For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Corona Memes: ரேஷன் கார்டுல சேர்த்து விடுங்க.. அரை கிலோ ஜீனியாவது கிடைக்கும்ல!

Google Oneindia Tamil News

சென்னை: மதுக் கடைகள் கோலாகலமாக திறந்து விடப்பட்டு குடிகாரர்கள் படு ஜாலியாக உற்சாக பானத்தில் திளைத்துக் கொண்டுள்ளனர்.

மறுபக்கம் ஊரடங்கை மேலும் 2 வார காலத்திற்கு நீட்டித்துள்ளனர். அதேசமயம் பல்வேறு தளர்வுகளும் அமல்படுத்தப்பட உள்ளன. இதனால் ஊரடங்கையும், தளர்வையும் ஒரு சேர கையில் எடுத்துக் கொண்டு மக்கள் மெதுவாக வெளியே வர ஆரம்பித்துள்ளனர்.

கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று வேறு சொல்லி விட்டார்கள். எனவே மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப எத்தனித்துக் கொண்டுள்ளனர். இவர்களுக்கெல்லாம் இப்போதைக்கு பெரும் துணையாக இருப்பது மீம்ஸ் கிரியேட்டர்கள்தான்.

முடிந்தவரை சிரித்தபடி பழைய வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர் மக்களும்.. நாமும் மீம்ஸ் பார்த்து சிரிக்கலாம் வாங்க ( வேற வழியில்லைங்க.. ரிலாக்ஸா இருந்தால்தான் வாழ்க்கை லென்த்தா போகும் கொஞ்ச நாளைக்கு, வாங்க)

புதுச்சேரியிலும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. லோக்கல் பஸ் ஓடும்.. முதல்வர் நாராயணசாமிபுதுச்சேரியிலும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. லோக்கல் பஸ் ஓடும்.. முதல்வர் நாராயணசாமி

குடியரா

குடியரா

மது குடிப்போரை குடிகாரர்கள் என்றுதான் காலம் காலமாக எல்லோரும் அன்போடு அழைக்கிறார்கள். குடிகாரா என்றும் பலர் கோபமாக அழைப்பதும் உண்டு. ஆனால் இப்போது அவர்களை மது பிரியர்கள் என்று ரொம்பப் பாசமாக கூப்பிட ஆரம்பித்து விட்டனர்.. அவங்களுக்கும் கொஞ்சம் இரிட்டேட்டிங்கா இருக்கும்ல..! இப்போ அவர்களுக்கு டோக்கன் வேறு அச்சடிச்சுட்டாங்க.. ஸோ இந்த மீம்.

அது காதும்மா!

அது காதும்மா!

வீட்டோடு இருப்பதால் ஏகப்பட்ட அக்கப்போர்கள், அலப்பறைகள், சொல்லி மாள முடியவில்லை. யூடியூபை பார்த்து சுட்டு சுட்டுத் தள்ளுகிறது ஒரு கூட்டம்.. அதை இஷ்டப்பட்டும், கஷ்டப்பட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது இன்னொரு குரூப். இடை இடையே முடிவெட்டும் வேறு.. இதோ இங்க என்ன கிடக்குது பாருங்க.. சீக்கிரம் சிட்டிக்குள்ளயும் கடையைத் திறங்கப்பா!

இதையெல்லாமா சுத்திப் பாப்பாங்க

இதையெல்லாமா சுத்திப் பாப்பாங்க

ஏப்ரல், மே மாசம் வந்தாலே மக்கள் பக்காவாக பிளான் போட்டு ஊர் ஊராக பறந்து கொண்டிருப்பார்கள். மொத்தமாக போட்டு முடக்கி விட்டது இந்த கொரானோ கொரங்கு.. இப்பெல்லாம் மக்கள் எதைச் சுத்திப் பார்க்கிறாங்க பாருங்க.. மொட்டை மாடியாம்.. வீட்டு வாசப்படியாம்.. ஜன்னலடியாம்.. கிச்சனாம்.. முடியலடா சாமியோவ்!

சத்தமா சொல்லாதீங்கப்பா

சத்தமா சொல்லாதீங்கப்பா

இதில் டிப்ஸ்கள்தான் தூள் பறக்கிறது. அதை அரைச்சுச் சாப்பிட்டா சரியாகும்..இதைக் கரைச்சுக் குடிச்சா குணமாகும்.. இப்படி சாப்பிடலாம்.. அப்படி சாப்பிடலாம் என ஏகப்பட்ட ஐடியாக்களை அய்யாச்சாமிகள் அள்ளி விட்ட வண்ணம் உள்ளனர்.. என்ன பண்றது எல்லாத்தையும் அரைச்சுக் கொடுக்கிற ஆளுங்கதான் பாவம்.. !

ஜீனியாவது கிடைக்கும்ல

ஜீனியாவது கிடைக்கும்ல

இது ரொம்ப கரெக்ட்டான பாயிண்ட். அதான் சேர்ந்து பழகு.. கூட்டுக் குடும்பமா புழங்குன்னு சொல்லியாச்சுல்ல.. பிறகு அதை ரேஷன் கார்டில் சேர்த்து விட வேண்டியதுதான். கூட அரைக்கிலோ ஜீனியாவாது கிடைக்குமே.. நல்ல லாஜிக்குடன் யோசிச்சுருக்கார் பாருங்க..!

வெக்கமா இல்லை..நல்லா கேளுண்ணே

வெக்கமா இல்லை..நல்லா கேளுண்ணே

ஜூலை மாசம் வந்திருந்தாலாவது கூட 2 மாசம் லீவு கிடைச்சிருக்கும்.. நடுவுல போய் வந்து எல்லாம் நாசமாகி எக்ஸ்ட்ரா லீவும் புட்டுக் கொண்டு விட்டது. வெக்கமா இல்லை உனக்கே.. நாங்க கேட்கலை பாஸ்.. இந்த மீம்ஸைப் போட்டவர்தான் இப்படி நாக்கைப் பிடுங்குவது போல கேட்டுள்ளார் கொரோனாவைப் பார்த்து.. பாவம்ய்யா கொரோனா.. அதுக்கு மட்டும் காது கேட்டுச்சு.. தூக்குல தொங்கிரும்.

எப்பப்பா முடியும்

எப்பப்பா முடியும்

லாக்டவுன் எப்ப முடியும்.. எல்லோருக்கும் இதே கேள்விதான்.. யாரிடம் போய் இதைக் கேட்டாலும்.. காலைல ஆறு மணி இருக்கும்.. கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சு என்று திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப.. பேச ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் ஒன்னு மட்டும் உறுதிங்க.. கண்டிப்பா ஒரு நாள் லாக்டவுன் முடியும்.. தைரியமா இருங்க!

English summary
More memes are on rounds on Coronavirus and Curfew extension.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X