For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்கனுமா.. அப்போ 5 நிமிஷத்துக்கு ஒருவாட்டி நாள் ஃபுல்லா வெடிக்கலாமா சார்?

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி தினத்தில் மொத்தமே 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக கலாச்சாரப்படி காலையில் பட்டாசு வெடிப்பதுதான் வழக்கம் என வாதிடப்பட்டது.

இதைடுத்து காலை 1 மணி நேரம், இரவு 1 மணி நேரம் என பிரித்துக்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்பேரில் தமிழக அரசு அறிவித்த காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையுமான காலக்கெடு தவிர்த்து பிற நேரங்களில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான், கலாட்டா மீம்ஸ்கள் சுற்றி வருகின்றன.

பிரித்து, பிரித்து

ஒருநாளைக்கு 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க முடியும் என்பது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. அப்படியானால், 5 நிமிடங்களுக்கு ஒருமுறை என பிரித்துக்கொண்டு வெடிக்கலாமா என்று கேட்கிறது இந்த மீம்.

பள்ளிக்கூடங்கள் காலி

பட்டாசு வெடித்ததற்காக சிறுவர்களை சிறையில் தள்ளினால், பள்ளிக்கூடங்களே காலியாகிவிடுமே என்று சொல்கிறது இந்த மீம். உண்மைதானே..

நாளிதழ் செய்தி

பட்டாசு வெடித்ததற்காக, சிறுவர்களை கைது செய்தால், நாளிதழில் செய்தி வெளியாகும்போது, இப்படித்தான் இருக்கும் என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.

தனிப்படை

பட்டாசு வெடித்ததற்காக, சிறுவர்களை கைது செய்ய புறப்படும் தனிப்படை, எஸ்வி சேகர் மற்றும் எச்.ராஜாவை நீதிமன்றம் கைது செய்ய சொன்னபோது செய்யவில்லையே, என கேட்கிறது இந்த மீம்.

English summary
Deepavali crackers restriction move invites memes in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X