For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈபிஎஸ்க்கு இப்போது முதல் எதிரி டிடிவி அல்ல! டெங்கு கொசு தான்!

தமிழக அரசுக்கு டெங்கு காய்ச்சல் சவாலாக இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசுக்கு டெங்கு காய்ச்சல் சவாலாக இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் நாளுக்கு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மருத்துவ எமர்ஜென்ஸியை அமல்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்ற. இந்நிலையில் டெங்கு காய்ச்சல்தான் அரசுக்கு பெரிய சவால் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் அவற்றில் சில..

இப்படிக்கு டெங்கு கொசு

இதெல்லாம் எனக்கு "கொசு" மாதிரினு இனிமே யாரும் சொல்லமாட்டிங்கல்ல.... இப்படிக்கு....டெங்கு கொசு.. என கூறுகிறது இந்ம டிவிட்

டிடிவியை முந்திவிட்டது

ஆட்சியைக் கலைப்பதில் டிடிவியை முந்தி விட்டது டெங்கு கொசு என கலாய்க்கிறது இந்த டிவிட்

டெங்கு கொசுதான் முதல் எதிரி

ஈபிஎஸ்க்கு இப்போது முதல் எதிரி டிடிவி அல்ல! டெங்கு கொசு தான் என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்

தேங்காய் எண்ணெய்

டெங்கு கொசு கடிக்காமல் இருக்க தலைமுதல் கால்வரை தேங்கா எண்ணெய் தடவி கொள்ளுமாறு வருத்தப்படாத வாலிபர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.. என கூறுகிறது இந்த டிவிட்

கொசுவை ஏளனமாக பார்த்த..

கொசுவை ஏளனமாக பார்த்த நிலையிலிருந்து "டெங்கு கொசு" காய்ச்சல் வந்துட்டாலே கடைசியில் சங்கு ஊதிருவாங்களோ என்ற பதட்ட நிலைக்கு வந்துவிட்டோம்!!! என்கிறார் இந்த நெட்டிசன்

இன்னும் கண்டுபிடிக்கலயே

சுட்டி டிவில வர்ர டோரா கூட பக்கத்து ஊர கண்டு புடிச்சி போயிருது. இவனுங்களுக்கு டெங்குவ கண்டு புடிக்க தெரில இன்னும்.. என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்

டெங்கு யுத்தம் ஆரம்பம்

தர்ம யுத்தம் முடிந்தது... டெங்கு யுத்தம் ஆரம்பம்.. போதும்மடா சாமி.. என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்

அப்படி நினைத்திருக்குமோ டெங்கு

ஆட்சியையே சகித்தவர்கள் நம்மையும் சகிப்பார்கள் என நினைத்திருக்மோ டெங்கு? என கேட்கிறார் இந்த நெட்டிசன்

English summary
Dengue fever causes in Tamilnadu severely. Dengue death toll increasing day by day. Netizens making fun of Dengue mosquitoes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X