For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டீம் இந்தியா சூப்பர் வெற்றி.. புஜாராவுக்கு ஷொட்டு.. பெயினுக்கு குட்டு.. தெறிக்க விடும் மீம்ஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: ஐபிஎல் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது. எல்லா பந்துகளையும் விளாசியே பழக்கப்பட்ட டி20 களத்திலிருந்து ஆஸ்திரேலியா மாதிரி ஒரு நாட்டில் அவர்களை எதிர்த்து எப்படி ஒன்டே மற்றும் டெஸ்ட்களில் ஆடி ஜெயிக்க முடியும் என்ற சந்தேகம் பலரால் அப்போதே எழுப்பப்பட்டது.

ஒன்டே தொடரை இழந்தபோதிலும், டி20 தொடரை கைப்பற்றி ஆசுவாசப்படுத்தியது டீம் இந்தியா. ஆனால் டெஸ்ட் தொடர்தான், உண்மையிலேயே அணி வீரர்கள் திறமைக்கு வைக்கப்படும் 'டெஸ்ட்' என்றனர் கிரிக்கெட் பண்டிட்டுகள்.

ஆஸ்திரேலியா 4-0 என்று ஒயிட்வாஷ் செய்யப்போகிறது என்று கொக்கரித்தார் இங்கிலாந்தின் மாஜி பிரபல வீரர் மைக்கேல் வாகன். இதேபோன்றுதான் பலரும் கணித்தனர். தப்பி தவறி ஏதாவது ஒரு போட்டியை இந்தியா டிரா செய்தால் பெரிதுதான் என்றவர்களும் உண்டு.

2001 வெற்றியை விட.. இது எக்ஸ்ட்ரா தித்திப்பு.. இளம் இந்தியன் டீம் அதகளம்.. அடங்கிய ஆஸ்திரேலியா!2001 வெற்றியை விட.. இது எக்ஸ்ட்ரா தித்திப்பு.. இளம் இந்தியன் டீம் அதகளம்.. அடங்கிய ஆஸ்திரேலியா!

 இந்தியா சூப்பர்

இந்தியா சூப்பர்

டெஸ்ட் தொடரில் ஆரம்பத்தில் தடுமாறியது உண்மை. ஆனால் 2வது டெஸ்ட் போட்டியில் சூப்பராக வென்று கியரை மாற்றியது இந்தியா. முன்னணி வீரர்கள் காயமடைந்தபோதிலும், கோலி தாயகம் திரும்பியும், 3வது டெஸ்ட் டிரா, நான்காவது டெஸ்ட்டில் அசத்தல் வெற்றி என்று ஆஸி. முகத்தில் கரி பூசியுள்ளது இளம் இந்திய அணி. பிரிஸ்பேனில் 1988ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா தோற்றுள்ளது. அந்த அடியை கொடுத்தது இந்தியா.

பாகுபலி

இதோ ஆரம்பித்துவிட்டனர் நமது மீம் கிரியேட்டர்கள். அசத்தல் மீம்களை நீங்களும் பாருங்கள். சாமானியன் என்று நினைத்த இந்திய அணி, பாகுபலியாக மாறிய தருணம் இந்த டூர் என்று வர்ணிக்கிறது இந்த மீம்.

உங்களை அடிச்சதே அங்க வச்சிதான்

பிரிஸ்பேன் கப்பா ஸ்டேடியம் வந்தால் தெரியும் என்று அஸ்வினிடம் எக்காளமிட்டிருந்தார் ஆஸி.கேப்டன் பெயின். ஆனால் அங்குதான் இதுவரை இல்லாத அளவுக்கான தோல்வியை ஆஸி.க்கு இந்தியா பரிசளித்துள்ளது என்பதை மெட்ராஸ் திரைப்படத்தின் காட்சியோடு ஒப்பிடுகிறது இந்த மீம்.

சிரிப்பு வருதுடோய்

கடந்த முறை, டெஸ்ட் போட்டியை, ஸ்மித், வார்னர் இல்லாம ஜெயிச்சுட்டீங்கடா என்று கிண்டல் செய்தீர்களே, இப்போது அவர்களை வைத்துக் கொண்டே ஜெயித்துட்டோமே என சிரிப்பு காட்டுகிறது இந்த மீம்.

புஜாரா பாறை

நகைச்சுவையாக சொல்ல வேண்டுமானால், இந்திய அணி மொத்தம் சந்தித்த பந்துகளில், பாதியை புஜாராதான் சந்தித்திருப்பார். அப்படி ஒரு சுவர் போன்றவர் புஜாரா. அவர் ஆஸி. பவுலர்கள் பொறுமையை சோதித்ததால்தான், மற்ற வீரர்கள் இயல்பாக ஆடி வெற்றியை வசமாக்க முடிந்தது. எனவே புஜாரா நிற்பதும், ஒரு பெரிய பாறை கிரீசில் நிற்பதும் ஒன்றுதான் என்கிறது இந்த மீம்.

English summary
India Australia test cricket memes goes viral in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X