For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 தனிப்படைகள் கருணாஸை கைது செய்தாயிற்று... எச் ராஜாவை தேடிச் சென்ற 3 தனிப்படைகள் என்னவாயின?

Google Oneindia Tamil News

சென்னை: கருணாஸ் கைது செய்யப்பட்டது தொடர்பாக நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மற்றும் காவல் துறைக்கு எதிராக கருணாஸ் பேசியதை தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்பட்டார். எனினும் ஹைகோர்ட்டுக்கு எதிராக பேசிய எச் ராஜா இன்னும் கைது செய்யப்படாதது குறித்து நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

ஜெ அன்பழகன் டுவீட்

கருணாஸ் மன்னிப்பு கேட்டப்பின் அவரது மீது கைது நடவடிக்கை ஏன்?
காவல்துறை மீதும் நீதித்துறை மீதும் கடும் விமர்சனங்களை வைத்த @HRajaBJPவை கைது செய்யவில்லை. பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசிய @SVESHEKHER யை நீதிமன்றமே கைது சொன்னபோதும் , அவரை கைது செய்யவில்லை என்று திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தெரிவித்தார்.

பாஜக நிர்வாகிகள்

கருணாஸ் எம்எல்ஏ, ஆனால் எச் ராஜாவோ எம்எல்ஏ கூட இல்லை. இருவரும் வெறுக்கத்தக்க பேச்சை காவல் துறை, தமிழக ஹைகோர்ட் மற்றும் முதல்வருக்கு எதிராக பேசினார்கள். கருணாஸ் கைது செய்யப்பட்டுவிட்டார், ஆனால் பாஜக நிர்வாகிகளோ என்ன பேசினாலும் அந்த விவகாரத்தில் இருந்து தப்பிப்பதோடு ஜாலியாக சுற்றி வருகின்றனர்.

விபி கலைராஜன் கேள்வி

தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டபின்பும், சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அவர்களை கைது செய்த தமிழக அரசு, தொடர்ந்து மதகலவரங்களை தூண்டும் விதமாகவும், காவல்துறை, நீதிமன்றங்களை இழிவுபடுத்தும் விதமாகவும் பேசிவரும் H.ராஜாவை இதுவரை கைது செய்யாதது ஏன் ? என்று வி.பி. கலைராஜன் தெரிவித்தார்.

ஒழுங்கு

தமிழகத்தில் இரு வகையான சட்டம்- ஒழுங்கு உள்ளது. ஒன்று, பாஜகவினர், ஆளும் கட்சிக்கானது, இன்னொன்று மற்ற அப்பாவி தமிழ் மக்களுக்கானது. தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டுக்கு சிறந்த உதாரணம் கருணாஸ் கைதும் எச் ராஜா கைது செய்யப்படாததும் ஆகும்.

3 தனிப்படைகள் என்னவாயிற்று

கருணாஸை கைது செய்ததன் மூலம் தமிழக அரசு இறுதி நடவடிக்கையை எடுத்து காண்பித்துவிட்டது. என்னுடைய சந்தேகம் எல்லாம் கருணாஸை பிடிக்க 2 தனிப்படைகள் சென்றது , அவை அவரை கைது செய்துவிட்டன. ஆனால் எச் ராஜாவை பிடிக்க சென்ற 3 தனிப்படைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன. 2 பெரியதா, 3 பெரியதா.

இதுவரை ராஜா கைது இல்லை

தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட பின்பும், சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அவர்களை கைது செய்த தமிழக அரசு, தொடர்ந்து மதகலவரங்களை தூண்டும் விதமாகவும், காவல்துறை, நீதிமன்றங்களை இழிவுபடுத்தும் விதமாகவும் பேசிவரும் H.ராஜாவை இதுவரை கைது செய்யாதது ஏன்?

எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்

எச் ராஜா சட்டத்துக்கு அப்பாற்பட்டவர். கருணாஸ் கைது செய்யப்பட்டது நல்லதுதான். ஒரு கட்சியையும் தொண்டர்களையும் வழிநடத்தும் தலைவர்களாக மட்டும் இருக்காது. விதிமுறைகள் மற்றும் சட்டத்தை பின்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

English summary
Netisans shared their tweet about Karunas arrested and H. Raja is not getting arrested. They said there are 2 laws.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X