனாவா என்று கொந்தளிக்கிறார்களாம்.

மூதேவி பிறந்த நேரம்

மூதேவி பிறந்த நேரம்

சென்னையில் பொது முடக்கத்தை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று டாக்டர்கள் குழு கூற, அதனால் கடுப்பான மக்கள், எல்லாம் இந்த மூதேவி (அதாவது 2020 வருஷம்) பிறந்த நேரம் என்று அதைப் போட்டு உதைக்கிறார்களாம். உண்மைதான்.. இந்த வருஷமே சரியில்லை.

செம ஐடியா

செம ஐடியா

இது செம ஐடியாதான். எல்லோரும் முகத்துக்கு முகமூடி போட்டுக்குவாங்க. ஆனால் இவர்களோ,, செல்போன் சார்ஜ் போட அந்த முகமூடியை தொட்டில் போல தொங்க விட்டு பயன்படுத்தியுள்ளனர். இப்படிப்பட்ட விஞ்ஞானிகள் இருந்துமா இன்னும் நாம மருந்து கண்டுபிடிக்கலை என்று வியக்கிறார் இவர்.

கிறுக்குப் பயபுள்ள

கிறுக்குப் பயபுள்ள

இது சூப்பர் காமெடி. என்னய்யா தண்ணி அடிச்சிருக்கியா, வாசனை வீசுது என்று மனைவி கேட்க, வாசனை தெரியலன்னா கொரோனா அறிகுறியாம்.. அதனாலதான் உன்னை செக் பண்றதுக்காக அடிச்சேன்டி கிறுக்குப் பயபுள்ள என்று இவர் சொல்கிறாராம்.

தெரியலை ஆத்தா

தெரியலை ஆத்தா

இது வேற லெவல் மீம்ஸ். இதுக்கும் கொரோனாவுக்கும் சம்பந்தமில்லை. ஊர்ப் பெயர்களை மாற்றினார்களா இல்லையா.. அதை வைத்துப் போடப்பட்ட மீம்ஸ். ரொம்பவே காமெடியா இருக்கு படிச்சுப் பாருங்களேன்.. நிஜமாவே இப்படித்தான் மாத்தணும் போல இதை.

English summary
Some selective memes about Corona in Tamil, just for laugh dont take it serious.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X