For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கை கழுவு.. வீட்டோட இரு.. கூட்டம் போடாதே போ போ.. கொரோனா விழிப்புணர்வில் வடிவேலு.. கலக்கல் மீம்ஸ்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவைரஸ் விழிப்புணர்வுக்குக் கூட வடிவேலு சூப்பராக ஃபிட் ஆகிறார். நமது வாசகர் மல்லிகா நல்லுசாமி போட்டுள்ள வடிவேலு பாணி மீம்ஸ்கள் வைரலாகியுள்ளன.

Recommended Video

    'வீட்டைத் தாண்டி நீயும் வரகூடாது, நானும்..' வடிவேலுவின் அடுத்த வீடியோ!

    Vadivelu for Life இது வெறும் வார்த்தை இல்லைங்க.. வாழ்க்கை.. அப்படித்தாங்க ஆயிருச்சு இப்போ. வடிவேலு நடிச்சாதான் காமெடியா.. அவர் நடிச்சதை வைச்சு இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மக்கள் சிரிச்சிட்டிருப்பாங்க. அப்படிப்பட்ட காமெடி மகான் அவர்.

    இப்போது கொரோனா விழிப்புணர்வுக்கும் கூட வடிவேலு அருமையாக கை கொடுக்கிறார். நமது வாசகர் மல்லிகா நல்லுசாமி வடிவேலுவின் காமெடி படங்களை வைத்து கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்களைக் கிரியேட் செய்து வலம் விட்டுள்ளார். சூப்பராக பொரு்தி வருகின்றன அனைத்துமே. வாங்க பார்க்கலாம்.

    தலைவலியா டாக்டரைக் கேளுங்க

    தலைவலியா டாக்டரைக் கேளுங்க

    உங்களுக்கு காய்ச்சல், தலைவலி இருமல் இருக்கா.. டாக்டரை அணுக வேண்டும். இதுதான் பொதுவாக அனைவருக்கும் கூறப்படும் முதல் அட்வைஸ். முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உடல் உபாதைகள் திடீரென ஏற்பட்டால் அதை அலட்சியம் செய்யக் கூடாது என்பதே டாக்டர்களின் அறிவுரை. அதை வைத்துப் போடப்பட்ட மீம்ஸ் இது. இந்தக் காமெடி சீனை மறக்க முடியுமா.

    ரொம்ப சேமிக்காதீங்க

    ரொம்ப சேமிக்காதீங்க

    போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசாய்ட்டே போகுது.. மறக்க முடியாத காமெடி காட்சி இது. அதை இதற்கும் பயன்படுத்தலாம்.. அதாவது லாக்டவுன் நீடிக்கத்தான் செய்யும். ஆனால் அதற்காக கடையில் இருக்கிற எல்லாத்தையும் சேர்த்து வைத்து மத்தவங்களை பஞ்சத்தில் மூழ்க விடக் கூடாது இல்லையா. அதுக்குத்தான் இது.

    கூட்டம் போடப்படாது

    கூட்டம் போடப்படாது

    இது ரொம்ப பேமஸான சூனா பானா காமெடி சீன். போ போ .. தேவையில்லாமல் கூட்டம் கூடுவது, வெட்டிக் கதை பேசுவது, ரோடு ரோடாக அலைவது.. அதெல்லாம் கூடாது. ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதைக் கூட தவிர்க்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வு மீம்ஸ் இது.. சூனாபானாவே சொல்லிட்டார்.. கேட்காம இருக்க முடியுமா!

    தனித்திருங்க..

    தனித்திருங்க..

