For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்பிடல் ஓனரெல்லாம் சட்ட ஒழுங்கு பிரச்சனைய யோசிக்கராரு..!

சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காகவே ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மையை சொல்லவில்லை என அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியதை மரண கலாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காகவே ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மையை சொல்லவில்லை என அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியதை மரண கலாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.

அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிராதப் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில்தான் அனுமதிக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.

மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனைக்காகவும், மக்கள் அச்சப்படக்கூடாது என்பதற்காகவும் உண்மையை மறைத்து காய்ச்சல் என அறிக்கை விட்டதாகவும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து அவரை சமூகவலைதளங்களில் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர் வலைஞர்கள்.

அண்ட புளுகையா?

ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் - அப்பல்லோ பிரதாப் ரெட்டி.
அப்ப ஜெ இட்லி சாப்பிட்டார்னு சொன்னதெல்லாம் அண்ட புளுகையா??

அதையும் சொல்லுங்க..

"ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்# பிரதாப் ரெட்டி#ஆபத்தான நிலைக்கு காரணம் என்ன அதையும் சொல்லுங்க

6 மணி இருக்கும் மொமன்ட்

ஆபத்தான நிலையிலேயே அனுமதிக்கப்பட்டதாக அப்பல்லோ பிரதாப் ரெட்டி(அன்னைக்கு காத்தால ஆறு மணி இருக்கும் மொமன்ட்)

காய்ச்சலுன்னு தானே சொன்னீரு..

"ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்- அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி.
ரெட்டிகாரு,...
ஆபத்தான நிலையா.....
என்னய்யா சொல்லுற....
வெறும் காய்ச்சலுன்னு தானே சொன்னீரு.

கமிஷனர் ட்ரீட்மென்ட் கொடுத்தாரா?

சட்டம்- ஒழுங்கு பிரச்னை வரக்கூடாது என்பதால் தான் ஜெயலலிதாவின் உண்மை நிலையை அறிக்கையில் குறிப்பிடவில்லை - பிரதாப் ரெட்டி
பார்ரா தமிழ்நாட்டோட நிலமைய..! ஆஸ்பிடல் ஓனரெல்லாம் சட்ட ஒழுங்கு பிரச்சனைய யோசிக்கராரு..! அப்போ கமிஷனர் ட்ரீட்மென்ட் கொடுத்தாரா...??

English summary
Netizens making fun of Apollo pradhap reddy for hiding truth abouth Jayalalitha health and treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X