
ஞாயிற்றுகிழமையே முடியப் போகுது.. ஆனா நீ இன்னும் விவரம் தெரியாத பையனாவே இருக்கியேப்பா!
சென்னை: ஞாயிறு விடுமுறை அதற்குள் முடிந்து விட்டதே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் மக்கள்.

வேலை நாட்களைவிட விடுமுறை நாட்கள் கண்ணை மூடித் திறப்பதற்குள் முடிந்துவிட்டது மாதிரியான பிரமை இருக்கும். அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். எப்போது விடிந்தது.. எப்போது இருட்டியது என நிதானிப்பதற்குள் ஞாயிறு முடிந்து விடும். இது நமக்கு மட்டும்தான் என்றில்லை. எல்லோருக்குமே இப்படித்தான் என்பது ஞாயிறுகளில் பகிரப்படும் மீம்ஸ்களைப் பார்க்கும்போதே தெரிகிறது.

ஒருபுறம் ஞாயிறு அதற்குள் முடிந்து விட்டதே என ஒரு குரூப் மீம்ஸ் போட்டு கதறிக் கொண்டிருக்க, வழக்கம் போல் மற்றொரு குரூப், 'இந்த வாரமும் கறிக்குழம்பு வைக்காம ஏமாத்திட்டாங்கய்யா..' என வடிவேலு மாதிரி கதறிக் கொண்டுள்ளனர்.

எது எப்படியோ.. எல்லா மீம்ஸ்களுமே சிரிப்புக்கு கேரண்டி தரும் ஜாலியோ ஜிம்கானா ரகம்தான். இதோ அப்படியாக அதிகம் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...





