
சன்டேனாலே கறிக்குழம்பு மட்டும் வை என் தெய்வமே.. சாம்பார் சாப்பிட கடுப்பா இருக்கு!
சென்னை: கார்த்திகை என்பதால் இன்று பல வீடுகளில் அசைவம் சமைக்கவில்லை என்பது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் மீம்ஸ்களைப் பார்க்கும்போதே தெரிகிறது.

மற்ற நாட்களில் எப்படியோ, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தப்பித்தவறிக்கூட விரத நாட்கள் வந்து விடக்கூடாது என அசைவப் பிரியர்கள் வேண்டாமல் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை ஞாயிறு என்பது அசைவ உணவுக்கென தனியாக ஒதுக்கப்பட்ட நாள். அன்றைய தினம் அசைவம் சாப்பிடாவிட்டால் அடுத்த ஒரு வாரத்தை ஓட்டுவதற்கு அவர்கள் பேட்டரியில் சார்ஜே ஏறாது.

ஆனால் என்ன செய்வது, எப்படியாவது விரத நாட்களில் ஏதாவது ஞாயிறு மாட்டி விடுகிறது. அந்த நாட்களில் தலைகீழாக நின்றாலும் கறி கிடைக்காது, சாம்பார்தான் என்பது நன்றாகவே தெரியும் என்றாலும், கறிச்சோறு கிடைக்காத தங்களது ஆதங்கத்தை, எதிர்ப்பை இப்போதெல்லாம் மீம்ஸ் போட்டு தீர்த்துக் கொள்கிறார்கள் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக இந்த வாரம் சமூகவலைதளங்களில் ஜாலியாகப் பகிரப்படும் சில மீம்ஸ்கள் உங்களுக்காக...





