
நம்ம உடம்புல எங்கெங்க வலிக்குதுனு.. திங்கட்கிழமை வேலைக்கு கிளம்புறப்பத்தான் தெரியுது!
சென்னை: ஞாயிறு விடுமுறை அதற்குள் முடிந்து, மீண்டும் திங்கட்கிழமை வந்து விட்டதே என மீம்ஸ் போட்டு பீல் பண்ணுகிறார்கள் நெட்டிசன்கள்.

ரமணா ஸ்டைலில் சொல்வதென்றால், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்களாகட்டும், படித்து முடித்து வேலைக்கு போகிறவர்களாகட்டும்.. இன்னமும் நம்மில் பலருக்கு வாரத்தில் பிடிக்காத வார்த்தை என்றால் அது திங்கட்கிழமைதான். ஞாயிற்றுக்கிழமை நன்றாக ஓய்வு எடுத்தோமோ இல்லையோ, ஆனால் திங்கட்கிழமை வந்து விட்டாலே மனதளவில் இவர்கள் குழந்தை ஆகி விடுவார்கள்.

குழந்தைகள் மாதிரி வாய்விட்டு சொல்ல முடியாது என்பதால், திங்களைப் பற்றிய தங்கள் குமுறல்களை மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் கொட்டி வருகின்றனர் போலும். பிரியாணி, மீன் என கறி விருந்து மீம்ஸ் பகிர்ந்து ஞாயிறைக் கொண்டாடியவர்கள் எல்லாம், திங்கள்கிழமை காலை 'அதுக்குள்ள ஞாயிறு விடுமுறை முடிந்து விட்டதே..' என அதை திட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

இதோ அப்படியாக சில ஜாலியான திங்கட்கிழமை பற்றிய மீம்ஸ்கள் உங்களுக்காக...
