For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓவியாவுக்கா ஓட்டு போடுறீங்க... சோனமுத்தா போச்சா!

சமையல் எரிவாயு மானியம் ரத்து, ரேஷன் பொருள் பெற விதி உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்து வலம் வரும் மீம்களை பார்க்கலாம்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : சமையல் எரிவாயு மானியம் ரத்து, ரேஷன் பொருட்களை பெற விதிமுறைகள் என்று ஒரே நாளில் அடுத்தடுத்த உத்தரவுகள் வந்ததால் ஆடிப்போயிருக்கும் மக்களை குறிவைத்து டுவிட்டரில் மீம்ஸ்கள் பறக்கின்றன.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சமையல் எரிவாயுக்கான மானியம் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதே போன்ற தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. எனினும் பொதுவிநியோகத்திட்டத்தில் மாற்றம் இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசின் அதிரடி நடவடிக்கையால் ஆடிப்போயிருக்கும் மக்களின் நிலையை சொல்லும் விதமாக டுவிட்டரில் பல மீம்ஸ்கள் வலம் வருகின்றன. அவற்றில் சில உங்களுக்காக...

டிஜிட்டல் இந்தியா டோவ்!

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் தான் இந்த அறிவிப்புகள் என்று ஒரு நெட்டிசன் தனது கருத்தை டுவீட்டியுள்ளார். வரி ஏத்தியாச்சு; கேஸ் மானியம் ரத்து; ரேஷன் கிடையாது; ஆனா 100 கோடி பேருக்கு இலவசமா 4ஜி போன் கிடைக்கும், டிஜிட்டல் இந்தியா டாவ்!!! என்று சமூக நிலைமையை பிரதிபலித்துள்ளார்.

ஓவியாவுக்கா ஓட்டு போடுறீங்க!

பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை காப்பாத்த இளைஞர்கள் ஓட்டு போட்டதாக அந்த தொலைக்காட்சி அறிவித்தது. இந்நிலையில் ஓவியாவுக்கா ஓட்டு போடுறீங்க கேஸ் மானியம் ரத்து, கேஸ் விலை 4ரூ உயரும், மாசம் ரூ8,500 சம்பாதிக்குறவன் குடும்பத்துக்கு, ரேஷன் கிடையாது என்று நக்கலடித்துள்ளார் ஒரு நெட்டிசன்.

போராட வருவாரா ஸ்மிருதி இரானி

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு தற்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிரதி இரானி வீதியில் இறங்கிப் போராடிய புகைப்படத்தை ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார். புகைப்படத்துடன் தற்போது மானியம் ரத்து செய்தியை போட்டு இப்போது போராடுவாரா ஸ்மிருதி இரானி என்று கேட்டுள்ளார் வலைபதிவர்.

விட்டா கிறுக்கன் ஆக்கிடுவாங்க போல!

கேஸ் மானியம் வேணும்னா வங்கிக்கணக்கை இணைக்கச் சொன்னாங்க, அப்புறம் ஆதார இணைக்கச் சொன்னாங்க. இதெல்லாம் செஞ்சு முடிச்சு வீடு திரும்புறதுக்குள்ள மானியம் ரத்துனு சொல்லிட்டாங், விட்டா கிறுக்கன் ஆக்கிடுவாங்க போல என்று மக்களின் மனக்குமுறலை மீம்ஸாக தட்டி விட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.

சொல்லாம சொல்றாங்களோ!

கூடிய சீக்கிரம் மூடிடுவோம் ரேஷன் கடையனு சொல்லாம சொல்கிறது அரசு என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன். கொஞ்சம் கொஞ்சமாக கிடையாதுன்னு சொல்றதுக்கு பதிலா ரேஷன் கடையே கிடையாது இனி தனியாரும் கார்ப்பரேட்டும் தான்னு சொல்லிடுங்க என்பது போல ஒரு மீம்ஸ் பதிவிடப்பட்டுள்ளது.

English summary
Memes trolling in twitter on the subjects of LPG subsidy to cancel and Tn government published national food security bill in gazette effects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X