For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாங்களும் மீம்ஸ் போடுவோம்.. எங்க கிட்டயும் கான்செப்ட் இருக்கு.. ஆனா இது வேற லெவல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    90's memes throw back | சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் கருத்துக்கள் மீம்ஸ்களாக வளம் வருகின்றன

    சென்னை: துப்பாக்கி, வெடிகுண்டுகளுக்கு மிரளாத அரசியல்வாதிகள் கூட துண்டுத்துண்டாக வந்து விழுகிற கலாய் மீம்ஸ்களை கண்டால் மிரண்டு ஓடுகிறார்கள். அந்த அளவுக்கு ஒருவரின் அரசியல் வாழ்வையே இந்த மீம்ஸ்கள் ஆட்டம் காண வைத்துவிடுகின்றன.

    விஜயகாந்த், வைகோ, சீமான், கொஞ்ச காலம் முன்பு வரை தமிழிசை என இந்த மீம்ஸ் மன்னர்களிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்காத அரசியல்வாதிகளே இல்லை. நம்ம ஊர் மட்டுமல்ல உலகம் முழுவதுமே இதே கதைதான். ட்ரம்ப், புதின் என உலகத் தலைவர்கள் எல்லோருமே மீம் கிரியேட்டர்களிடம் சிக்கித்தான் கிடக்கிறார்கள்.

    நகைச்சுவை உணர்வுடன் எல்லோருக்கும் எளிதில் புரியும் வகையில் இருப்பதுதான் இந்த மீம்ஸ்களின் வெற்றிக்கு அடிப்படை காரணம். வெறுமனே சிரிக்க வைப்பதுடன் நின்றுவிடாமல், சிந்திக்கவும் வைப்பதுதான் மீம்ஸ்களின் ஸ்பெஷாலிட்டி. பலர் நாட்டுல என்ன நடக்கிறது என்பதையே தங்கள் வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் வந்து விழும் மீம்ஸ்களை பார்த்துதான் தெரிந்துகொள்கிறார்கள். அந்த அளவுக்கு நாட்டுநடப்புகள் உடனுக்குடன் மீம்ஸ்களாக உருமாறி உலா வர ஆரம்பித்துவிடுகின்றன.

    நல்ல விஷயமும் இருக்குங்க

    நல்ல விஷயமும் இருக்குங்க


    இப்படி ஒரு அற்புதமான மக்கள் தொடர்பு சாதனத்தை வைத்துக்கொண்டு தனிநபர்களை கலாய்ப்பதை தவிர வேறு எதையும் உருப்படியாக செய்ய மாட்டேன்றாங்களே இந்த இளைஞர்கள் என வருத்தப்படும் பெரியவர்களுக்கு ஆறுதலாக ஒரு செய்தி. அட ஆமாங்க, நல்ல நல்ல கருத்துகளை வலியுறுத்தும் பாசிட்டிவ் மீம்ஸ்களும் இப்போது வைரலாக ஆரம்பித்திருக்கின்றன.

    பாசிட்டிவ் மீம்ஸ்

    பாசிட்டிவ் மீம்ஸ்

    அண்மையில் இலக்கணம் கற்றுத்தரும் மீம்ஸ்கள் சிலவற்றை பார்த்தேன். தமிழ் வகுப்பு அதுவும் இலக்கணம் என்றாலே நம்ம பசங்களுக்கு வேப்பங்காயாக கசக்கும். நம்மில் எத்தனை பேர் படித்த இலக்கணத்தை ஞாபகம் வைத்திருக்கிறோம். எப்படியாவது மனப்பாடம் பண்ணி பாஸ் பண்ணா போதும் என்ற ரேஞ்சுக்குதான் பலரும் தமிழ் இலக்கணத்தை பார்க்கிறார்கள். ஆனால் ஒரு மொழியின் இலக்கணம் என்பது அந்த மொழியை மிகச்சிறப்பாகவும், செம்மையாகவும் பயன்படுத்துவதற்கு நமக்கு கற்றுத் தருகிறது.

