For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயரம்.. நெல்லை தற்கொலை.. கந்துவட்டி

கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு குழந்தைகளுடன் தம்பதியர் தீக்குளித்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பரிதாபம்! கந்து வட்டியின் கோரப்பசிக்கு கருகிய உயிர்கள்-வீடியோ

    சென்னை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு குழந்தைகளுடன் தம்பதியர் தீக்குளித்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் வேதனையடந்த இசக்கிமுத்து என்பவர் நேற்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி குழந்தைகளுடன் தீக்குளித்தார்.

    இதில் இசக்கி முத்துவின் மனைவி சுப்புலட்சுமி மற்றும அவரது 2 குழந்தைகள் ஆகிய 3 பேர் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    பிணம் தின்னும் கழுகுகள்

    பிசாசுகள் ஆட்சி செய்யும் நாட்டில் பிணம் தின்னும் கழுகுகள் நாட்டாமை செய்யும்... என்கிறார் இந்த வலைஞர்

    கந்துவட்டிக்கிட்ட போராடமுடியாது

    வாழும் வரை போராடலாம் அந்த வாழ்க்கையே போராட்டமாக இருந்தாலும் போராடலாம்..ஆனா #கந்துவட்டிகிட்ட போராடவே முடியாது... என்கிறது இந்த டிவிட்

    கிடைத்து என்ன பயன்..

    வயிரெரிந்து வந்த போது வழங்காத நீதி உடல் எரிந்து உயிர் பிரிந்த பின் கிடைத்து என்ன பயன்.. என கேட்கிறார் இந்த வலைஞர்

    அனைவருக்குமே நெஞ்சு பதறும்.

    குழந்தைகள் பரிதாபம். குழந்தைகள் உள்ள அனைவருக்குமே நெஞ்சு பதறும். #கந்துவட்டி காரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்... என்கிறது இந்த டிவிட்

    மிகப்பெரும் துயரம்

    இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் துயரமாய் நான் இதை பார்க்கிறேன்.. என்கிறார் இந்த வலைஞர்

    ஜனநாயக படுகொலை

    நெல்லையில் ஏற்பட்டது தற்கொலை முயற்சி அல்ல ஜனநாயக படுகொலை....என்கிறது இந்த டிவிட்

    English summary
    Netizens condemns collector and police for family Suicide commit in Nellai. People sharing their views on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X