For Quick Alerts
For Daily Alerts
Just In
அடேய்களா.. முடியலடா.. எப்பப் பார்த்தாலும் சூப்பர் ஓவர்னா எப்படிடா.. !
சென்னை: அடச்சே மறுபடியும் சூப்பர் ஓவரா என்று ரசிகர்கள் கடுப்பாகும் அளவுக்கு இன்று இதயத் துடிப்பை அதிர வைத்து விட்டது இந்தியா, நியூசிலாந்து இடையிலான டி20 போட்டி. போன போட்டிதான் சூப்பர் ஓவர் என்றால் இந்த போட்டியும் சூப்பர் ஓவரில்தான் முடிந்தது.
ஆனாலும் அவர்கள் தடுக்கில் பாய்ந்தால் நாங்கள் இடுக்கில் புகுவோம்ல என்று இந்தியா இந்தப் போட்டியிலும் சூப்பர் ஓவரில் வென்று அசத்தி விட்டது.
ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி போட்டி சூப்பர் ஓவருக்குப் போய் இந்தியாவுக்கு சாதகமாக முடிந்தது. இந்த நிலையில் இன்றைய 4வது போட்டியும் சூப்பர் ஓவருக்குப் போய் ரசிகர்களை பதறடித்து விட்டது. இதை வைத்து சில மீம்ஸ்கள் பாஸ்.. சாலியா சிரிங்க.. கலகலன்னு இன்றைய நாளை முடிங்க!





