For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேப்பாக்கத்துல இப்படியும் போராட்டம் நடத்தலாம் பாஸ்.. நெட்டிசன்களின் அடேங்கப்பா யோசனைகள்

சென்னை மைதானத்தில் எப்படி எல்லாம் போராட்டம் நடத்தலாம் என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் வித்தியாசமான ஐடியாக்கள் கொடுத்துள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சேப்பாக்கத்தில் இப்படியும் போராடலாம் பாஸ்- வீடியோ

    சென்னை: சென்னை மைதானத்தில் எப்படி எல்லாம் போராட்டம் நடத்தலாம் என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் வித்தியாசமான ஐடியாக்கள் கொடுத்துள்ளனர்.

    ஒரு ஐபிஎல் போட்டி சென்னை மைதானத்தில் முதல்முறையாக இவ்வளவு பாதுகாப்போடு இப்போதுதான் நடக்க உள்ளது. சென்னை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடக்கிறது.

    காவிரி பிரச்சனை நடக்கும் போது ஐபிஎல் தேவையா என்று மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். இதனால் தற்போது சேப்பாக்கம் மைதானம் பக்கத்தில் பெரிய பாதுக்காப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எப்படி எல்லாம் பாதுகாப்பு

    எப்படி எல்லாம் பாதுகாப்பு

    இந்த போட்டியை காண வரும் மக்கள் கருப்பு உடை அணிய கூடாது, செல்போன் எடுத்து செல்ல கூடாது, வாட்டர் கேன் கொண்டு செல்ல கூடாது, பெயிண்ட், பிளக்ஸ் பேனர் கொண்டு செல்ல கூடாது என்று நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் உள்ளே சென்ற பின் போராட்டம் செய்ய கூடாது என்பதற்காக இப்படி சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. இது இல்லாமல் எப்படி எல்லாம் போராட்டம் செய்யலாம் என்று மக்கள் ஐடியா கொடுத்துள்ளனர்.

    பலூன் போராட்டம்

    தற்போது சேப்பாக்கம் மைதானத்திற்கு பக்கத்தில் பலூன் பறக்க விடலாம் என்று ஐடியா கொடுத்துள்ளனர். அதில் ஐபிஎல் போட்டி எதிராக வாசகம் எழுதி மைதானத்திற்குள் செலுத்தலாம், என்று கூறியுள்ளனர். தமிழக வாழ்வுரிமை கட்சி தற்போது அதை நடைமுறைப்படுத்தவும் தொடங்கிவிட்டது.

    சிக்ஸ் அடிப்பது

    அதேபோல் சிக்ஸ் அடிக்கும் போது எல்லோரும் சேர்ந்து காவிரி காவிரி என்று கத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எந்த கிரிக்கெட் வீரர் பெயரையும் சொல்லாமல் காவிரி என்று மட்டும்தான் கத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது பெரிய கவன ஈர்ப்பாக இருக்கும் என்றுள்ளனர். பந்திலேயே வாசகம் எழுதலாம் என்றும் கூறியுள்ளனர்.

    டார்ச்

    டார்ச்

    மேலும் தற்போது உள்ளே செல்போன் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் 8 மணிக்கு இரவாகிவிடும் என்பதால், போன் டார்ச் அடித்து போராட்டம் செய்யலாம் என்று ஐடியா கொடுத்துள்ளனர். மெரினா போராட்டம் போலவே இதிலும் செய்யலாம் என்று கூறியுள்ளனர்.

    பந்து

    மேலும் புதிய ஒரு வித்தியாசமான ஐடியாவும் கொடுத்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு முறை சிக்ஸ் அடித்து அது மக்கள் பக்கம் செல்லும் போதும் மக்கள் பந்தை எடுத்து வைத்துவிட்டு கொடுக்க கூடாது என்று கூறியுள்ளனர். இதனால் போட்டி ஒவ்வொரு முறையும் தாமதமாகும், போராட்டம் கவனம் பெறும் என்கிறார்கள்.

    ஆடை

    ஆடை

    அங்கு கருப்பு ஆடையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெள்ளை , மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து சென்றுவிட்டு, உள்ளே மார்க்கரில் காவிரி பற்றி வாசகம் எழுதி போராடலாம், இல்லையென்றால் ஆண்கள் உள்ளே டி சர்ட்டில் ஏற்கனவே வாசகம் எழுதிவிட்டு உள்ளே வரலாம் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    மெரினா போராட்டம் பாஸ்

    மெரினா போராட்டம் பாஸ்

    முக்கியாமாக கடைசியாக ஒரு வேறு ஒரு பெரிய ஐடியா கொடுத்து சமூக வலைத்தளத்தயே கலங்கடித்துள்ளனர். அதன்படி சேப்பாக்கம் மைதானத்தில் 4000 போலீஸ் வரை இருப்பதால் மெரினாவில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று கூறுகின்றனர். இதை பயன்படுத்தி மெரினாவில் போராட வாருங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    English summary
    Netizens gave unique ideas to protest in IPL match in Chennai Chepauk after certain security issues.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X