    எளிமையாக புரிய வைக்கலாம்

    எளிமையாக புரிய வைக்கலாம்


    சுருக்கமாகச் சொன்னால், ஒரு மொழியின் மேனுவல் போன்றது அதன் இலக்கணம். அது ஒழுங்காக தெரிந்தால் அந்த மொழியை சிறப்பாக பேசவும், எழுதவும் முடியும். அப்படிப்பட்ட ஒரு பெரிய மேட்டரை, மாணவர்களை கவரும் வகையில் அவர்களுக்கு பிடித்த வடிவேல் டெம்ப்ளேட்டுகளை வைத்தே மீம்சாக உருவாக்கி இருக்கிறார்கள். அந்த குறிப்பிட்ட வடிவேல் காமெடி என்ன என்பது நமக்கு மீம்ஸை பார்த்தவுடனே விளங்கிவிடுவதால், அதில் அவர்கள் சொல்ல வரும் இலக்கண குறிப்பும் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.

    இதுதான் சுவை அணி

    இதுதான் சுவை அணி

    உதாரணத்திற்கு, வடிவேல் ஓட்டலில் ஊத்தப்பம் எப்படி செய்ய வேண்டும் என்பதை ரொம்....ப டீட்டெயிலா ஒரு சர்வருக்கு பாடம் எடுப்பாரே அந்த டெம்ப்ளேட்டை போட்டு, சுவை அணி என்பதை சூப்பராக விளக்கி இருக்கிறார்கள். அதாவது, கவிஞர்கள் தாம் சொல்ல வந்த கருத்தினை எட்டு சுவைகள் தோன்ற கூறுவது சுவை அணி என்பதை இதைவிட சிறப்பாக எப்படி விளக்கிவிட முடியும். இதேபோல தற்குறிப்பேற்ற அணி, வஞ்சப்புகழ்ச்சி அணி என வரிசையாக எல்லாத்தையும் ஒரு கை பார்த்திருக்கிறார்கள்.

     தெர்மகோல் ராஜு

    தெர்மகோல் ராஜு

    புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் ஐன்ஸ்டீன் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உளறிய போதும் சரி, தெர்மாகோல் விட்டு அணை நீர் ஆவியாவதை தடுக்கலாம் என நம்ம ஊர் அமைச்சர் செல்லூர் ராஜூ தெறிக்க விட்ட போதும் சரி சமூக வலைதளவாசிகள் எல்லோரும் உடனே திடீர் விஞ்ஞானிகளாக மாறிவிடுவார்கள். அணுவில் ஆரம்பித்து ஆகாயம் வரை அத்தனை பற்றியும் அக்குவேறு ஆணிவேராக அலசி காயப் போட்டுவிடுவார்கள். இந்த அறிவியல் ஆர்வத்தை ஏன் அப்படியே விடனும்னு நினைச்ச சில இளைஞர்கள் அறிவியல் விஷயங்களை மீம்ஸ் மூலம் எளிமையாக விளக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த அறிவியல் மீம்ஸ் ட்ரெண்ட் உலகம் முழுவதும் சக்கை போடு போடுகிறது. ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி என மாணவர்கள் தங்களை பயமுறுத்தும் பாடங்களை மீம்ஸ்களாக போட்டு, இடுக்கண் வருங்கால் நகுக என வள்ளுவர் சொன்னதை கடைபிடிக்க முயற்சிக்கிறார்கள்.

     மீம்ஸில் அறிவியல்

    மீம்ஸில் அறிவியல்

    சயின்ஸ் மீம்ஸ் என்பது வெறும் பாடங்களோடும் நின்றுவிடுவதில்லை. அறிவியல் உலகம் ஆராதிக்கும் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளையும் நம்ம பசங்க விட்டுவைப்பதில்லை. அதிலும் குறிப்பாக ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எல்லாம் இவர்களின் மீம்ஸ் மூலம் ஒரு வழி ஆகிவிடுகிறார்கள். அப்படியாவது இன்னும் நிறைய பேர் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைகிறதே என்ற வகையில் நாம் இதற்காக சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