    பட்டி தொட்டியெங்கும் பிரபலமான வின்னர் வடிவேலு.. ஆககககா.. என்னா ஒரு தூக்கம்.. கைப்புள்ள மாதிரி லைஃப்தான் நம்மில் பாதிப் பேருக்கு. இதை நல்லா பயன்படுத்திக் கொண்டு, முடிந்தவரைக்கும் யாருடனும் சேராமல் தனித்திருப்போம்.. பரவலைத் தடுத்திருப்போம்.. நல்லா தூங்குவோம்.. ரெஸ்ட் எடுப்போம்.. கைப்புள்ள சொன்னா கேளுங்க.. உசிருக்கு நல்லது!

    கொட்டு வைக்கும் கொரோனா

    கொட்டு வைக்கும் கொரோனா

    அடிக்கடி நீங்க கையைக் கழுவாட்டி கொரோனா உங்க தலையில் கொட்டு வைக்கும் பாஸ்.. அதுவும் கோபக்கார கொரோனா வேற.. டபுள் கொட்டு வைக்கும் பாஸ்.. மறக்காதீங்க. கையைக் கழுவாம இருக்காதீங்க. அது உங்களுக்கு நல்லது. உங்க குடும்பத்துக்கு நல்லது.. சுத்தமாக கையைக் கழுவுவதன் மூலம் தேவையில்லாமல் தொற்று நமது உடலுக்கு செல்வதைத் தவிர்க்க முடியும்.

    ஏதாச்சும் கதை பேசுங்க

    ஏதாச்சும் கதை பேசுங்க

    பூராப் பயலும் இப்ப வீட்டுக்குள்ளதான் இருக்காங்க.. இது ஒன்னுக்காகவே நாம கொரோனாவுக்கு தேங்ஸ் சொல்லலாம். இதெல்லாம் கனவில் கூட நடைபெறாத ஒன்றாக சில மாதங்களுக்கு முன்பு வரை கருதப்பட்டது. இந்த சமயத்தில் வீட்டினரோடு ஜாலியாக பேசலாம்.. கதையடிக்கலாம். வடிவேலு மாதிரி ஏதாவது இலவு காத்த கிளிக் கதை இருந்தா சொல்லச் சொல்லி கேட்கலாம்.. கொரோனா ஓடீரும்!

    சுத்தம் முக்கியம்

    சுத்தம் முக்கியம்

    கை சுத்தம் கால் சுத்தம் வாய் சுத்தம்.. இதெல்லாம் வாய் வலிக்க நம்ம வீட்டில் தாத்தா பாட்டி, அம்மா அப்பா சொன்னபோதெல்லாம் ஒரு பயலும் மதிக்கலை கேட்கலை. இப்ப எல்லா பக்கியும் விழுந்து விழுது கை கழுவுது. அதை வீடியோ வேற எடுத்து சமூக வலைதளங்களிலும் போட்டு "காய்ஸ்.. இப்படித்தான் கை கழுவணும்" என்று என்று பாடம் வேறு நடத்துகிறார்கள்.. சுத்தம் முக்கியம்ய்யா.. எப்பவுமே.

    தைரியமா இருங்க

    தைரியமா இருங்க

    தனியா இருங்க.. அதேசமயம் தைரியமா இருங்க.. இதுதாங்க அருமையான மீம். நிறையப் பேருக்கு பயம் வந்து விட்டது. இயல்புதான். வீட்டிலேயே அடைந்து கிடைந்தால் நிச்சயம் ஒரு வித சோர்வும் அயர்ச்சியும் வரத்தான் செய்யும். ஆனால் அதை விட இப்போது தனியாக இருக்க வேண்டியது அவசியமாயிற்றே.. எனவே தைரியமா இருங்க. தைரியம்தான் உங்களைக் காப்பாற்றும்.. ஒவ்வொரு மீலும் கலக்கியுள்ளார் மல்லிகா நல்லுசாமி.. காமெடி என்று சிரித்து விட்டுப் போவதை வைத்து அழகான கருத்துக்களைப் பரப்பியிருப்பது பாராட்டக்குரியது.. குட்!

    English summary
    Here is a compilation of memes on Coronavirus awareness with Vadivelu comedy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X