For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொருளாதாரத்தை உயர்த்த நிர்மலா சீதாராமன் கொடுத்த 'ஐடியா'.. பயங்கரமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு-வீடியோ

    சென்னை: வீழ்ந்து கிடக்கும் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய நிதி அமைச்சகம் ஏதாவது செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில்தான், நேற்று மாலை திடீரென செய்தியாளர்களை சந்தித்தார் அந்த துறைக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    பொருளாதாரம் மந்தம் என்றாலும், அமெரிக்கா, சீனாவைவிட வேகமாகத்தான் போய்க் கொண்டு இருக்கிறது என்று பிரஸ் மீட்டின் ஆரம்பத்திலேயே ஒரு கருத்தை சொல்லி, ஜெர்க்கடிக்க வைத்தார். அதன்பிறகு ஐடியாக்கள் என்ற பெயரில் அவர் சொன்ன பல தகவல், நெட்டிசன்களுக்கு மீம் கிரியேட் பண்ண ரொம்பவே உதவியாக மாறிய ரகம்தான்.

    பழைய கார்களை விற்று புது கார் வாங்கினால் கார் விற்பனை மந்த நிலை போய்விடும், அரசாங்கமும் புது கார்களை வாங்கப்போகிறது, அப்படியும், கார் விற்பனை பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்றெல்லாம் நிர்மலா சொல்ல சொல்ல, நிருபர்களுக்கு தலை லைட்டாக கிறுகிறுத்தது. இதோ நெட்டிசன்களும், தங்கள் பங்கிற்கு, இந்த ஐடியாக்களை வாரி சுருட்டியுள்ளனர். வாங்க பார்க்கலாம்.

    நம்ம வரிப்பணத்தில் கார் வாங்கனும்

    நிர்மலா சீதாராமன் நமது வரிப்பணத்தை பயன்படுத்தி, மேலும் ஒரு புதிய இன்னோவாவை வாங்குவார். இதனால் ஆட்டோ மொபைல் தொழிலைக் காப்பாற்றுவார்! மோடி 2.0 அரசின் சிறந்த ஜும்லா இதுவாகும். என்று கிண்டல் செய்கிறார் இந்த நெட்டிசன்.

    பாகுபலி தூக்கினால்தான் உண்டு

    இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மற்ற அனைவரையும் விட, அமெரிக்கா மற்றும் சீனாவை விடவும் அதிகமாக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இது இப்படித்தான் .😂😂 என்கிறார் இவர். அதாவது பாகுபலி வந்து தூக்கி காட்டினால்தான் உண்டு. உண்மை புள்ளி விவரம் அதுவல்ல என்பது இவர் கருத்து.

    புதிய இந்தியா

    இப்படித்தான் பணமதிப்பிழப்பை பிரதமர் மோடி அறிவித்தபோது, புதிய இந்தியா பிறந்தது என்று ரஜினிகாந்த் ட்வீட் செய்தார். அந்த திட்டத்தால் மக்கள் அவதிப்பட்டதுதான் மிச்சம். இப்போது, புது ஆட்டோமொபைல் பிறந்துவிட்டது என்று நடனமாடுவார் என கேலி செய்கிறது இந்த ட்வீட்.

    துட்டு, துட்டுங்க

    புதுசா கார் வாங்கச் சொல்லி ஐடியா கொடுக்குறீங்களே, காசு யார் கொடுப்பா என கேட்கிறது இந்த கேலி ட்வீட். காசு இல்லாமல்தான் நுகர்வு குறைந்துவிட்டது. பொருட்கள் விற்பனையாகவில்லை. ஆனால் காரை எக்சேஞ்ச் செய்யுங்கள் என நிர்மலா கூறிய ஐடியாவை பார்த்தால் இந்த சநதேகம் எல்லோருக்கும் வரத்தானே செய்யும்.

    என்ன ஒரு ஐடியா

    "ஆட்டோமொபைல் துறை வளர்ச்சியடையனும்னா பழைய கார வித்துட்டு புது கார் வாங்கனும்.. பார்லே ஜி ஓனர்: அப்படியே தின்ன பிஸ்கெட்ட வாந்தியெடுத்துட்டு வேற பிஸ்கட் வாங்கச்சொல்லுங்க மேடம்" என்று கிண்டல் செய்கிறார் இந்த நெட்டிசன். பார்லேஜி பிஸ்கெட் நிறுவனத்தின் விற்பனை குறைவால், சுமார் 10,000 பேர் வேலையிழப்பை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இப்படி கிண்டல் செய்கிறார் இவர்.

    English summary
    Netizen trolls Nirmala Sitharaman for her ideas on Economics which included new car for old cars.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X