
வாழ்க்கையும் பிரியாணி மாதிரிதாங்க... ‘பீஸ்’ புல்லா இருந்தாதான் நல்லா இருக்கும்!
சென்னை: ஞாயிறு ஸ்பெஷலாக பிரியாணியையும், வாழ்க்கையையும் சேர்த்து கலந்து கட்டி மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

மற்ற எந்த நாளுக்கும் இல்லாத சிறப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் யாரையாவது பார்த்தால், 'அப்புறம் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்' எனக் கேட்க மறக்க மாட்டார்கள் மக்கள். அந்தளவிற்கு ஞாயிறு என்றால் அசைவம் சாப்பிட வேண்டும் என்பது அசைவப் பிரியர்களின் எழுதி வைக்காத விதியாக உள்ளது.

சில வீடுகளில் ஞாயிறு காலையே கமகமக்க ஆரம்பித்து விடும். அந்த நாள் முழுவதும் விதவிதமாய் அசைவ உணவுகளைச் சமைத்து சாப்பிட்டு கொண்டாடி விடுவார்கள். அதிலும் பெரும்பாலானவர்களின் பிடித்தமான உணவு கோழியும், பிரியாணியும்தான்.

வழக்கம் போலவே வயிறு நிறைய சாப்பிட்டால் மட்டும் போதுமா.. அது ஜீரணமாக கொஞ்சம் சிரிக்க வேண்டாமா என ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...