    விட்ரா விட்ரா

    விட்ரா விட்ரா

    பாசிட்டிவ் மீம்ஸ்களில் எல்லா தரப்பினராலும் அதிகம் விரும்பப்படுவதும், அதிகம் பகிரப்படுவதும் தன்னம்பிக்கை தொடர்பான மீம்ஸ்கள் தானாம். கவலைப்படாதே, எல்லாம் சரியா போயிடும் என்ற ஆறுதல் எல்லோருக்கும் தேவைப்பட்டுக் கொண்டு தானே இருக்கிறது. இந்த வகை மீம்ஸூக்கும் நம்ம வடிவேலுதான் பெரும்பாலும் கை கொடுக்கிறார். வாழ்க்கையில் காண்ட்ராக்டர் நேசமணி பார்க்காத துயரங்களா, வின்னர் பட கைப்புள்ள வாங்காத அடிகளா நாம் வாங்கிவிடப் போகிறோம். விடுறா, விடுறா சூனாபானா.. யாரும் பார்க்கல. அப்படியே கெத்தா மெயிண்டெயின் பண்ணி போயிகிட்டே இருன்னு அவமானங்களையும், ஏமாற்றங்களையும் பக்குவமாக ஏற்றுக்கொள்ள இந்த மீம்ஸ்கள் நமக்கு வழிகாட்டுகின்றன.

    விழிப்புணர்வு மீம்ஸ்

    விழிப்புணர்வு மீம்ஸ்


    விழிப்புணர்வு மீம்ஸ் ஒரு தனி ரகம். இவை நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை கேள்வி கேட்கவும், அதில் உள்ள தகிடுதத்தங்களை அறிந்துகொள்ளவும் நமக்கு பேருதவியாக இருக்கின்றன. சூரியனையே இன்னைக்கு 40 நிமிஷம் லேட்டா வான்னு சொல்லிட்டேன் என்று சாமியார் நித்தியானந்தா சொல்லும்போது, இதெல்லாம் செய்யத் தெரிஞ்ச நீ, பெட்ரூம்ல வெச்ச கேமராவை கவனிக்காம விட்டுட்டுயே தல என கலாய்த்து வரும் மீம்ஸ் நம்மை இவர்களின் உண்மையான ஆற்றலை பற்றி சிந்திக்க வைக்கின்றன.

    நாங்கதாங்க ஜாஸ்தி கேட்டோம்

    நாங்கதாங்க ஜாஸ்தி கேட்டோம்


    உள்ளூரில் ஒரு சாதாரண குடிநீர் தொட்டி வைத்துவிட்டு செலவு ரூ. 10 லட்சம் என்று எழுதி வைக்கும் அரசியல்வாதிகளை, எதிர்கட்சிக்காரர்களை விட மீம் கிரியேட்டர்கள்தான் அதிகம் கேள்வி கேட்கிறார்கள். மொத்தம் இத்தனை மரக்கன்றுகள் நட, இத்தனை கோடி ஆகிறது என்று யாராவது சொன்னால், உடனே நம்ம ஆட்கள் கால்குலேட்டரை படபடவென தட்டி, அப்படின்னா ஒரு மரக்கன்று இத்தனை லட்சம் ரூபாயா என்று கேள்விகேட்டு மீம்ஸ் போடும்போதுதான் அதன் பின்னால் உள்ள திருட்டுத்தனம் நமக்கு உரைக்கிறது. இப்படி பல நேரங்களில் சமூக ஆர்வலர்களாகவும் மீம் கிரியேட்டர்கள் அவதாரம் எடுக்கின்றனர்.

    டைம் பாஸ் இல்லை பாஸ்

    டைம் பாஸ் இல்லை பாஸ்

    மீம்ஸ் என்றாலே சும்மா வேலை இல்லாதவர்களின் வெட்டி டைம்பாஸ் என்ற எண்ணம் இப்போது மறைந்துவிட்டது. மீம்ஸ்கள் வெறும் ஃபோட்டோவில் இருந்து இப்போது வீடியோ மீம்களாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டன. தொழில்நுட்ப முன்னேற்றத்தால் நமக்கு கிடைத்திருக்கும் இந்த மிகப்பெரிய பொக்கிஷத்தை இன்னும் நிறைய நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பும்.

    - கௌதம்

    English summary
    Memes are generally used for teasing VIPs but nowadays positive memes are becoming popular.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X