இப்போ என்ன நடந்து போச்சுனு... எல்லோரும் 20ம் தேதியே கல்யாணம் வச்சிட்டு இருக்காங்க!
சென்னை: ஆடி முடிந்து ஆவணியில் வரும் முதல் முகூர்த்தம் என்பதால் திருமண மண்டபங்கள் களை கட்டி இருப்பது மாதிரியே, சமூகவலைதளங்களிலும் திருமணம் பற்றிய மீம்ஸ்கள் அதகளம் செய்து வருகின்றன.
தமிழ் மாதங்களில் சில மாதங்கள் திருமணம் நடத்தக்கூடாது என்பது நமது மக்களின் நம்பிக்கை. அவற்றில் ஆடியும் ஒன்று. ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை சேர்ந்தே இருக்க விட மாட்டார்கள். இதில் எங்கே புதிதாகத் திருமணம் நடத்துவது. இதனாலேயே ஆடி முடிந்து ஆவணியில் வரும் முதல் முகூர்த்தம் ரொம்பவே பிஸியாக இருக்கும்.
அந்தவகையில் இந்தாண்டு ஆவணி மாத முதல் முகூர்த்தமாக இன்று(20ம் தேதி) அமைந்து விட்டது. எனவே, திருமண மண்டபங்கள் எல்லாம் களை கட்டி வருகின்றன. திருமண வீட்டாருக்கு வேண்டுமானால், அவர்களது வீட்டில் நடக்கும் ஒரு திருமணம். ஆனால் பத்திரிக்கை வாங்கியவர்களுக்கோ, இன்று பல இடங்களில் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம்.
ஞாயிற்றுக்கிழமை.. ஜாலியாக சாப்பிட்டு விட்டு வீட்டில் ரெஸ்ட் எடுக்கலாம் என நினைத்தால் இப்படி பத்திரிகையாக வைத்து இருக்கிறார்களே என்ற கடுப்பில் இருக்கிறார்கள் போலும் மக்கள். அதுவும் ஒன்றிரண்டு என்றால் பரவாயில்லை.. இப்படி டஜன் கணக்கில் பத்திரிக்கைகள் குவிந்தால் பிறகு கடுப்பாக மாட்டார்களா? அதனால்தான் லோன் வாங்கி மொய் எழுத வேண்டும் போலயே என சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
அப்படியே சைடு கேப்பில் நம் 90ஸ் கிட்ஸ்களையும் கலாய்க்கத் தவறவில்லை. இதோ அப்படியாக இணையத்தில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

























Click it and Unblock the Notifications