For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரலில் மை.... ரூம் போட்டு யோசிப்பானுங்களோ?

கறுப்பு பணத்தை தடுக்க விரலில் மை வைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வங்கிகளில் இனி பணம் எடுக்கச் செல்பவர்களின் கைகளில் மை வைக்கப்படும் என்றும் இதன் மூலம் கறுப்பு பணத்தை ஒருவரே மாற்றி மாற்றி டெபாசிட் செய்வதை தடுக்க முடியும் என்றும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.

500 மற்றும் 1000 ரூபாயை கைகளில் வைத்துக்கொண்டு மாற்ற முடியாமல் ஏழை மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். ஏடிஎம் வாசலிலும் சாமானிய மக்கள்தான் காத்திருக்கின்றனர்.

தினசரி ஒரு அறிவிப்பு, புதிய புதிய கெடுபிடிகளை விதித்து வருகிறது மத்திய அரசு. இந்த நிலையில் மை வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது சாமான்ய மக்களை மேலும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

அடையாள மை

ஒன்னும் பதட்டப்படாதீங்க இது பேங்க்ல பணம் போட வந்தவன்தான் அடையாளத்துக்காக மை பூசி அனுப்புறோம் என்று மீம்ஸ் போட்டுள்ளார் ஒரு வலைஞர்.

திருஷ்டி பொட்டு

ஓட்டு போடும் போது விரலில் மை வச்சிட்டோம். பணத்தை எடுக்கும் போது கன்னத்துல வெச்சு விடுங்க திருஷ்டி பொட்டாவாது இருக்கும்! என்பது ஒரு டுவிட்டர்வாசியின் கருத்து.

'சூடு' வெச்சுட்டா

நோட்டை மாற்ற 'மை' வைப்பதற்கு பதிலாக விரலில் 'சூடு' வெச்சுட்டா தண்டனையாகவும் இருக்கும், நிரந்தரமாகவம் அழியாது.

ரூம் போட்டு யோசிப்பானுங்களோ?என்று கேட்கிறார் ஒரு வலைஞர்.

மொட்டை அடிப்பாங்களோ?

நல்லவேளை மை மட்டும் வைப்பதாக கூறினர். அடையாளத்துக்கு மொட்டை அடிச்சு காது குத்திவிடுவோம்னு சொல்லாம விட்டானுகளே என்பது ஸ்மோக்கரின் கருத்து.

மூக்கில் மை

மூச்சில கரிய பூசிட்டி விரலில் மை வைக்கிறார்களே என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர். விட்டால் மூக்கிலும் பூசினாலும் பூசுவார்கள் என்கிறார் ஸ்டைல் பாண்டி.

மெகந்தி போடலமோ?

மைக்கு பதில் மெஹந்தி வைத்து விடலாம் என்றார் செட்டியார் மதர்.

எல்லாமே வாங்கணும்

பேங்க் ஆபீசர்களுக்கு இனி பகேச கமல் நிலைதான். மையும் வெக்கனும் பணமும் குடுக்கனும் திட்டும் வாங்கனும் சண்டையும் போடனும்.

English summary
Memes are start rolloing on the order of the govt to ink the fingers of the people who visit banks to draw their money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X