For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது கலவர பூமி... கார ஓட்டிட்டு போனா பாதாளத்துல போயிடுவ!

ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது, சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம் ஆகியவை நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களை உலவ விட்டுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகரில் பணம் வினியோகிப்பதை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அண்ணா சாலையில் சர்ச் பார்க் கான்வென்ட் அருகே சாலையில் திடீரென 10 அடி ஆழத்திலான பள்ளம் ஏற்பட்டது. இதில் அவ்வழியாக சென்ற பேருந்தும், காரும் சிக்கியது.

இந்த இரு விவகாரங்கள் தொடர்பாக மீம்ஸ்கள் இணையதளத்தில் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

இது கலவர பூமி

என்ன தம்பி இந்த பக்கம் இது கலவர பூமி, இங்க கார் ஓட்டிட்டு போனா, பாதாளத்துல போயிடுவ.

சகதியோட போச்சு

என்னடா போகும்போது நல்லாதானே போயிட்டு இருந்தேன். இப்ப இப்படி சேரும் , சகதியுமா வர... ஒன்னுமில்லா ரோட்டுல கார்ல போயிட்டிருந்தேனா, அப்ப திடீனு பள்ளம் வந்திருச்சி அதுக்குள்ள விழுந்திட்டேன் , 300 அடி ஆழங்குறதால சகதியோட போச்சு.

நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்

மண்ணின் ஈரப்பதம் திடீர்னு உயரும் போது பள்ளம் ஏற்படும்- அமைச்சர் ஜெயகுமார்.
நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்- அடிமை

ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா. பாக்கறியா, பாருடா , சாலையே பிளந்துடுச்சி.

கோமால இருந்தியா?

உ.பி. சட்டசபை தேர்தல்ல பாஜக ஓட்டு மிஷின்ல ஊழல் பன்னப்ப கோமால இருந்தியா?

சின்ன தொகுதியிலேயே முடில

ஆர்.கே.நகர் போன்ற சின்ன தொகுதியில் இடைத்தேர்தல் முறையா நடத்த முடியல. இதுல உ.பி. போன்ற மாநிலத்தில் சொல்லவா வேண்டும். உங்களுக்கு எதுக்கு அரசு சம்பளம், தேவையில்லாம தேர்தல் ஆணையம் வேற

கொசுவ அடிக்க கோட்டைய கொளுத்தற

பணம் கொடுத்தவ மட்டும் தகுதி நீக்கம் செய்யற விட்டுட்டு, தேர்தலையே ரத்து செய்தீட்டீங்க. இது கொசுவ அடிக்க கோட்டையை கொளுத்தின கதையால்ல இருக்கு.

English summary
Netizans are creating memes on RK Nagar by poll cancel, a big hole in Anna salai. It roams viral on internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X