For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை சேப்பாக்கம் செக்கிங்... என்னடா.. அடியில டிங்கு.. டாங்குனு சத்தம் கேக்குது..நெட்டிசன்கள் கலகல

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு கிரிக்கெட் சங்கம் தடை விதித்துள்ளது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை சேப்பாக்கம் மைதானம் திடீர் முற்றுகை-வீடியோ

    சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண்பதற்கு ரசிகர்களுக்கு சில தடைகளை விதித்துள்ள கிரிக்கெட் சங்கம் குறித்து நெட்டிசன்கள் டுவீட்டுகளை தெறிக்கவிட்டுள்ளனர்.

    தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என்று கிரிக்கெட் சங்கம் தெரிவித்துவிட்டது. எனினும் ஐபிஎல் நடக்காத வண்ணம் போராட்டம் நடத்தப்படும் என்று அரசியல் கட்சிகளும் தமிழ் ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் செல்போன், கேமரா, இசைக் கருவிகள், தண்ணீர் பாட்டில், உணவு பண்டங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தெரிவித்துள்ள டுவிட்டர் கமென்ட்டுகளை பார்ப்போம்...

    சோறு தான்

    மனுஷன் படைச்சதிலயே
    உருப்படியான ரெண்டே விசயம்
    சோறு, கிரிக்கெட், இதுல
    ஒண்ண சொல்ல சொல்றாங்க
    சரி சொல்லிடுவோம் சோறு தான்

    மெரினாவுக்கு போய்ரலாம்

    ஆகா மொத்த போலிஸும் #ஐபிஎல் பாதுகாப்புக்கு போய்டாங்க... நாம நேரா #மெரினாக்கு போய்டவேண்டியது தான்...!

    சேப்பாக்கம் போறேன்

    என்னடா #கருமாந்திரகோலம் இது?

    #ஐபிஎல் பாக்க சேப்பாக்கம்
    போயிட்டு இருக்கேண்ணே !

    இப்படி வர

    எங்க போய்டு இப்படி வர
    #ஐபிஎல் பாத்துட்டு வரேன் "because digital cricket"

    அடியில டிங்கு.. டாங்கு

    சென்னை சேப்பாக்கம் செக்கிங்...

    என்னடா.. அடியில டிங்கு.. டாங்குனு சத்தம் கேக்குது.. வேட்டிய கலட்டுடா

    மேட்ச் முடிஞ்சதும் உட்காரலாம்

    மெரினாவுல உட்கார்ந்து போராட முடியாது. ஆனால் சேப்பாக்கத்துல உட்காரலாம். அப்ப மேட்ச் முடிஞ்சும் உட்கார்ந்து போராட்டத்தை தொடர்ந்தா என்னா பண்ணுவானுங்க?!

    English summary
    Netisans shares their comments in Twitter about opposing IPL in Tamilnadu and also they commented about restrictions imposed on IPL.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X